
நாம் துணிகளை துவைப்பதற்கு முன்பு ஒரு வாளியில் தண்ணீரை ஊற்றி சலவைத் தூளை சேர்த்து, அந்த தண்ணீரில் வீட்டில் உள்ள எல்லோருடைய துணிகளையும் போட்டு ஊற வைப்பது வழக்கம். ஆனால் ஒரு சில நேரங்களில் வெள்ளை துணிகளை கலர் துணிகளோடு சேர்த்து ஊறவைக்கும் போது, கலர் துணியின் நிறங்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் நிறப் பிரிகை அடைந்து தண்ணீரில் கலக்கின்றன. இதனால் தண்ணீரானது எடுத்துக்காட்டாக, சிவப்பாகவோ அல்லது பச்சையாகவோ மாறுகின்றன. இதனால் வெள்ளை சட்டையிலும் சிவப்பு நிறச் சாயம் ஒட்டிக் கொள்கின்றன. எனவே இந்த வெள்ளை சட்டையில் ஒட்டிய சாயங்களை எப்படி போக்குவது என்பதை நாம் இக்கட்டுறையில் பார்ப்போம்.
ஒரு வாளியில் சாயம் பட்ட சட்டைகள் முங்கும் அளவிற்கு தண்ணீரை எடுத்துக் கொண்டு, அந்தத் தண்ணீரில் ஒரு மூடி வினிகர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து விட்ட பின் சாயம் பட்ட சட்டையை ஒரு அரை மணி நேரம் அந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அந்தத் துணியை எடுத்து நன்கு சோப்பு போட்டு கையாலே தேய்க்க வேண்டும். தேவைப்பட்டால் பிரஸ் கொண்டும் தேய்க்கலாம். பின் தண்ணீரில் முக்கி நன்கு பிழிந்து வெயிலில் காயப் போட வேண்டும்.
வாளியில் கால் பாகம் தண்ணீர் ஊற்றி,தேவைக்கேற்ப சலவை பவுடர் சேர்த்து, அதனுடன் ஒரு மூடி வினிகர் சேர்க்க வேண்டும். நல்லா நுரை வர அளவுக்கு மிக்ஸ் பண்ணி விடுங்க. சாயம் பிடித்த சட்டையை இதில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறினதும் அதுக்கப்புறம் துவைக்கலாம். துவைக்கும்போது எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பிரஷ்(கவனமாக பிரஷ் செய்ய வேண்டும்) போட்டு கையில அடிச்சு நல்லா துவைங்க. அப்பதான் இந்த சாயம் எல்லாம் போகும். சட்டையில ஒட்டின சாயம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா போகும்.
மிதமான சாயம் பட்டால் ஒரு பாத்திரத்தில் சட்டை முங்கும் அளவிற்கு தண்ணீர் எடுத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதில் சாயம் பட்ட சட்டையை போட்டு 4 முதல் 5 நிமிடங்கள் அப்படியே கொதிக்க விட வேண்டும். பின் ujala சேர்த்த அல்லது சாதாரண நீரில் முக்கி நன்கு பிழிந்து துணியை காயப்போட வேண்டும்.
நன்கு கொதிக்கும் நீரில் மூன்று அல்லது நான்கு ஸ்பூன் கல் உப்பு, தேவைக்கு ஏற்ப சலவைத்தூள், ஒரு மூடி வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு அந்த தண்ணீரில் சாயம் பட்ட துணிகளை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் நன்கு சோப்பு போட்டு தேய்த்து துவைக்க வேண்டும்.
வெள்ளைத்துணிகளில் சாயம் படுவதை எப்படி தவிர்க்க வேண்டும்?
புதிய துணியை நாம் பயன்படுத்திவிட்டு பின் தனியே ஊற வைத்து சாயம் போகிறதா என்பதை பார்க்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் வெள்ளை துணிகளை கலர் துணிகளோடு ஊற வைப்பதை தவிர்க்க வேண்டும்.
வெள்ளைத்துணிகளை வாஷிங் மிஷினில் எல்லா துணிகளோடு ஒன்றாக போடக்கூடாது.