இன்று அநேக வீடுகளில் குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை விரல் சூப்பும் பழக்கம் உள்ளது. இதற்குக் காரணம் குழந்தைகள் தனிமையை உணர்வது, பெற்றோர்களின் கவனக்குறைவு போன்றவை தான்.
சிறு குழந்தைகள் விரல் சூப்புதல், நகம் கடித்தல் போன்ற செயல்களில் இளம் வயதில் ஈடுபட்டு வருகிறார்கள். சில குழந்தைகள் ஒரு வயது அல்லது இரண்டு வயதில் இந்த பழக்கத்தை நிறுத்தி விடுவார்கள். சில குழந்தைகள் ஆறு ஏழு வயது வரை தொடர்ந்து கொண்டு இருப்பார்கள்.
அத்தகைய குழந்தைகளுக்கு நாளடைவில் முன் பற்கள் நீண்டு விடும்.
இதனை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?
தனிமையில் இருக்கும் குழந்தைகள் விரல் சூப்புவதை தவிர்க்க அவர்களை டிவி பார்க்க சொல்லலாம். அப்படி டிவி பார்க்கையில் குழந்தைகள் கையில் ஏதேனும் பொம்மை போன்ற விளையாட்டு பொருட்களை கொடுத்து திசை திருப்பலாம். குழந்தைகளை கண்ணாடி முன்னே காட்டி விரல் சூப்பினால் அசிங்கமாக இருக்கும் என எடுத்துச் சொல்லலாம். சில குழந்தைகளுக்கு கை விரலில் தொப்பி போன்ற கருவியை ஒட்டி விடுவார்கள்.
சில வீட்டில் விரல்களில் விளக்கெண்ணெய் தடவி விடுவார்கள். இதனால் நாளடைவில் குழந்தைகள் இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். நாம் குழந்தைகள் இடம் 'விரல் சூப்பினால் கிருமிகள் வாயில் உள்ளே சென்றுவிடும்; இதனால் உனக்குத்தான் வயிறு வலிக்கும்' என்று எடுத்துச் சொல்லலாம். அநேகமாக ஒரு வயது அல்லது இரண்டு வயதில் இந்த பழக்கம் தானாகவே நின்றுவிடும். அபூர்வமாக சில குழந்தைகளுக்கு ஆறு ஏழு வயது வரை தொடரும்.
அத்தகைய குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மிகுந்த கவனம் செலுத்தி, அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும். இதனால் குழந்தைகளை அடிக்கவோ திட்டவோ கூடாது. கூடுமானவரை அவர்களிடம் பேசி புரிய வைக்க வேண்டும். ஆறு வயதுக்கு மேல் இந்த பழக்கம் நீடித்தால் பல் டாக்டர் பார்த்து பல் வரிசைகளை சரி செய்ய சொல்ல வேண்டும்.