சாப்பிடுவதற்கும் சில விதிமுறைகள் உண்டு தெரியுமா?

Eating pattern
Eating pattern

சிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் அளவாகவும் சத்தானதாகவும் இருக்க வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் நோய் வரும், ஆயுள் குறையும். வயிறு புடைக்கவும் மூச்சு முட்டவும் சாப்பிடக்கூடாது.

சாப்பிடும் முன் கை, கால், வாய் நன்றாக கழுவுவது அவசியம். காலின் ஈர உலரும் முன் சாப்பிடத் தொடங்க வேண்டும். சாப்பிடும்போது பேசவோ படிக்கவோ கேளிக்கையில் ஈடுபடவோ அலைபேசியில் பேசவோ கூடாது. அதேபோல், சாப்பிடும் போது பாதியில் எழுவதோ நின்று கொண்டோ சாப்பிடக்கூடாது.

காலணி அணிந்த நிலையிலோ, சூரிய உதய அஸ்தமன நேரத்திலோ இருட்டிலோ நிழல் படும் இடங்களிலோ சாப்பிடக் கூடாது. தட்டை கையில் ஏந்திக்கொண்டோ மடியில் வைத்தபடியோ படுத்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது. நிலவின் ஒளியில் பௌர்ணமியை தவிர மற்ற நாளில் சாப்பிடக்கூடாது.

சாப்பாட்டையோ மற்ற உணவுகளையோ சாப்பிடும் தட்டால் மூடி வைக்கக் கூடாது. இரவு உணவோடு இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர் நெல்லிக்காய் சேர்க்கக் கூடாது. முதலில் காய்கறிகள், அப்பளம் பரிமாறிய பின்பே சாதம் வைக்க வேண்டும்.

துக்க நிகழ்ச்சி தவிர மற்ற நிகழ்வுகளில் கீரை, வத்தல், பாகற்காயை முதலில் பரிமாறக்கூடாது. முன்னோர்களின் நினைவு நாளில் வீட்டில் அன்னதானம் வழங்க வேண்டும். கிழக்கு நோக்கி சாப்பிட ஆயுளும், தெற்கு நோக்கி சாப்பிட புகழும் மேற்கு நோக்கி சாப்பிட செல்வமும் வளரும் . வடக்கு நோக்கி சாப்பிடவே கூடாது.

வெண்கலம், அலுமினியம், செம்பு பாத்திரங்களில் சமைக்கக் கூடாது. வாழையிலை, வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை உண்டாகும். கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து உணவை சாப்பிடக் கூடாது.

இடது கையை கீழே ஊன்றிக் கொண்டு சாப்பிடக் கூடாது. தலையில் கையை வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. தலையை சொரிந்து கொண்டு சாப்பிடக் கூடாது. எவ்வளவு பிரச்னை இருந்தாலும் அழுது கொண்டே சாப்பாட்டை சாப்பிடக் கூடாது. சாப்பிடும் தட்டில் தாளம் போடுவது கோபத்தோடு சாப்பிடுவது கூடவே கூடாது. சாப்பிட்ட தட்டை உடனே கழுவி வைப்பது நல்லது. முடியாதவர்கள் அந்தத் தட்டில் கொஞ்சம் தண்ணீராவது  ஊற்றி வைக்க வேண்டும் .காய விடக் கூடாது. சாப்பிட்டு தட்டிலேயே கையை கழுவக் கூடாது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் தர்பூசணி பழம் சாப்பிடலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
Eating pattern

தலைக்குக் குளித்துவிட்டு ஈரத்தலையோடு சாப்பிடுவது வீட்டுக்கு பெரிய பணக்கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. முடிந்தால் சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பு ஒருபிடி அன்னத்தை இறைவனுக்காக என்று எடுத்து ஒதுக்கி வைத்துவிட்டு சாப்பிடுவது இன்னும் நல்ல பழக்கம். மேலும், தட்டில் சாப்பிடும்போது வலது கையால் சாப்பாட்டை பிசைந்து சாப்பிடுவோம். அப்படி இருக்கும்போது இடது கையால் அந்தத் தட்டை பிடித்துக் கொண்டு சாப்பிடும் பட்சத்தில் நம்முடைய வீட்டில் மகாலட்சுமி நிலைத்து இருப்பாள் என்று சொல்லப்பட்டுள்ளது.

முடிந்தவரை தினமும் சாப்பிடும்போது ஒரு சொட்டு நெய் சேர்த்து சாப்பிடுவது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தேடி தரும் என்பது குறிப்பிடத்தக்கது. சாப்பிடும் போது கீழே சிந்திய சாதத்தை எக்காரணத்தை கொண்டும் துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. கைகளாலேயே சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின்பு அந்த இடத்தை தண்ணீர் தெளித்து துடைப்பது நல்லது சாப்பிட்ட இடத்தை துணி போட்டு துடைக்காமல் கால்களால் மிதிக்கக் கூடாது.

சாப்பிடும்போது இவற்றைக் கடைப்பிடித்து சாப்பிட்டால் நம்முடைய உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, வீடும் சுபிட்சமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com