
இந்து மதத்தின் வேத ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரப்படி மயிலிறகுகள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஆன்மீக ரீதியாக பகவான் கிருஷ்ணருக்கும் மயிலிறகிற்கும் நேரடி தொடர்பு இருப்பதை நாம் அறிவோம். அதனாலேயே கிருஷ்ணரின் நெற்றியில் இடம் பிடித்துள்ளது மயிலிறகு.
லட்சுமிதேவி மற்றும் ராகு-கேதுவின் சக்தியுடன் மயிலிறகிற்கு தொடர்பு இருப்பதால் மயிலிறகை ஜாதக கணிப்பின்போது பயன்படுத்துகின்றனர். மயிலிறகை வீட்டில் வைத்திருப்பதால் நேர்மறை சக்தி அதிகரிக்கும். வீட்டின் பாதுகாப்பு மற்றும் சுபிட்சம் பெருகும்.
வீட்டின் வடகிழக்கு மூலையில் மயிலிறகை வைத்திருப்பது வீட்டிற்குள் எதிர்மறை சக்தி, துரதிர்ஷ்டம், கெட்ட ஆவி போன்றவற்றின் ஆளுமையை அறவே நீக்கி வீட்டிலுள்ளோரின் மெண்டல் மற்றும் எமோஷனல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
ஒரு மயிலிறகை உங்கள் பர்ஸ் அல்லது கைப்பையில் வைத்திருந்தால் உங்களின் பணத் தட்டுப்பாடு நீங்கி, தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்வில் வெற்றிகளும் சொத்துக்களும் வந்து குவியும் என நம்பப்படுகிறது.
வீட்டு நுழைவு வாயிலின் நிலைப்படியின் உச்சியில் மயிலிறகை கட்டித் தொங்கவிட்டால் எதிர்மறை எனர்ஜி, தீயசக்தி, துரதிர்ஷ்டம் போன்றவை வீட்டிற்குள் நுழைய விடாமல் பாதுகாக்க முடியும்.
நீங்கள் படிக்கும் மேஜை அல்லது கம்ப்யூட்டர் டேபிள் மீது ஓரமாக இரு மயிலிறகை செருகி வைத்தால் உங்கள் ஞாபக சக்தி, அறிவாற்றல், பிரச்னைகளை தீர்க்கும் திறன், மனத்தெளிவு, கவனம் ஆகியவை அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும்.
மெடிட்டேஷன் பண்ணும்போது உடன் ஒரு மயிலிறகை வைத்துக்கொண்டால் உங்களின் ஆன்மிக வளர்ச்சி, கடவுளுடனான தொடர்பு, உள்மன விழிப்புணர்வு ஆகியவை மேன்மையுறும்.
கலைஞர்கள் தங்களுடன் மயிலிறகை வைத்துக் கொண்டால் அவர்களின் கற்பனை, ஊக்கம், படைப்புத்திறன் போன்றவை அதிகமாகி அவர்களின் படைப்புகளின் வெளிப்பாடு சிறந்ததாக அமையும்.
கார், பைக் போன்ற உங்கள் வாகனத்தில் ஒரு மயிலிறகை வைத்திருப்பது பயணத்தை பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றும்.
உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு ஏதாவது பரிசளிக்க விரும்பும்போது மயிலிறகினால் செய்த விசிறி போன்றவற்றை கொடுக்கலாம். இதனால் உங்களுக்கு அவர்களுடனான பிணைப்பு, அன்பு, மரியாதை, புரிதல் போன்றவை அதிகமாகும்.
உடலில் உண்டாகும் புண்களின் மீது மருந்து தடவும்போது, மருந்தை மயிலிறகினால் தொட்டுப்புண் மீது பூசினால் புண் சீக்கிரமே ஆறிவிடும்.
மயிலிறகினால் கிடைக்கும் இத்தனை நன்மைகளை மனதில் கொண்டு, தகுந்த முறையில் அதைப் பயன்படுத்தி நலம் பெறுவோம்.