குக்கர் விசில் வரலையா?... 2 நிமிஷத்துல சரி பண்ண ஒரு சூப்பர் டிப்ஸ்!

Cooker
Cooker
Published on

நமது வீட்டு சமையலறையில் தவிர்க்க முடியாத கருவி பிரஷர் குக்கர். அவசர நேரங்களில் குக்கர் சமையலை எளிதாக்கி உதவுகிறது. ஆனால், சில சமயங்களில் குக்கர் சரியாக வேலை செய்யாமல் விசிலே வராமல் இருப்பது, அல்லது ரப்பர் தளர்ந்து போய் தண்ணீர் வெளியேறுவது போன்ற பிரச்சனைகள் பெரும் எரிச்சலை ஏற்படுத்தும். 

குக்கரை திறந்து பார்த்தால், உள்ளே உணவு கருகிப்போயிருக்கும். இது போன்ற சின்னச் சின்ன சங்கடங்களுக்காக ஒவ்வொரு முறையும் புதிய பாகங்களை வாங்குவது வீண் செலவு. ஆனால் இந்தப் பிரச்சனையை செலவே இல்லாமல் வீட்டிலேயே சரிசெய்யக்கூடிய சில எளிய தீர்வுகள் உள்ளன.

ரப்பர் தளர்வைச் சரிசெய்ய சில எளிய வழிகள்:

  1. சமைக்கத் தொடங்கும் முன், குக்கர் ரப்பரை 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஃபிரிட்ஜில் உள்ள ஃப்ரீசர் பகுதியில் வைத்து எடுங்கள். குளிர்ச்சியால் ரப்பர் சுருங்கி, குக்கர் மூடியில் இறுக்கமாகப் பொருந்தும்.

  2. ரப்பரை குளிர்விக்க நேரமில்லையா? அரிசி மாவு, சோள மாவை சிறிது எடுத்து ரப்பர் முழுவதும் தடவி விடுங்கள். மாவு ஈரமாக இருக்கக்கூடாது. இப்படி செய்வதால், ரப்பரின் மேற்பரப்பில் ஒரு மெல்லிய பூச்சு போல மாவு ஒட்டி, தளர்வைச் சரிசெய்ய உதவும்.

  3. குக்கரின் ரப்பர் மற்றும் விசில் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 5 முதல் 10 ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும். அடிக்கடி இப்படிச் செய்யும்போது, ரப்பரும் இறுக்கமாகும், விசிலும் நன்கு செயல்படும்.

  4. குக்கர் ரப்பரை தினமும் சாதாரணமாகக் கழுவுவது மட்டும் போதாது. அதன் உட்புறத்தில் உணவுத் துகள்கள் காய்ந்து படிந்திருக்கலாம். இது ரப்பரின் இறுக்கத்தைக் குறைக்கும். எனவே, ரப்பரின் உட்புறத்தையும் நன்கு சுத்தம் செய்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
குக்கரில் சமைக்க கூடாத உணவுகள்!
Cooker

விசில் வராத பிரச்சனைக்குத் தீர்வு:

 குக்கரில் விசில் வராத பட்சத்தில் முதலில், அதன் விசிலை தனியே கழட்டிப் பாருங்கள். அதன் உள்ளே ஒரு திருகு போல இருக்கும். அதைக் கழற்றிப் பார்த்தால், உட்புறத்தில் இரண்டு ஸ்க்ரூ போல்ட்கள் இருக்கும். இவை தளர்வாக இருந்தாலோ, தேய்ந்து போயிருந்தாலோ, விசில் சரியாகப் பொருந்தாமல் அழுத்தம் வெளியேறி, விசில் வராது. ஒரு ஸ்க்ரூடிரைவர் வைத்து அவற்றை இறுக்கலாம். கடைகளில் இந்த ஸ்க்ரூ போல்ட்கள் தனித்தனியாகக் கிடைக்கும். மிகக் குறைந்த விலையில் இவற்றை வாங்கி மாற்றிக் கொள்ளலாம்.

பல வருடங்களாகப் பயன்படுத்தும் பழைய குக்கர்களின் விசிலில் தேய்மானம் ஏற்பட்டிருக்கலாம். இதனால் விசில் மூடியுடன் இறுக்கமாகப் பொருந்தாமல் லூசாகி, அழுத்தம் வெளியேறலாம்.  இப்படி இருக்கையில் குக்கர் விசில் மட்டும் கடைகளில் தனியாகக் கிடைக்கும். ஒரு புதிய விசில் வாங்கி மாற்றுவதன் மூலம், உங்கள் குக்கரை மீண்டும் பல வருடங்களுக்குப் பிரச்சனை இல்லாமல் பயன்படுத்தலாம்.

இந்த எளிய, செலவில்லாத வீட்டுத் முறைகளைப் பயன்படுத்தி, உங்கள் வீட்டு குக்கர் பிரச்சனைகளை நீங்களே சரிசெய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com