ஏமாற்றம் நிரந்தரமல்ல: உங்கள் மனதை நொடியில் தேற்றும் 6 மந்திரங்கள்!

Mantras that instantly soothe a deceived mind!
Disappointed
Published on

நினைத்தது நடக்காதபொழுது மனம் ஏமாற்றமடையும்; வருத்தத்தில் இருக்கும். மனதைத் தேற்ற முதலில் ஏமாற்றத்தை ஏற்றுக்கொண்டு, எதிர்கொண்டு எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவதுதான் சிறந்தது. தோல்வி அல்லது ஏமாற்றம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. அதிலிருந்து கற்றுக்கொண்டு, அடுத்த முறை சிறப்பாக செயல்பட முயற்சி செய்யலாம்.

1. ஏமாற்றம் என்னும் உணர்வை ஏற்றுக்கொள்ளுதல்: ஏமாற்றம், கோபம் அல்லது பயத்தை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். அவற்றை எக்காரணம் கொண்டும் அடக்க முயற்சிக்க வேண்டாம். அந்த உணர்வுகளை புறக்கணிப்பதற்கு பதிலாக அவற்றை உணர்ந்து ஏற்றுக்கொள்வது நம்மை ஏமாற்றத்தில் இருந்து எளிதில் வெளிவர உதவும்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்தை நிமிஷத்தில் போக்கி உற்சாகத்தை வரவழைக்கும் வீட்டுத் துப்புரவு பணிகள்!
Mantras that instantly soothe a deceived mind!

2. தற்போதைய விஷயங்களில் கவனம் செலுத்துவது: ஏன் அப்படி நடந்தது என்பதை அமைதியாக சிந்திக்கலாம். நம் கட்டுப்பாட்டில் இருந்த காரணிகள் என்ன, இல்லாதவை என்ன என்று தெரிந்து கொள்ளலாம். அத்துடன் கடந்த காலத்தை எண்ணி வருந்துவது அல்லது எதிர்காலத்திற்காக கவலைப்படுவதைத் தவிர்த்து விட்டு, தற்போதைய விஷயங்களில் கவனம் செலுத்துவது மனதை அமைதிப்படுத்தவும், எதிர்காலத்திற்கான பதற்றத்தை குறைக்கவும் உதவும்.

3. ஆரோக்கியமான சமாளிப்பு நுட்பங்களை பயிற்சி செய்வது: நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, நம் ஆற்றலை நம்மால் மாற்றக்கூடியவற்றில் செலுத்தலாம். தியானம், ஆழ்ந்த சுவாசம், உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான சமாளிப்பு நுட்பங்களை பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்த முடியும்.

4. உணர்வுகளை பகிர்ந்து கொள்வது: நம்பிக்கைக்கு ஆளான நண்பர்களையோ, குடும்ப உறுப்பினர்களையோ தொடர்பு கொண்டு பேசுவது நல்லது. நம்முடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நமக்கு ஆறுதல் கிடைப்பதுடன், மனபாரம் குறைந்து ஏமாற்றத்தில் இருந்து வெளி வரவும் உதவும். அத்துடன் அவர்கள் தரும் புதிய கண்ணோட்டங்கள் அல்லது ஆதரவு நமக்கு உதவும்.

இதையும் படியுங்கள்:
இனி ட்ரை கிளீனிங் தேவையில்லை: பட்டுப் புடைவையை வீட்டிலேயே பளிச்சென மாற்றும் மேஜிக்!
Mantras that instantly soothe a deceived mind!

5. கவனத்தை திசை திருப்புவது: ஒரு வழி அடைபட்டால், வேறு வழிகள் இருக்கிறதா என்று ஆராய்ந்து நம் இலக்கை அடைய மற்ற சாத்தியக்கூறுகளை கவனிக்கலாம். அத்துடன் நமக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் மனதை ஈடுபடுத்தலாம். விருப்பமான இசையை கேட்பது, நல்ல புத்தகங்கள் படிப்பது போன்ற மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதன் மூலம் நம் கவனத்தை திசை திருப்பி கவலைகளை மறக்கச் செய்யலாம். நினைத்தது நடக்காதபோது அந்த அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று கவனித்து அடுத்த முறை வித்தியாசமாக செயலாற்றலாம்.

6. அதிகப்படியான சிந்தனையை நிறுத்துவது: தேவையில்லாமல் அதிகமாக சிந்திப்பதை நிறுத்த முயற்சி செய்யலாம். தேவையற்ற கவலைகளுடன் போராடுவதை விட, அவற்றை நிர்வகிக்கவும், எதிர்கொள்ளவும், எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுவதில் கவனம் செலுத்துவதும் சிறந்ததாக இருக்கும். போதுமான தூக்கம், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவை மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும். எந்த ஒரு காயத்திலிருந்தும் மீளுவதற்கு நேரம் எடுக்கும். எனவே, அதற்கான கால அவகாசத்தை நமக்கு நாமே கொடுத்துக் கொள்வது நல்லது.

கடந்த காலத்திலேயே மூழ்கி விடாமல் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் கவனம் செலுத்துவது நம்மை வலிமையாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com