‘டிஷ்வாஷர்’: ஆடம்பரமல்ல... இனி சமையலறையின் அத்தியாவசியம்!

இன்றைய காலகட்டத்தில் டிஷ்வாஷர் ஒரு ஆடம்பரமாக இல்லாமல் அத்தியாவசியமான ஒரு சமையலறை உபகரணமாக மாறி வருகிறது.
dishwasher|டிஷ்வாஷர் செலவு
dishwasher|டிஷ்வாஷர் செலவுAI Image
Updated on

அடு‌ப்‌‌பி‌ல் ‌விறகை வை‌த்து சமை‌த்த கால‌த்‌தி‌ல் இரு‌ந்து முன்னேறி த‌ற்போது ‌மி‌க்‌சி, ‌கிரை‌‌ண்ட‌ர், மை‌க்ரோவே‌வ் அவ‌ன், வாஷ‌ி‌ங்மெஷ‌ி‌ன் என வள‌ர்‌ந்து வி‌ட்ட தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌தி‌ல், த‌ற்போது பெண்களுக்கு மிகவும் தேவையாக உ‌ள்ளது டிஷ் வாஷர் (Dishwasher) என‌ப்படு‌ம் பா‌‌த்‌திர‌ம் துல‌க்‌கு‌ம் எ‌‌ந்‌திர‌ம்தா‌ன்.

தினமும் வீட்டில் மூன்று வேளை சமைக்கிறோம், பரிமாறுகிறோம் சாப்பிடுகிறோம். வேலைக்கு போகிறவர் களுக்கு தினசரி வீட்டில் சமைத்த பாத்திரங்களை சுத்தம் செய்வது மிகவும் கடினமான வேலையாக உள்ளது. அதனால் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேலைக்கு ஆள் தேவைப்படுகிறது. ஆனால் வேலைக்கு ஆள் கிடைப்பது அரிதாகி வரும் இன்றைய காலகட்டத்தில் டிஷ்வாஷர் ஒரு ஆடம்பரமாக இல்லாமல் அத்தியாவசியமான ஒரு சமையலறை உபகரணமாக மாறி வருகிறது. இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, தண்ணீரைச் சேமித்து, கிருமிநாசினி (hygiene) முறையில் பாத்திரங்களைச் சுத்தம் செய்கிறது.

ஒரு காலத்தில் டிஷ்வாஷர் என்பது வசதியானவர்கள் மட்டுமே உபயோகித்த பீங்கான் மற்றும் கண்ணாடி பாத்திரங்களை மட்டுமே சுத்தம் செய்யக் கூடியதாக இருந்தது. ஆனால் இன்றைக்கு இந்திய மக்களின் சமையலுக்கு ஏற்ற வகையில் பாத்திரங்களை சுத்தம் செய்து தரும் மிக நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய டிஷ்வாஷர்கள் சந்தையில் குவிந்து கிடக்கிறது.

நாம் தினமும் மூன்று வேளையும் சமைக்க மற்றும் சாப்பிட பயன்படுத்தும் பாத்திரங்கள், கரண்டிகள், தட்டுகள் மற்றும் டம்ளர்கள் போன்ற அனைத்தையும் அவ்வப்போது டிஷ்வாஷரில் அடுக்கி வைக்கலாம். கடைசியாக இரவில் மெஷினை ஆன் செய்துவிட்டால், காலையில் நமக்குத் தேவையான பாத்திரங்களை சுத்தமாகவும், பளபளப்பாகவும், உலர்த்தியும் நமக்கு மீண்டும் சமைப்பதற்கு தயாராக தருகிறது.

அதாவது கழுவுதல், அலசுதல், நீராவி மூலம் கிருமிகளையும், அழுக்குகளையும் அகற்றுதல் போன்ற மூன்று முக்கிய பணிகளை இ‌ந்த டிஷ் வாஷர் எந்திரத்தில் நடைபெறுகின்றன.

அனைவரும் எளிதாக கையாள வசதியாக டிஷ்வாஷரில் அந்தந்த பாத்திரங்களுக்கு ஏற்ற தனித்தனி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது யாராலு‌ம் எ‌ளிதாக இய‌க்‌க‌க் கூடிய வகை‌யி‌ல் இவை வடிவமை‌க்க‌ப் ப‌ட்டு‌ள்ளன.

குக்கர், வாணலி, குண்டான் போன்ற பாத்திரங்களுக்கு என்று தனி இடமும், தட்டுகள், டம்ளர்கள், கரண்டிகள், ஸ்பூன் போன்றவை வைப்பதற்கு தனித்தனி இடமும் அட்ஜெஸ்டபிள் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக குழந்தைகளின் பொருட்களுக்காக பிரத்யேகமாக பால் பாட்டில், தண்ணீர் பாட்டில், குழந்தைகள் உணவை சமைக்கும் சிறிய பாத்திரங்கள் போன்றவற்றை அடுக்க தனியாக ஓரிடம் என்று இன்றைய நவீன டிஷ்வாஷர்களில் 12 பிரத்யேக இடங்கள் வரையில் வசதியாக கொடுக்கப்பட்டுள்ளது.

டிஷ்வாஷர் கீழ்புறமாக இருந்து மேல் நோக்கி தண்ணீரை அதிக வேகத்தில் பீய்ச்சி அடிக்கிறது. இதனால் அதிவேகமாக வரும் தண்ணீர் சூடாக இருப்பதால் சுடுநீர் பட்டு முதலில் பாத்திரத்தில் உள்ள கசடுகள் வெளியேற்றப் படுகிறது. அதன் பிறகு டிஷ்வாஷருக்கு என்று பிரத்தியேகமாக உபயோகிக்கப்படும் திரவ டிஷ்வாஷர் சோப் கலவை கொண்ட தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டு பாத்திரங்கள் சுத்தம் செய்யப்படுகிறது.

