பாத்ரூமில் செய்யப்படும் அழகிய இன்டீரியர் டிசைன் ஐடியாஸ்!

Interior design ideas for bathroom
Interior design ideas for bathroomImage Credits: Home Designing
Published on

பெரும்பாலான மக்கள் வீட்டில் ரிலாக்சாக இருக்கக்கூடிய இடம் என்று சொன்னால், அது பாத்ரூம்தான். நிறைய பேருக்கு குளிக்கும்போது பாத்ரூமில்தான் புதுபுது யோசனைகள் தோன்றுவதுண்டு. அதனாலேயே அங்கு அதிக நேரம் செலவழிப்பதுண்டு. அத்தகைய பாத்ரூமை அழகாக மாற்றுவது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.

Cabinet: நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை குப்பை போல வைத்திருக்காமல் கேப்பினேட்டில் அடுக்கி வைப்பது சிறந்தது அல்லது பேஸ்கெட், கன்டெயினர் போன்றவற்றை பயன்படுத்தலாம். அதில் அன்றாடம் பயன்படுத்தும் சன்ஸ் கிரீன், லோஷன்,  சோப் போன்றவற்றை சேமித்து வைத்துக்கொள்வது பாத்ரூமை சுத்தமாக வைத்திருக்க உதவும்.

Lights: வழக்கமாகப் பயன்படுத்தும் பல்ப் மற்றும் ட்யூப்லைட்டை பயன்படுத்தாமல் அதற்கு பதில் Recessed ceiling lights பயன்படுத்துவது தற்போது பிரபலமாக உள்ளது. ஏனெனில், அது பார்ப்பதற்கு மார்டன் லுக் தருவது மட்டுமல்லாமல், ஒளியையும் அறை முழுவதும் சீராகப் பரப்புகிறது. இதுபோன்ற விளக்குகளை ஒளியை நம்முடைய மூடுக்கு ஏற்றவாறு குறைத்தும், அதிகரித்தும் வைத்துக்கொள்ள முடியும் என்பதே இதன் சிறப்பு.

Water heater: வழக்கமாகப் பயன்படுத்தும் வாட்டர் ஹீட்டரை தவிர்த்துவிட்டு, தற்போது புதிதாக வந்திருக்கும் பார்ப்பதற்கு ஸ்டைலிஷாக இருக்கும் டிஜிட்டல் வாட்டர் ஹீட்டர்களை வாங்கி பயன்படுத்தலாம். இது சரியான வெப்பத்தை வைத்து, நமக்கு ஏற்றவாறு தண்ணீரின் சூட்டை வைத்து குளிப்பதற்கு பயன்படும். அப்படி இந்த வாட்டர் ஹீட்டர் பாத்ரூமில் இருப்பது அடைத்து கொண்டிருப்பது போல தோன்றினால் Fake ceiling பயன்படுத்தி வாட்டர் ஹீட்டரை மறைத்து வைத்துவிடலாம்.

Showers: இன்னும் எத்தனை நாள்தான் பழைய போரிங்கான ஷவரை பயன்படுத்திக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? தற்போது மார்டனாக மற்றும் ஸ்டைலிஷ்ஷாக இருக்கும் ஷவர்கள் பல வந்துவிட்டன. உதாரணத்திற்கு ஷவரை Ceiling இருந்து ஊற்றுவது போல அமைப்பது அழகாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வேற லெவல் டேஸ்டில் மங்களூர் பாசிப்பருப்பு தோவ்-பனை வெல்லம் பாயசம் செய்யலாம் வாங்க!
Interior design ideas for bathroom

Shower curtains and bathroom fixtures: Shower curtains பயன்படுத்துவதை விடுத்து அறையை பிரித்துக் காட்டுவதற்கு கண்ணாடியை பயன்படுத்துவது அழகியலைக் கூட்டும். பழைய Bathroom fixturesஐ பயன்படுத்தாமல் புதிதாக வந்திருக்கும் மார்டனான மற்றும் ஸ்டைலிஸ்ஸான Bathroom fixtures பயன்படுத்துவது மேலும் பாத்ரூமை ஆடம்பரமாகக் காட்டும்.

பாத்ரூமை அழகாக மற்றும் குளிர்ச்சியாகக் காட்டுவதற்கு செடிகளை வைக்கலாம், கண்ணாடிகளை விதவிதமான டிசைன்களில் அமைப்பது பாத்ரூமின் லுக்கை மாற்றியமைக்கும். பாத்ரூம் சுவற்றில் White, cream, grey போன்ற நிறங்களை பயன்படுத்தவும். மினிமலிஸ்ட் மற்றும் ஸ்டைலிஷ் பாத்ரூம் வேண்டும் என்று விரும்புபவர்கள் வெள்ளை நிறத்தை மட்டுமே பயன்படுத்தவும். உங்கள் வீட்டிலும் பாத்ரூமை மாற்றியமைக்கும்போது இந்த சின்ன மாற்றங்களைச் செய்யுங்கள் மிகவும் ஆடம்பரமாகத் தெரியும். முயற்சித்துப் பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com