குழந்தைகள் தர்பூசணி பழம் சாப்பிடலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

Can Babies Eat Watermelon?
Can Babies Eat Watermelon?

ஒரு பெற்றோராக உங்கள் குழந்தைக்கு திடமான உணவுகளைக் கொடுக்க தொடங்கும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதிலும் தாய்மார்களுக்கு எதுபோன்ற உணவுகளைக் கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது என்பதில் குழப்பமாகவே இருக்கும். அப்படிதான், கோடைகாலங்களில் குழந்தைகளுக்கு தர்பூசணி கூடாதா என்ற குழப்பத்தில் பெற்றோர்கள் இருப்பார்கள். ஆனால் தர்பூசணிப் பழத்தை உங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன் அவர்களின் செரிமான அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

குழந்தைகளுக்கு தர்பூசணி பாதுகாப்பானதா? 

பொதுவாகவே ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைகளுக்கு திட உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் தர்பூசணிப் பழத்தை பாதுகாப்பான முறையில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கு முன்னதாக சில காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டியது முக்கியம். 

தர்பூசணி உள்ளிட்ட திட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன் அவர்கள் ஆறு மாத வயதை எட்டிவிட்டார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் அச்சமயத்தில் அவர்களது செரிமான அமைப்பு மெதுவாகவே செயல்படும். ஆறு மாதத்திற்கு பிறகு அவர்களால் பரவலான உணவுகளை கையாள முடியும். 

பொதுவாகவே தர்பூசணி ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவாக இல்லை என்றாலும், சில ஒவ்வாமை உணர்திறன் அல்லது ஒவ்வாமை குடும்ப வரலாறு கொண்ட குழந்தைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். உங்கள் குடும்பத்தில் ஒவ்வாமை பாதிப்பு வரலாறு இருந்தால், தர்பூசணி மட்டுமின்றி எந்த பழங்களைக் கொடுப்பதற்கு முன்பும் எச்சரிக்கையுடன் இருங்கள். 

தர்பூசணியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலமிளக்கியாக செயல்படும் என்பதால், மலச்சிக்கல் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் குழந்தைகளுக்கு ஒரே அடியாக அதிக தர்ப்பூசணி பழத்தை கொடுக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்வது நல்லது. இது குழந்தையின் செரிமான அமைப்பு அதை ஏற்றுக்கொள்ள உதவும். 

இதையும் படியுங்கள்:
30 வயதிற்கு மேற்பட்ட பெண்ணா நீங்கள்? இதோ உங்களுக்கான சருமப் பராமரிப்பு குறிப்புகள்! 
Can Babies Eat Watermelon?

குழந்தைகளுக்கு தர்பூசணியின் நன்மைகள்: 

  • தர்பூசணியில் அதிக அளவில் நீர் உள்ளதால், கோடைகாலங்களில் குழந்தையை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். 

  • தர்பூசணையில் விட்டமின் சி உள்ளிட்ட அத்தியாவசிய விட்டமின்கள் நிறைந்துள்ளன. இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும். 

  • தர்பூசணியில் லைகோபீன் போன்ற ஆக்சிஜனேற்றங்கள் இருப்பதால், இது தீங்கு விளைவிக்கும் ப்ரீரேடிக்கல் பாதிப்புகளிலிருந்து குழந்தையை பாதுகாக்கும். 

  • தர்பூசணியின் மென்மையான ஜூசி அமைப்பு, குழந்தைகள் உண்பதற்கு சிறந்த உணவாக அமைகிறது. தர்பூசணியை குழந்தைகள் மென்று சாப்பிடுவதால் அவர்களின் ஈறுகளுக்கு பயிற்சி கொடுத்து ஆரோக்கியமான வாய் வளர்ச்சியை ஊக்குவிக்கும். 

குழந்தைகளுக்கு தர்பூசணி பழம் கொடுப்பதால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றாலும், அவர்களின் வயது, ஒவ்வாமை அறிகுறி போன்றவற்றில் கவனத்துடன் இருக்க வேண்டும். எதையும் மிதமாகக் கொடுப்பது நல்லது. முக்கியமாக, குழந்தைகளுக்கு தர்பூசணி பழம் கொடுப்பதற்கு முன்பாக ஒரு நல்ல பீடியாட்ரிஷியனிடம் ஆலோசனை பெறுவது சிறந்ததாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com