அதன் பிறகு மீண்டும் சூடான நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு பாத்திரங்களில் உள்ள சோப்பு திரவம் சுத்தம் செய்யப்பட்டு பின்பு உலர்ந்த சூடான காற்று செலுத்தப்பட்டு பாத்திரங்கள் உலர வைக்கப்படுகின்றன.

குறிப்பாக கையால் சுத்தம் செய்யும்போது கூட இவ்வளவு சிறப்பான முறையில் சுத்தம் செய்ய முடியுமா என்று யோசிக்கும் வகையில், அதிக வெப்பநிலையில் (உதாரணமாக, 65 முதல் 75 டிகிரி செல்சியஸ்) பாத்திரங்களைக் கழுவுவதால், கிருமிகள் அழிகின்றன. கைகளால் கழுவுவதை விட இது அதிக சுகாதாரமானது. இதனால் பாத்திரங்களில் உள்ள அனைத்து வகையாக கிருமிகள், அழுக்குகள் அகற்றப்பட்டு சுத்தமாகவும், பளபளப்பாகவும் நம் கைகளுக்கு வந்து சேர்கிறது.

ஒரு நாளைக்கு தேவையான பாத்திரங்களை காலையிலிருந்து உபயோகித்த பின் டிஷ்வாஷரில் அடுக்கிக் கொண்டே வந்து இரவில் மெஷினை ஆன் செய்தால் மறுநாள் காலையில் சமைக்க வரும் பொழுது பாத்திரங்கள் நம்மை பார்த்து கண் சிமிட்டி சிரிப்பதை காணலாம்.

டிஷ்வாஷரைப் பற்றி முழுமையாகத் தெரியாத பலரும், அதில் பாத்திரங்களைப் போடுவதற்கு முன்பு தண்ணீரில் நன்றாக அலச வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்குப் பதிலாக நாமே கையால் கழுவி கொள்வது சுலபம் என்ற கருத்து நிலவுகிறது.

Dishwasher|டிஷ்வாஷர் செலவு
Dishwasher|டிஷ்வாஷர் செலவு

ஆனால் உண்மை என்னவென்றால் நாம் உணவு சமைத்த மற்றும் சாப்பிட்ட பாத்திரங்களில் உள்ள உணவு துணுக்குகளை மட்டும் எடுத்துவிட்டு காலி பாத்திரங்களை அப்படியே டிஷ்வாஷரில் போட்டு விடலாம்.

இதையும் படியுங்கள்:
டிஷ்வாஷரில் பாத்திரங்களை இப்படித்தான் அடுக்கணுமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
dishwasher|டிஷ்வாஷர் செலவு

பாத்திரத்தில் ஒட்டியுள்ள சிறு துணுக்குகளை அகற்றிய பின்பு சோப்பு தண்ணீரில் அதை கழுவி அலசி கொடுக்கும் வேலையை டிஷ்வாஷரே செய்து விடுகிறது. சமையல் பாத்திரங்களை வரிசையாக அடுக்கிவிட்டு, நாம் சுலபமாக பிற வேலைகளைச் செய்யலாம்.

அதேபோல் குழாயைத் திறந்து கையால் பாத்திரங்களைக் கழுவும் போது அதிக தண்ணீர் வீணாகிறது. ஆனால், பெரும்பாலான நவீன டிஷ்வாஷர்கள் ஒருமுறைக்கு 8 முதல் 12 லிட்டர் தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகின்றன.

முக்கியமாக டிஷ்வாஷர் தேர்வு செய்கையில் முதலில் கவனிக்க வேண்டியது உங்கள் வீட்டில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளார்கள் என்பது தான். மூன்று பேர் தான் இருக்கிறீர்கள் எனில் 8 பிளேஸ் செட்டிங்ஸ் கொண்ட சின்ன டிஷ் வாஷர் போதுமானது. பெரிய குடும்பம் எனில் 14 பிளேஸ் செட்டிங் இருக்கும் வாஷர் பொருத்தமானதாக இருக்கும்.

குறிப்பாக நம் இந்திய சமையலறையில் கடாய், தவளை, வாணலி, கரண்டி, தட்டு, டம்பிளர் ஆகியவை தான் இருக்கும். அதிக பாத்திரங்கள் பயன்படுத்துபவர்கள் 14 செட்டிங்ஸ் உள்ள டிஷ் வாஷர் வாங்குவது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
இந்திய சமையலறைக்கு ஏற்ற சிறந்த 5 டிஷ்வாஷர்கள்!
dishwasher|டிஷ்வாஷர் செலவு

இதில் பு‌ல்‌லி ஆ‌ட்டோமெடி‌க், செ‌மி ஆ‌ட்டோமெடி‌க் என இரு வகை உ‌ள்ளன. ஆனா‌ல் ஃபுல்லி ஆட்டோமேடிக் டிஷ்வாஷர்களே பல இல்லத்தரசிகளின் தேர்வாக உ‌ள்ளது.

இந்த டிஷ்வாஷர் என்பது சற்றே விலை கூடுதலாக இருந்தாலும் அதன் விலை மற்றும் தினசரி சோப்பு, தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கான செலவுகளை கணக்கிடும் பொழுது ஒரு மாதத்திற்கு (டிஷ்வாஷர் செலவு)500 ரூபாய் என்ற அளவில் தான் நமக்கு செலவாகும். இது நாம் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வதை விட குறைவானது என்று கூட கருதலாம்.

logo
Kalki Online
kalkionline.com