குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே தொழில் முனைவோருக்கான திறன்களை அறிமுகப்படுத்தி, அவற்றை ஆராய ஊக்குவிப்பதன் மூலம் நீடித்த பலன்கள் கிடைக்கும். இது படைப்பாற்றல் மற்றும் சுதந்திரத்தை வளர்ப்பது மட்டுமல்லாமல், மதிப்புமிக்க வாழ்க்கைத் திறன்களையும் கற்பிக்க உதவுகிறது. குழந்தைகளுக்கான ஆக்கப்பூர்வமான வணிக யோசனைகள் பற்றிய சில விஷயங்களை நாம் தெரிந்துகொள்வோம்…
1. கலைநயம்
வாழ்த்து அட்டைகள் மற்றும் அஞ்சல் அட்டைகளை உருவாக்கி விற்பதன் மூலம் அவர்களது கலைத்திறன்களை நல்ல முறையில் பயன்படுத்தலாம். குழந்தைகள் தங்களுடைய சொந்த வரைபடங்கள் அல்லது ஊக்கமளிக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்தலாம். மற்றும் அவை மலிவு விலையில் ஆன்லைன் சேவைகளுடன் எளிதாக அச்சிடப்பட்டு விற்கப்படலாம்.
2. தனிப்பயனாக்கப்பட்ட கதைப் புத்தகங்கள்
ஆன்லைன் கருவிகளைப் பயன்படுத்தி, குழந்தைகளே மற்ற குழந்தைகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட கதைப் புத்தகங்களை உருவாக்கலாம். இவை குழந்தையின் பெயரையும் அவர்களின் சொந்த விளக்கப்படங்களையும் கூட சேர்த்து வணிக நோக்குடன் தயாரிக்கப்படலாம்.
3. DIY(Do it yourself) இயற்கை குளியல் மற்றும் உடல் தயாரிப்புகள்
இயற்கையான சோப்புகள், அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், டியோடரன்ட் மற்றும் முடி தயாரிப்புகளை உருவாக்குவது நவநாகரீகமானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. குழந்தைகள் இந்தத் தயாரிப்புகளைத் தயாரிக்கவும், அவற்றை உள்ளூரில் அல்லது ஆன்லைனில் விற்கவும் சுலபமாக கற்றுக்கொள்ளலாம்.
4. பெட்(Pet) சிட்டிங் மற்றும் நாய் நடைபயிற்சி
செல்லப்பிராணிகளைப் பராமரிப்பது பல குழந்தைகள் மிகவும் விரும்பி அனுபவிக்கும் ஒரு பொறுப்பாகும். செல்லப்பிராணிகளைப் பார்த்துக்கொள்வது, அவற்றுக்கு நடைபயிற்சி சேவைகளை வழங்குவது வெகுமதி அளிக்கும் வணிகமாக பிற்காலத்தில் மாறலாம்.
5. பயிற்சி மற்றும் வீட்டுப்பாடம் உதவி
ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட பாடத்தில் சிறந்து விளங்கினால், அவர்கள் இளைய மாணவர்களுக்கு பயிற்சி சேவைகளை வழங்கமுடியும். வீட்டுப்பாட உதவி இன்றைய சமுதாயத்தில் எப்போதும் தேவைப்படும் ஒன்று.
6. மூத்தவர்களுக்கான தொழில்நுட்ப ஆதரவு
தொழில்நுட்ப ஆர்வமுள்ள குழந்தைகள், சாதனங்களை இயங்க வைக்கவும், சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், அடிப்படை கணினித் திறன்களைக் விருப்பத்தோடு கற்பித்து மூத்தவர்களுக்கு சேவை அல்லது வணிக ரீதியில் உதவலாம்.
7. தனிப்பயன் நகை தயாரித்தல்
மணிகள், கம்பி மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்தி குழந்தைகள் தனித்துவமான வளையல்கள், நெக்லஸ்கள் அல்லது காதணிகளை உருவாக்கலாம். தனிப்பயனாக்கப்பட்ட நகைகளுக்கு எப்போதும் ஒரு தனி மவுசு இருந்துகொண்டுதான் இருக்கிறது.
8. புத்தக விமர்சனம் வலைப்பதிவு
இளம் புத்தகப் பிரியர்களுக்கு, தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை மதிப்பாய்வு(Review) செய்யும் வலைப்பதிவைத் தொடங்குவது நல்லதொரு பொழுதுபோக்காகவும் சிறந்ததொரு பயிற்சியாகவும் இருக்கும்.
9. சுற்றுச்சூழல் நட்பு கைவினைப்பொருட்கள்
மறுபயன்பாட்டு ஷாப்பிங் பைகள், துணி நாப்கின்கள் அல்லது தேன் மெழுகு உறைகள்(beeswax wraps) போன்ற சூழல் நட்பு தயாரிப்புகளை குழந்தைகள் உருவாக்கலாம். இந்தப் பொருட்கள் நிலைத்தன்மையை ஊக்குவிக்கின்றன மற்றும் கழிவுகளை குறைக்கின்றன.
10. தாவர விற்பனை
சிறிய பானை செடிகள், சதைப்பற்றுள்ள தாவரங்கள்(succulents) அல்லது மூலிகைகளை வளர்த்து விற்பது ஒரு மகிழ்ச்சிகரமான வணிகமாக இருக்கும். அதனால் குழந்தைகள் தாவர பராமரிப்பு பற்றி அறிந்து கொண்டு மற்றவர்களுடன் தங்கள் வணிக பயன்பாட்டையும் தொடங்கலாம்.
11. புதிர் உருவாக்கம்
தனிப்பயன் புதிர்களை (குறுக்கெழுத்து(crosswords), சுடோகு, புதிர்கள்) வடிவமைத்து அவற்றை ஆன்லைனில் அல்லது உள்ளூர் நிகழ்வுகளில் விற்பது ஆக்கப்பூர்வமாகவும் பலனளிக்கக் கூடியதாகவும் இருக்கும்.
12. தனிப்பட்ட உடற்தகுதி பயிற்சி
ஒரு குழந்தை உடல் தேகத்தில் ஆர்வமாக இருந்தால், அவர்கள் சக அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு அடிப்படை உடற்பயிற்சி என்று சில குறிப்புகளை வழங்கலாம். இது கால போக்கில் அவர்களை fitness trainer என்ற பாத்திரத்தில் அனைவருக்கும் வணிக ரீதியில் கற்று தர முடியும்.