சர்வீஸ் சென்டர் தேவையில்லை: வீட்டுப் பராமரிப்பு செய்யும் எளிய யுக்திகள்!

சர்வீஸ் சென்டருக்கு செல்லாமல், மிக்ஸி பிளேடு கூர்மை, பிரிட்ஜ் கதவு சுத்தம், துரு நீக்கம் வரை வீட்டிலேயே செய்யக்கூடிய சுலப யுக்திகள்.
-maintenance-tips
-maintenance-tips
Updated on

மிக்ஸி ஜாரில் உள்ள பிளேடுகளின் கூர்மை மழுங்கிப் போய்விட்டால், உடனே அதைத் தூக்கிக்கொண்டு சர்வீஸ் சென்டருக்கு ஓட வேண்டியதில்லை. அதேபோல, பிரிட்ஜ் கதவு இடுக்குகளில் சேர்ந்திருக்கும் அழுக்குகளைச் சுத்தம் செய்ய சர்வீஸ் ஆட்களை அழைக்கவும் தேவையில்லை; நாமே வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை வைத்து இவற்றைச் சரிசெய்யலாம். அதே போல இன்னும் சில ஐடியாக்கள் பற்றி பார்ப்போம்.

பிரிட்ஜ் கதவு இடுக்குகள் சுத்தம் செய்ய: பிரிட்ஜ் கதவின் ரப்பர் பீடிங் இடுக்குகளில் அழுக்கு சேர்ந்தால் கிருமிகள் வளரும். அங்கே கைகளை நுழைத்துச் சுத்தம் செய்ய முடியாது என்பதால், ஒரு பழைய காட்டன் சாக்ஸை நீரில் லேசாக நனைத்து,  பழைய சீப்பின் கைப்பிடிப் பக்கத்தில் மாட்டி, அந்த இடுக்குகளில் நுழைத்து எடுத்தால் அத்தனை அழுக்குகளும் கச்சிதமாக வெளியே வந்துவிடும்.

மிக்ஸி பிளேடு கூர்மையாக: பயன்படுத்திய எலுமிச்சம்பழத் தோல்களையும், ஒரு ஸ்பூன் கல்லுப்பையும் மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் ஓடவிட்டால் போதும். எலுமிச்சையின் சிட்ரிக் அமிலம் ஜாரின் துர்நாற்றத்தை நீக்கிவிடும்; கல்லுப்பின் உராய்வு மழுங்கிய பிளேடுகளைப் புதியது போலக் கூர்மையாக்கிவிடும்.

துரு நீங்க: வீட்டில் உள்ள கத்தரிக்கோல், அரிவாள்மனை, அல்லது இரும்புப் பூட்டுகள் மழைக்காலத்தில் எளிதில் துருப்பிடித்துவிடும். அதற்குத் துணி தைக்கும் மிஷின் ஆயில் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பழைய டூத் பிரஷில் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் தொட்டு, இரும்புப் பொருட்களின் இடுக்குகளில் தேய்த்து வைத்தால் துருப்பிடிக்கவே பிடிக்காது.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் ஹோம் மேக்கர்ஸ்: கோடையில் செய்யவேண்டிய வீட்டுப் பராமரிப்புப் பணிகள்!
-maintenance-tips

எறும்புத் தொல்லை நீங்க: பூந்தொட்டிகளில் எறும்புத்தொல்லை அதிகமாக இருந்தால், ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டாம். பயன்படுத்தாத சில தீக்குச்சிகளை எடுத்து, மருந்துள்ள பகுதியை மண்ணுக்குள் இருக்குமாறு செடியைச் சுற்றி நட்டு வைத்தால் போதும். தீக்குச்சியின் முனையில் உள்ள சல்பர் (கந்தகம்) வாசனைக்கு எறும்புகள் அந்தப் பக்கமே வராது.

துணியில் ஒட்டிய சூயிங்கத்தை எடுக்க: குழந்தைகள் விளையாடும்போது சில நேரங்களில் உடைகளில் சூயிங்கம் ஒட்டிக்கொண்டு துணியையே பாழாக்கிவிடும். அதை நகத்தால் சுரண்டினால் துணி கிழிந்துவிடும். அதற்குப் பதிலாக, ஒரு ஐஸ் கட்டியை எடுத்து அந்தச் சூயிங்கம் மீது சில நிமிடங்கள் வைத்தால், அது உறைந்து கட்டியாகிவிடும்; அதன் பின் மிக எளிதாகத் துணியில் கறை இல்லாமல் எடுத்துவிடலாம்.

பழங்கள் அழுகாமல் புதிது போல இருக்க: வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களை அப்படியே வைத்தால் சீக்கிரம் அழுகிவிடும் அல்லது ஈக்கள் மொய்க்கும். பழங்களை அப்படியே வைக்காமல், தனித்தனியாகச் செய்தித்தாளில் சுற்றி, ஒரு பாலித்தீன் பையில் காற்றுப் புகாமல் கட்டி வைத்தால், சாதாரண வெப்பநிலையிலேயே பல நாட்களுக்குப் பழங்கள் அழுகாமல் புதியது போலவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் ஹோம் மேக்கர்ஸ்: கோடையில் செய்யவேண்டிய வீட்டுப் பராமரிப்புப் பணிகள்!
-maintenance-tips

புத்தகங்கள்/பத்திரங்களைப் பாதுகாக்க: பீரோவில் அல்லது அடுக்கில் நீண்ட நாட்களாக வைத்திருக்கும் புத்தகங்கள் மற்றும் முக்கியப் பத்திரங்கள் ஒருவித மட்கிய வாசனையுடன், பூஞ்சைக் காளான் பிடித்துப் பாழாகிவிடும். அதற்கு ரசாயன உருண்டைகளைப் பயன்படுத்தத் தேவையில்லை. ஒரு சிறிய துணியில் ஒரு ஸ்பூன் சமையல் (பேக்கிங்) சோடாவை  முடிச்சாகக் கட்டி புத்தக அலமாரியின் மூலையில் வைத்தால் போதும். சமையல் சோடா அங்குள்ள ஈரப்பதத்தையும் துர்நாற்றத்தையும் உறிஞ்சி, புத்தகங்களைப் புதியது போலப் பாதுகாக்கும்.

logo
Kalki Online
kalkionline.com