
நிறங்களுக்கும் நம் மனநலனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நிறங்களுக்கு நம் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இத்தகைய நிறத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுவது தான் கலர் தெரபியாகும். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
சிவப்பு நிறத்தை பயன்படுத்தும் போது அது நம்முடைய ஆற்றலை தூண்டுகிறது. எனவே, ஜிம்முக்கு செல்பவர்கள் சிவப்பு நிற டவல், ஷூ, வாட்டர் பாட்டில், உடை போன்றவற்றை பயன்படுத்துவது நன்றாக செயல்பட உதவும்.
நீல நிறத்தில் இரவு விளக்கை பயன்படுத்துவது தூக்கத்தை தூண்டும். நீல நிறம் நம் மனதை அமைதியாக்க வைக்க உதவுகிறது. ஏதாவது காரியத்தில் கவனம் செலுத்துவதற்கு முன் நீல நிறத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது. இது நம்மை கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளும். நம்முடைய சிந்தனை திறனை மேம்படுத்தும்.
மஞ்சள் நிறம் நம்முடைய மனதிலையை மேம்படுத்தி நல்ல கூர்ந்து கவனிக்க உதவுகிறது. எனவே, பிள்ளைகள் படிக்கும் இடத்தில் மஞ்சள் நிறத்தில் பொருட்களை வைப்பது நல்ல கவனிக்கும் ஆற்றலை உருவாக்கும்.
தன்னம்பிக்கை இழந்து சோர்ந்து போய் இருப்பவர்களை கருப்பு மற்றும் சிவப்பு நிறம் ஆசுவாசப்படுத்தும். அந்த சோகத்தில் இருந்து மீள வைத்து உற்சாகமான மனநிலைக்கு இட்டுச் செல்லும்.
உங்களுடைய விருப்பமான வேலைக்கான நேர்க்காணலுக்கு செல்லும் போது கருப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை அணிந்து செல்லலாம். இந்த நிறங்கள் நம்பிக்கையுடன் தொடர்புடையவை. மனநிலையில் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நிறம் மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்கக்குடியது. பெண்கள் ஆரஞ்ச் நிறத்தில் தங்கள் துணி அலமாரிகளை அலங்கரிக்கலாம். அந்த நிற உடைகளை அதில் இடம் பெற செய்யலாம். சுபநிகழ்ச்சிகளுக்கு வீட்டை அலங்கரிக்கும் போது ஆரஞ்ச் நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த நிறம் அனைவரின் கவனத்தையும் சட்டென்று ஈர்த்து உற்சாகத்தை அதிகப்படுத்தும்.