
நம் இல்லங்களில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காகவும், வீடுகளில் பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்பதற்காகவும் மணி பிளான்ட் செடிகளை வளர்த்து வருகிறோம்.
செல்வத்தின் கடவுளான லட்சுமிதேவி எப்போதும் நம் வீடுகளில் இருக்க வேண்டும் என்பதற்காக நாம் பல வகையான முயற்சிகளை செய்து வருகிறோம். நாம் என்னென்ன வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு பண்டைய காலத்தில் சீன புவிசார் நாட்காட்டியான ஃபெங் சூய் கூறிய எளிய வழிகள் இது.
நம் இல்லங்களில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காகவும், வீடுகளில் பொருளாதார பிரச்சினைகள் நீங்க வேண்டும் என்பதற்காகவும், மணி பிளான்ட் செடிகளை வாங்கி வளர்த்து வருவோம். இந்நிலையில் வீட்டில் உள்ள நிதி நெருக்கடியை விரட்ட காயின் பிளான்ட் செடிகளை வளர்க்கலாம் என்று ஃபெங் சூய் கூறுகிறது. காயின் பிளான்ட் செடிகள் கேட் செடிகள் அல்லது க்ரசூலா ஓவடா எனவும் அழைப்படுகின்றன.
காயின் பிளான்ட் :
காயின் பிளான்ட் செடி வீட்டில் வளர்த்தால் செல்வம் மற்றும் வளம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறது என்று சீனாவில் ஆய்வு கூறுகிறது. வீட்டில் காயின் செடி இருந்தால் வீட்டைச் சுற்றிலும் பணமும் செல்வமும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் காயின் செடி இருந்தால் ஒருவரின் கடன் சுமை நீங்கும் எனவும் ரொம்பப்படுகிறது.
வளர்ப்பதன் பலன்கள் :
காயின் செடிகள் இல்லத்தில் மகிழ்ச்சியையும், வளத்தையும் மற்றும் நேர்மறையான அதிர்வுகளையும் வழங்கக் கூடியது. ஆகவே நமது வீட்டில் காயின் செடிகள் இருந்தால் வீட்டில் செல்வம் செழிக்கும் அதிகரிக்கும்.
காயின் செடி ஒரு காந்தத்தை போல செயல்படுகிறது. இந்த செடியானது நமது வீடுகளில் இருந்தால் நமது பண வரவானது சில நாட்களிலேயே நான்கு மடங்கு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
நமது வீட்டின் வாசலில் காயின் செடியை வைத்தால் நமது வீட்டில் இருக்கும் ஏழ்மை நிலையானது கண்டிப்பாக நீங்கிவிடும் என்று நம்பப்படுகிறது.
காயின் செடியை நம்வீட்டில் உள் பகுதியில் வட கிழக்கு திசையில் வைக்க வேண்டும். வட கிழக்கு திசையானது அமைதி மற்றும் வளர்ச்சியை கொண்டு வரும்.
தொழில் செய்யும் இடங்கள் அல்லது புதிய கடைகளில் இச்செடியை வைக்க விரும்பினால் தலைவாசல் பகுதியிலோ, தென் கிழக்கு திசையில வைக்க வேண்டும். அப்போது நமக்கு அமைதி, வளர்ச்சி, செல்வாக்கு ஆகியவற்றை கொடுக்கும்.
ஆனால் நமது படுக்கை அறையில் காயின் செடிகளை வைக்கக்கூடாது. வைத்தால் அது மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். சச்சரவை உண்டு பண்ணும்.
காயின் செடிகளை வளர்ப்பது மிகவும் எளிது. இச்செடியை ஒரு பானையிலோ அல்லது தொட்டியில் அல்லது தரையிலும் வைக்கலாம். இந்த செடியானது சூரிய ஒளி மற்றும் நிழலிலும் நன்றாக வளரும்.