அடடே! பசங்க பொய் சொல்றாங்களா? இந்த உண்மை தெரிஞ்சா நீங்க அசந்துடுவீங்க!

Lie
Lie
Published on

பொய் சொல்றதுங்கிறது பசங்க வளரும்போது சகஜமான விஷயம் தான். மனோதத்துவ நிபுணர்கள்லாம் இத ரொம்ப இயற்கையானதுன்னு சொல்றாங்க. ஏன்னா, குழந்தைங்க பெரும்பாலும் அவங்க கற்பனை உலகத்துலேயே வாழ்றாங்க. அவங்க வாழ்க்கையில என்ன பாக்குறாங்களோ, விரும்புறாங்களோ, நினைக்கிறாங்களோ அதை வச்சு கதை கட்டுவாங்க. அது சில நேரம் பொய்யா கூட இருக்கலாம்.

ஆனா குழந்தைங்க சொல்ற எல்லா பொய்யும் அப்பாவியானதா இருக்காதுன்னு நீங்க தெரிஞ்சுக்கணும். ஒவ்வொரு பொய்க்குப் பின்னாலயும் ஒரு காரணம் இருக்கும். குழந்தைங்க முக்கியமா ரெண்டு விதமான பொய் சொல்லுவாங்க.

1. கற்பனை பொய்கள்:

 பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத, தீங்கு இல்லாத பொய்கள் தான் கற்பனை பொய்கள். குழந்தைங்களுக்குன்னு ஒரு தனி கற்பனை உலகம் இருக்கு. கதை சொல்றது அவங்களுக்கு ஒரு விளையாட்டு மாதிரி. இது அவங்களோட படைப்பாற்றல் திறனையும், கனவுகளை விவரிக்கிற திறனையும் வளர்க்கும். உதாரணத்துக்கு உங்க பையன் நேத்து ராத்திரி அவன் கனவுல ஒரு தீவுக்கு பறந்து போனதா அவன் பிரண்ட்ஸ்கிட்ட சொன்னான்னா, அது முழுக்க முழுக்க அவனோட கற்பனைதான். இந்த மாதிரி பொய்களை நீங்க சரியா ஹேண்டில் பண்ணா அவங்ககிட்ட சுயபரிசோதனை திறமையை வளர்க்கலாம்.

உங்க குழந்தை இந்த மாதிரி பொய் சொல்றத நீங்க கேட்டா உடனே அவங்கள பொய்யாளின்னு திட்டவோ இல்ல தண்டிக்கவோ கூடாது. அதுக்கு பதிலா நீங்க நிறுத்திட்டு, "உன் கற்பனை சூப்பரா இருக்கு"ன்னு சொல்லிட்டு, மிச்சம் என்னன்னு கேட்டு அவங்களோட கற்பனையை வெளிப்படுத்தவும், விவரிக்கவும் ஊக்கப்படுத்தணும்.

2. தப்பிக்கிறதுக்கான பொய்கள்:

குழந்தைங்க ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையணும்னு, இல்ல ஒரு பிரச்சனையில இருந்து தப்பிக்கணும்னு நினைச்சு சொல்ற பொய் இது. இத கண்டிப்பா ஊக்கப்படுத்தக் கூடாது. இந்த மாதிரி பொய்களுக்கு பின்னால இருக்கிற நோக்கத்தை நீங்க புரிஞ்சுக்காம விட்டா, குழந்தைங்க தொடர்ந்து பொய் சொல்லவும், அதுக்கேத்த மாதிரி நடந்துக்கவும் நிறைய வாய்ப்பிருக்கு. இந்த மாதிரி நேரத்துல நீங்க குழந்தைகளை கோபப்படவோ இல்ல தண்டிக்கவோ தேவையில்ல. அவங்கள நல்லா தெரிஞ்சுக்கிட்டு விஷயத்த புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. அவங்ககிட்ட ஓப்பனா பேசுங்க.

இத எப்படி சமாளிக்கிறது?

குழந்தைங்க ஏன் பொய் சொல்றாங்கன்னு முதல்ல புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க. அவங்ககிட்ட நிறைய கேள்விகள் கேளுங்க. ஓப்பனா பேசறது மூலமா அவங்க தேவைகளையும், விருப்பங்களையும் புரிஞ்சுக்கோங்க. குழந்தைங்க தான் குற்றம் சாட்டப்பட மாட்டோம்னும், நம்ம கவலைகள மத்தவங்க கேப்பாங்கன்னும் நம்பணும். அது மட்டும் இல்லாம, பொய் சொல்றதுனால என்னென்ன கெடுதல் வரும்னு அவங்களுக்கு புரியுற மாதிரி எடுத்து சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
உண்மை யாருக்கும் அஞ்சாது. நேர்மை யாருக்கும் அடங்காது!
Lie

வாழ்க்கையில ஜெயிச்ச நேர்மையான மனுஷங்களோட கதைகள அவங்ககிட்ட ஷேர் பண்ணுங்க. அன்பு, நம்பிக்கை இருக்கிற சூழ்நிலையை உருவாக்குனீங்கன்னா, குழந்தைங்க உண்மைய பேச தைரியம் வரும். பெற்றோரா நீங்க உங்க குழந்தைங்க சொல்றத கேட்க தினமும் குறைஞ்சது ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்க. குழந்தைங்க உங்களோட முழு சுதந்திரத்தோட பேசட்டும்.

இதையும் படியுங்கள்:
தனிப்பட்ட வாழ்க்கைதான் நிம்மதியான வாழ்க்கை என்பதற்கான 5 காரணங்கள்!
Lie

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com