
வாஸ்து சாஸ்திரம் என்பது வீட்டில் உள்ள பொருட்கள் இடங்களுக்கு மட்டும் தான் என் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வீட்டிற்குள்ளும் , வீட்டைச் சுற்றிலும் இருக்கும் காலி இடங்கள் வாஸ்துவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த காலி இடங்கள் சரியான திசையில் இருந்தால் மட்டுமே நன்மை தரக்கூடும். தவறான திசையில் சிறிய அளவில் காலி இடங்களை விட்டிருந்தாலும் அது எதிர்மறை எனர்ஜியை உண்டாக்கும். வீட்டில் ஏற்படும் பண இழப்பு, நிதி நெருக்கடி, நோய்கள், மன வருத்தங்கள், சண்டைகள், தடைகள் போன்றவற்றில் வீட்டைச் சுற்றியிருக்கும் பொருட்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அதுவும் வீட்டைச் சுற்றிக் தோட்டம் அமைப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். எந்தெந்த செடிகளை வைத்தால் நன்மை ஏற்படும் என்பதை தோட்ட வாஸ்து சாஸ்திரம் உணர்த்துகிறது.
நம் தோட்டத்தில் அழகிற்காக வைக்கும் சில செடிகள் பொருட்கள் கூட வீட்டின் தீய சக்திகள் ஆக்கிரமிப்பிற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
வீட்டுத் தோட்டத்தில் செய்ய வேண்டியவை:
வீட்டின் வடக்கு திசையில் தோட்டம் அமைப்பது சிறந்ததாகும். இது செல்வம் பெருகுவதற்கு துணை செய்யும்.
வீட்டின் கிழக்கு திசையில் தோட்டம் அமைப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. அரசியல்வாதிகள் மற்றும் பொது வாழ்வில் ஈடுபடுவோரின் வாழ்க்கை சிறப்பாக அமைய இது உதவி செய்யும்.
ஃபவுண்டன் அமைக்கும் போது தோட்டத்தின் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் அமைப்பது மிகவும் சிறப்பானதாகும்.
வடக்கு திசையில் எந்த மாதிரியான நீர் சார்ந்த அமைப்புகளை வைத்தாலும் சிறப்பாக இருக்கும்.
தோட்டத்தின் மையப்பகுதி காலியாகவும், சுத்தமாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தோட்டத்தில் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் துளசி செடி வைப்பது மிகவும் சிறப்பானதாகும்.
ஊஞ்சல் அமைப்பதாக இருந்தால் வடக்கு அல்லது கிழக்கு திசையில் அமைக்கலாம்.
நன்கு செழிப்பாக நல்ல நிலையில் இருக்கக்கூடிய செடிகளை மட்டுமே தோட்டத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்.
தெற்கு திசையில் மட்டுமே பெரிய மரங்களை வைக்க வேண்டும்.
சிறிதளவாவது திறந்த வெளியான இடத்தை வைக்க வேண்டும்.
கனிகள் காய்க்கும் மரங்களை கிழக்கு பகுதியில் வைப்பது சிறப்பானதாகும்.
பூச்செடிகள் வைப்பதற்கும் அமரும் இடம் அமைப்பதற்கும், நீரூற்று அமைப்பதற்கும் கிழக்கு திசை சரியானதாக இருக்கும்.
மாமரம் போன்ற பெரிய மரங்களை வீட்டின் மேற்கு திசையில் வைக்க வேண்டும். ஆனால் இவை வீட்டின் அருகில் இருப்பது போல் வைக்கக் கூடாது.
பாறைகள் கற்சிலைகள் அமைப்புகளை மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
குழந்தைகள் விளையாடுவதற்கான இடத்தை வடமேற்கு திசையில் அமைப்பது சிறந்தது. பறவைகளின் கூடுகள் பிராணிகள் கூண்டு ஆகியவற்றிற்கு வடமேற்கு சிறந்ததாகும்..
மல்லிகை ரோஜா செடிகள் வைக்க தென்மேற்கு திசை ஏற்றதாகும். நடைபாதையில் இருபுறமும் மல்லிச் செடிகள் வளர்ப்பது வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் நிறையச் செய்யும்.
செய்யக் கூடாதவை:
வடக்கு திசையில் பெரிய மரங்களை வைப்பது சரியல்ல.
வீட்டின் மையப்பகுதியில் பெரிய மரங்கள் வைக்கக் கூடாது.
வீட்டைச் சுற்றிலும் முட் செடிகள் வைக்கக் கூடாது.
போன் சாய் மரங்கள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றல்களையே தரும்.
தோட்டத்தின் தென் மேற்கு, தெற்கு அல்லது தென் கிழக்கு பகுதியில் நீர் அமைப்புகள் வைக்கக் கூடாது.
வீட்டின் காம்பவுண்ட் சுவர்களில் பூந்தொட்டிகளை வைக்கக் கூடாது. தரையில் மட்டுமே வைக்க வேண்டும்.
வீட்டில் காய்ந்த பட்டுப்போன செடி, மரங்கள் இருக்கக் கூடாது.
மூங்கில் நாணல் செடிகளை வீட்டருகே வளரவிடக் கூடாது.
பருத்தி, புளி போன்ற செடிகள் தீய சக்திகளை கொண்டு வருவதால் அவற்றை வளர்க்கக் கூடாது.