தொழிலாளிகளின் வாழ்க்கையை மாற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துகள்!

Customer feedback
Customer feedback
Published on

வேகமாக இயங்கி வரும் தற்பொழுதிய சூழ்நிலையில், வீட்டில், வேலை செய்யும் இடத்தில் தங்கள் தேவைக்கு ஏற்ப மொபைல் ஆப்பில், ஆன்லைனில் ஆர்டர்கள் கொடுத்து பெற்றுக் கொள்வது அதிகரித்து வருகின்றது. அதன் பலன்களை பலரும் அனுபவித்தும் வருகின்றனர்.

அப்படி வரும் பொருட்கள் , சேவைகள் பெரும் பாலும் தொடங்குவது ஓ.டி.பி ( O T P) எண்ணில்; முடிவது கருத்து பெறுவதில் ( mostly starting with OTP numbers and ending with asking for Ratings ( Feedback ).

அப்படிப் பட்ட கருத்து பெறுவது ( getting feedback ) பற்றிய சில விவரங்களை காண்போம்.

ஒரு காலத்தில் விமர்சனம் பெறுவது என்பது கேள்விப் படாத ஒன்றாக இருந்தது. கால மாற்றம், போட்டிகளின் அழுத்தம், முன்னேற்றத்தின் கட்டாயம், உபயோகிப்பவர்களின் கருத்துக்களை தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

கிட்டத்தட்ட கட்டாயமாகி விட்ட இத்தகையை கருத்துக்கள் பணியில் வேலை செய்பவர்களின் வேலை திறன், திறமை, அவர்கள் தொழிலில் செலுத்தும் ஈடுபாடு, தொழில் முன்னேற்றத்திற்கு அவர்கள் அளிக்கும் பங்களிப்பு போன்ற பல வகையான அடிப்படைகளில் குறிப்பிட்ட வேலை செய்பவரின் ஒட்டு மொத்த பங்களிப்பை அளவிட பயன் படுத்துகிறார்கள்.

அத்தகைய கருத்துக்கள் அளிப்பவர்களுக்கு ஏதுவாக, சுலபமாக கருத்தை பகிர்ந்துக் கொள்ளும் வகையில் வினாக்கள் தயார் நிலையில் அளிக்கப் படுகின்றன. ஒவ்வொரு வினாவுக்கும் நான்கு அல்லது ஐந்து பதில்களும் அளிக்கப் படுகின்றன. பெரும்பாலும் இவை நட்சத்திர குறி அல்லது சிறிய வட்டம் அல்லது சதுர வடிவில் இருக்கும். கருத்து அளிப்பவர் அவரது குறிப்பிட்ட சேவை பெற்றது குறித்த அனுபவத்தின் அடிப்படையில அந்த குறியீட்டுகளில் மார்க் செய்து அவரவர் கருத்தை வெளிப்படுத்தலாம்.

உதாரணமாக கருத்து ( விமர்சனம் ) கூற வேண்டிய குறியீடுகள் இப்படி இருக்கும்.

O O O O O

1 2 3 4 5

1 - மோசம்

2 - சராசரி

3 - திருப்தி

4 - அருமை

5 - மிக மிக அருமை

பொதுவாக சேவை செய்பவர்கள் எதிர் பார்ப்பது 5 வது எண் குறியீட்டை. அது தான் அதிக பட்ச மதிப்பை பெற்று தரும். இவ்வாறு வேலை/ சேவை செய்பவர்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப் பட்டு அந்த அந்த நிறுவனங்களின் பாலிசிகள் படி செயல்பட்ட தொழிலாளிகளுக்கு இன்க்ரீமெண்ட், போனஸ், அதிகப்படி வருவாய் கணக்கிடப்படுகின்றன.

சில நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு, தொழிலாளி அல்லது வேலை செய்பவரின் உத்தியோக உயர்வும் முடிவு செய்ய பயன்படுத்தப் படுக்கின்றது. சேவைகளை பெற்றுக் கொண்டவர்கள் கொடுக்கும் நேர்மறை கருத்துக்கள் (positive feedback) மிக முக்கியமான பங்களிகின்றது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

பாரபட்சமற்ற, நியாயமான கருத்துக்கள் அடிப்படையில் குறியீட்டை பதிவு செய்வது முக்கியம். பெரும்பாலும் கருத்துக்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்வது வழக்கம். அவ்வாறு அளிக்கப்படும் கருத்துக்கள் உடனுக்கு உடன் சென்றடைந்து குறிப்பிட்ட வேலை / சேவை செய்தவரின் செயல் திறமையை மதிப்பீடு செய்ய பெரிதும் உதவுகின்றன. இந்த வகை கருத்துக்கள் சேவை செய்தவர்களின் அல்லது தொழிலாளிகளின் திறமைகளை மேம்படுத்த உதவும். பயிற்சி அளிக்கவும் ( to provide suitable training ) உதவுகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் கருத்து பெறுவது (obtaining feedback ) இன்றியமையாத ஒன்றாகி விட்டது.

இதையும் படியுங்கள்:
இரவில் மாம்பழத்தை சாப்பிடக்கூடாது? ஏன் என்று தெரியுமா?
Customer feedback

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com