நட்புன்னா என்னன்னு தெரியுமா? நண்பர்களை கவனமாகத் தேர்வு செய்யுங்கள்! 

 Choose your friends carefully.
Choose your friends carefully.

நட்பு என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படையான உறவாகும். இவ்வுலகில் எல்லா மனிதர்களுக்கும் நண்பர்கள் என்று யாரோ ஒருவர் நிச்சயம் இருப்பார்கள். நட்புதான் நம்முடைய வாழ்வில் சில விஷயங்களை வடிவமைக்க உதவுகிறது. சில மோசமான தருணங்களில் நமக்கு உதவுவதும் நட்புதான். எனவே நட்பின் மதிப்பு ஒவ்வொருவரது வாழ்விலும் இன்றியமையாதது என்றுதான் சொல்ல வேண்டும். 

உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்” என்ற பிரபலமான மேற்கோள் ஒன்று உள்ளது. அந்த அளவுக்கு நம்முடைய குணாதிசயங்கள் அனைத்தையும் நட்பே தீர்மானிக்கிறது எனலாம். எனவே நமது வாழ்வில் நண்பர்களை தேர்வு செய்யும் போது கவனமாகவும் நிதானமாகவும் தேர்வு செய்ய வேண்டும். ஏனெனில் கூடா நட்பு கேடாய் முடியும் வாய்ப்புள்ளது.

இன்றைய காலத்தில் நட்பின் தரத்தை விட ஒருவருக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது முதன்மையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த அணுகுமுறை முற்றிலும் தவறானது. ஒருவருக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. ஒரு நண்பன் இருந்தாலும், அவன் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறான் என்பதே முக்கியம். எனவே நட்பில் எண்ணிக்கையை விட தரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

நட்பு என்பது, ஏதோ நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இருக்கக் கூடாது. அதில் ஒரு ஆழமும் அர்த்தமும் இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்த்து ஒருவரிடம் நண்பர்களாகப் பழகாதீர்கள். ஆபத்தான காலத்தில் உங்களுக்கு உறுதுணையாக உண்மையாகவே இருக்கும் நண்பர்களை கொண்டிருப்பது மிகவும் மதிப்பு மிக்கது. 

நட்பு என்கிற பெயரைச் சொல்லிக் கொண்டு, மேலோட்டமாக ஒருவரிடம் பழகுவது அவரை ஏமாற்றுவதற்கு சமம். இத்தகைய நட்பு தற்காலிக மகிழ்ச்சியை அளித்தாலும், இக்கட்டான தருணங்களில் உங்களுடன் யாரும் இல்லாத நிலையை ஏற்படுத்திவிடும். எனவே இதுபோன்ற மோசமான நட்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

இதையும் படியுங்கள்:
மீனால் பறிபோன உயிர்.. நண்பர் கொடுத்த கிஃப்டால் விபரீதம்!
 Choose your friends carefully.

நண்பர்களைத் தேர்வு செய்யும்போது கவனமாக இருங்கள். இதுதான் உங்கள் வாழ்வில் பல விஷயங்களைத் தீர்மானிக்கிறது. உங்கள் நண்பர்களே உங்களுக்கான நல்லது கெட்டதை சொல்லிக் கொடுப்பார்கள் என்பதால், அவர்களை சரியாகத் தேர்வு செய்வதால், நல்ல நிலையை நீங்கள் அடைய முடியும்.

எந்த ஒரு உறவாக இருந்தாலும் அதற்கு நம்பிக்கையே அடித்தளம். இது நட்பிற்கும் பொருந்தும். நண்பர்களுக்கு மத்தியில் நீடித்த பிணைப்புகளை வளர்க்க, பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை இருக்க வேண்டியது அவசியம். இது நட்பை சிறப்பானதாக உணர வைக்கும். 

எனவே நட்பு என்பதை சாதாரணமாக நினைக்காமல், உங்கள் வாழ்வில் மிக முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு எப்படி சிந்திப்பீர்களோ, அதேபோல நண்பர்களை தேர்வு செய்யும்போதும் சரியான முடிவை எடுக்க வேண்டியது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com