Pets
Pets

செல்லப்பிராணிகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க இதைச் செய்யுங்கள்!

நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஒருசிலர் செல்லப்பிராணிகளை அன்போடு வளர்த்து வருகின்றனர். இவர்களில் சிலர் செல்லப்பிராணிகளை பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி தங்கள் வீட்டுப் பிள்ளையாகவும் நினைக்கின்றனர். மன அழுத்தத்தில் உள்ளவர்கள் செல்லப்பிராணிகளிடம் நேரத்தை செலவிடும் போது, அவர்களின் மனம் நிம்மதி அடையும்.

பலரும் அதிகமாக நாய்கள் மற்றும் பூனைகளைத் தான் செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். கோடை வெயிலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள பல முயற்சிகளை செய்கிறோம் அல்லவா. அதேபோல் கோடை வெப்பத்தில் இருந்து செல்லப்பிராணிகளையும் நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

கோடை வெப்பத்தால் அவதியுறும் செல்லப்பிராணிகள் அமைதியாக படுத்துக் கொள்ளும். அச்சமயங்களில் வெளியில் கூட்டிச் செல்வது செல்லப்பிராணிகளுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

கோடையில் செல்லப்பிராணிகளுக்கு சரும பராமரிப்பு அவசியமாகும். மனிதர்களைப் போல் இவை வியர்வையை தங்கள் சருமத்தின் மூலம் வெளியேற்றாது. சுவாசித்தலின் போது வாய் வழியாகத் தான் 80% வியர்வையை செல்லப்பிராணிகள் வெளியேற்றும்.

அதிக வெப்பத்தை செல்லப்பிராணிகளால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆகையால் ஒரு தண்ணீர் தொட்டியில் உட்கார வைத்து வெப்பத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

அதிக வெப்பத்தைத் தவிர்ப்பதற்கு செல்லப்பிராணிகளின் உரோமங்களை முழுவதுமாக வெட்ட வேண்டும்.

அதிகாலை, மாலை என இருவேளையும் சூரிய ஒளியில் செல்லப்பிராணிகளை வெளியில் கூட்டிச் செல்வது சரியானது. இது அவற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் பூங்காக்களிலும் செல்லப்பிராணிகளை நடை போட வைக்கலாம்.

கோடையில் நாய்களுக்கு அதிகளவில் தண்ணீரைக் குடிக்கக் கொடுங்கள். இது அவற்றின் உடல் வெப்பத்தை குறைக்க உதவும். செல்லப்பிராணிகளை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டும். மேலும், இவை இருக்கும் இடம் குளிர்ந்த காலநிலையைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இனி செல்லப்பிராணிகள் பேசுவதையும் புரிந்து கொள்ளலாம்!
Pets

கோடைகால வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ள செல்லப்பிராணிகளை அவ்வப்போது நீச்சலடிக்க அழைத்துச் செல்லுங்கள். இதுதவிர செல்லப் பிராணிகளுக்கென இருக்கும் ரிசார்ட்டுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். இப்படி செய்வதனால் கோடை வெப்பத்தில் இருந்து உங்களுக்கும், உங்களுடைய செல்லப்பிராணிக்கும் நிவாரணம் கிடைக்கும்.

நேரம் கிடைக்கும்போது செல்லப்பிராணிகளை காலை மற்றும் மாலையில் கடற்கரைக்கு அழைத்துச் செல்லலாம். குளிர்ச்சியான சூழலில் கடற்கரை மணலில், செல்லப்பிராணிகள் மகிழ்ச்சியாக துள்ளி விளையாடும்.

செல்லப்பிராணிகளுக்கு முன்னால் ஒரு பந்தை வைத்து விருப்பப்படி விளையாட விடுங்கள். மனிதர்களுக்கு மட்டுமின்றி வளர்ப்பு நாய்களுக்கும் சூரிய ஒளி அவ்வப்போது தேவை.

செல்லப்பிராணிகளின் சருமம் அல்லது உரோமங்களில் ஏதேனும் வித்தியாசம் இருந்தால், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, ஸ்பா மூலமாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் மெத்தனமாக இருக்காமல், அவைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நாம் எப்போதும் தொடர்ந்து ஈடுபட வேண்டும். ஏனெனில், செல்லப்பிராணிகள் நம் வீட்டில் ஒருவராக இருப்பவை மட்டுமல்ல, நமது மன அழுத்தத்தைக் குறைக்கும் மருத்துவர்களும் இவைகள் தான்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com