பாத்திரம் கழுவும் சோப்பை வைத்து இந்த 8 பொருட்களை ஒருபோதும் சுத்தம் செய்யாதீர்கள்!

Cleaning Tips With Soap Oil
Cleaning Tips With Soap Oil
Published on

மது வீடுகளில் உள்ள சமையலறைகளில் பாத்திரம் தேய்க்கும் சோப்பு அல்லது லிக்விட் கட்டாயம் இருக்கும். எண்ணெய் பிசுக்கோடு இருக்கும் பாத்திரங்களை பளபளப்பாக மாற்றுவதில் இதற்கு நிகர் இதுதான். இந்த அதிரடியான பவரைப் பார்த்துவிட்டு, நம்மில் பலர் வீட்டின் மற்ற பொருட்களையும் இதை வைத்தே சுலபமாக சுத்தம் செய்துவிடலாம் என மிகச் சாதாரணமாக நினைப்பார்கள். 

ஆனால் அது ஒரு மிகப்பெரிய தவறு. பாத்திரங்களில் உள்ள கடுமையான அழுக்கை நீக்க இதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள், வீட்டின் மற்ற சில விலையுயர்ந்த பொருட்களை நிரந்தரமாக நாசமாக்கிவிடும் தன்மை கொண்டவை. அப்படி எந்தெந்தப் பொருட்களின் அருகில் இந்த பாத்திரம் கழுவும் சோப்பைக் கொண்டு செல்லக் கூடாது என்பதை இப்போது பார்ப்போம்.

1. விலைமதிப்பற்ற கார்: காரின் வெளிப்புறம் அழகாக மின்ன வேண்டும் என்பதற்காக அதன் மீது ஒரு மெழுகு போன்ற பாதுகாப்பு படலம் பூசப்பட்டிருக்கும். பாத்திரம் கழுவும் சோப்பைக் கொண்டு காரைக் கழுவினால், அந்தப் பாதுகாப்பு அடுக்கு முற்றிலுமாகக் கரைந்துவிடும். இதனால் நாள்பட காரின் பெயிண்ட் மங்கிப்போய் கீறல்கள் விழத் தொடங்கிவிடும். காரைக் கழுவ அதற்கான ஷாம்புவை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

2. லெதர் பொருட்கள்: தோல் பொருட்களுக்கு எப்போதுமே ஒரு இயற்கையான எண்ணெய் பசை தேவை. இந்த சோப்பைப் பயன்படுத்தினால், அந்த எண்ணெய் முழுமையாக உறிஞ்சப்பட்டு தோல் பொருட்கள் ரொம்பவே வறண்டுபோய் வெடிப்புகள் விட ஆரம்பித்துவிடும். இதற்கு பிரத்யேக லெதர் கிளீனர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

3. பளபளப்பற்ற சுவர்கள்: வீட்டின் சுவர்களில் உள்ள கறைகளைப் போக்க இந்த லிக்விடைப் பயன்படுத்தினால், அது சுவரில் உள்ள பெயிண்டை உரித்து தேவையற்ற அசிங்கமான கோடுகளை உருவாக்கிவிடும். சுவர்களைத் துடைக்க வெறும் தண்ணீரில் நனைத்த மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்துவதே மிகவும் பாதுகாப்பானது.

4. வாஷிங் மெஷின்: வாஷிங் மெஷினில் துணிகளைத் துவைக்க ஒருபோதும் இதைப் பயன்படுத்தக் கூடாது. இது துணிகளில் ஒட்டிக்கொண்டு சருமப் பிரச்னைகளை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல், இது உருவாக்கும் அதிகப்படியான நுரை மெஷினின் பம்புகளைக் கடுமையாகப் பாதித்து வாஷிங் மெஷினை முற்றிலுமாக ரிப்பேர் ஆக்கிவிடும்.

இதையும் படியுங்கள்:
நம் வீட்டை சுகாதாரமான முறையில் பாதுகாக்கும் வினிகரின் பயன்கள்!
Cleaning Tips With Soap Oil

5. டிஷ்வாஷர் இயந்திரம்: டிஷ்வாஷர் இயந்திரத்தில் அதற்கான பிரத்யேக லிக்விட் தீர்ந்துவிட்டால், அதற்குப் பதிலாக சாதாரண பாத்திரம் தேய்க்கும் லிக்விடை ஊற்றுவது பெரும் ஆபத்து. இது இயந்திரத்திற்குள் கட்டுக்கடங்காத நுரையை உருவாக்கி, மிஷினுக்கு வெளியே வழியச் செய்து உங்கள் சமையலறையையே ஒரு நுரைக் காடாக மாற்றிவிடும்.

6. பட்டுத் துணிகள்: பட்டுப் புடவைகள் மற்றும் துணிகள் மிகவும் மென்மையானவை. இந்த கடினமான சோப்பு ரசாயனங்கள் பட்டுத் துணிகளின் இழைகளை நாசமாக்கிவிடும். பட்டுத் துணிகளுக்கு பேபி ஷாம்பு அல்லது மிதமான சோப்புகளைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.

7. மரத்தால் ஆன தரைகள்: மரத்தரை மற்றும் மரச்சாமான்கள் மீதுள்ள வார்னிஷ் அல்லது ஆயில் கோட்டிங்கை இந்த சோப்பு எளிதாக நீக்கிவிடும். இதனால் மரம் சீக்கிரமே வறண்டு போய், கீறல்கள் விழுந்து அதன் பளபளப்பை முழுமையாக இழந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
காபி பிரியரா நீங்கள்? உங்கள் பர்ஸை பதம் பார்க்கும் அந்த ஒரு கப் காபி - ஓர் அதிரடி அலசல்!
Cleaning Tips With Soap Oil

8. காபி மேக்கர் இயந்திரம்: காபி மேக்கரின் உட்பகுதியைச் சுத்தம் செய்ய சோப்புத் தண்ணீரை ஊற்றி ஓடவிட்டால், உள்ளே முழுவதும் நுரை அடைத்துக்கொண்டு இயந்திரம் வீணாகிவிடும். அதற்குப் பதிலாக வினிகர் மற்றும் தண்ணீர் கலந்து சுத்தம் செய்வதே சரியான மற்றும் பாதுகாப்பான முறையாகும்.

இனிமேல் எந்தப் பொருளைச் சுத்தம் செய்வதாக இருந்தாலும், அதற்கென பிரத்யேகமாக விற்கப்படும் சரியான கிளீனர்களை மட்டுமே பயன்படுத்துங்கள். இதுவே உங்கள் பொருட்களின் ஆயுளை நீட்டிக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com