இரவு தூங்குவதற்கு முன் உணவுகள் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என்று சொல்வதுண்டு. இரவு நேரத்தில் உடலில் உள்ள மெட்டபாலிசம் மெதுவாக வேலை செய்வதால் கலோரிகளை எரிப்பதற்கு தாமதமாகும். இதனால் உடலில் கொழுப்பு சேர்ந்து உடல் எடை அதிரிக்கக்கூடும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால், இரவில் சரியான அளவு, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதின் மூலமாக உடல் எடையை குறைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
இரவு உணவில் தயிர் சேர்த்து சாப்பிடுவது சிறந்ததாக கருதப்படுகிறது. இதில் அதிக புரதம் இருப்பதால் இரவு சாப்பிடுவதற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாகவும் இருக்கிறது. தயிர் சாப்பிடுவதால் பசி நீங்கி முழுமையாக வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இரவில் இதை எடுத்துக்கொள்வது அதிக கலோரிகளை நாம் எடுத்துக் கொள்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. தயிரை பெர்ரீஸ் பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவது சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஆப்பிள் மற்றும் பீநட் பட்டரை சேர்த்து சாப்பிடுவது இரவு நேரத்தில் ஏற்படும் Sweet cravings ஐ குறைக்கக்கூடிய சிறந்த ஸ்நாக்ஸாக கருதப்படுகிறது. பீநட் பட்டரில் இருக்கும் புரதம் இரவு நேரத்தில் ஏற்படும் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆப்பிளில் குறைவான கலோரிகளும், நார்ச்சத்தும் இருக்கிறது. இதை சாப்பிடுவதால் வயிறு நிறைந்து முழுமை பெற்ற உணர்வை தருகிறது. இதில் உள்ள புரதம், நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
Cottage cheese ல் நிறைய புரதம் இருப்பதால் அதை சிறந்த இரவு நேர ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு கப்பில் 23.5 கிராம் புரதம் இருக்கிறது. இது உடல் எடைக் குறைக்க சிறந்த ஸ்நாக்ஸ் ஆகும். பெர்ரி பழங்களுடன் இதை சேர்த்து சாப்பிடுவது மேலும் சுவையைக் கூட்டும்.
புரதம் அதிகம் இருக்கக்கூடிய முட்டையை, பீன்ஸ், காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இரண்டு முட்டை, சிறிது பழம் சேர்த்து இரவு நேர ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்ளலாம். இரண்டு முட்டையில் 12.6 கிராம் புரதம் இருக்கிறது. Low carb diet ஐ பின்பற்றுபவர்கள் இரவில் இந்த ஸ்நாக்ஸை எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.
சியா விதை, சிறிது பழம், பால் ஆகியவற்றை சேர்த்து எடுத்துக்கொள்வது இரவில் சாப்பிட நல்ல dessert ஆக இருக்கும். சியா விதையில் புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரையை சீராக்க உதவுவதோடு இரவில் நல்ல தூக்கம் வரவும் வழிவகுக்கிறது.
பொதுவாக ஓட்ஸை காலை நேரத்திலே எடுத்துக்கொள்வார்கள். ஆனால், இரவில் ஓட்ஸ் எடுத்துக்கொள்வதும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாகவே கருதப்படுகிறது. ஓட்ஸ் சாப்பிடுவது உடல் எடையையும், பசி ஏற்படுவதையும் குறைக்கிறது. எனவே, உடல் எடை குறைக்க விரும்புவோர் இரவில் ஓட்ஸை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த உணவுகளை இரவு நேரத்தில் எடுத்துக் கொள்வது பசியை கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)