இந்த மாதிரியான நண்பர்கள் உங்களுக்கு இருக்கிறார்களா?

நண்பர்கள்
friendshiphttps://www.focusonthefamily.com

ண்பன் என்றதும், ‘முஸ்தபா… முஸ்தபா’ என்றும், ‘நண்பன்தான் சொத்து நமக்கு’ என்றும் பல திரைப்படப் பாடல்கள் கேட்டு, இதுபோல நண்பர்கள் நம் வாழ்வில் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனச் சிந்தித்துப் பார்ப்போம். அதில் குழந்தைப் பருவத்திலிருந்து முதுமை பருவம் வரை உள்ள நண்பர்கள் நம் நினைவில் வருவார்கள். ஆனால், இதில் எத்தனை பேர் உங்களுக்கு உண்மையான நண்பர்களாக இருக்கிறார்கள் என்று தெரியுமா?

1. அவர்களுக்கு ஏதேனும் தேவைகள் இருந்தால் மட்டும் உங்களுடன் சேர்ந்து இருப்பார்கள். இல்லையென்றால் அழைப்பு அல்லது சமூக வலைத்தளங்களின் மூலம் செய்தி அனுப்புவார்கள். அதே, நீங்கள் அவர்களுடன் தொடர்புகொள்ள வேண்டுமென்றால் உங்கள் அழைப்பையோ, உங்கள் செய்தியையோ பார்க்க மாட்டார்கள். உங்களை நேரில் பார்த்தாலும் பார்க்காமல் சென்று விடுவார்கள்.

2. நீங்கள் அவர்களிடம் ஏதேனும் ரகசியங்களைப் பகிர்ந்து இருந்தால் அந்த ரகசியங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டார்கள். மற்றவர்களுக்கும் பரப்பச் செய்வார்கள். அவர்கள் உங்கள் சுயத்திற்கு ஒருபோதும் மதிப்பளிக்க மாட்டார்கள். ஆனால், நீங்கள் அவர்கள் கூறும் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லாமல் இருக்க வேண்டும் என்று மட்டும் நினைப்பார்கள்.

3. உங்களிடம் கொடுக்கப்பட்ட வாக்கினையும், செய்த சத்தியத்தையும் ஒருபோதும் காப்பாற்ற மாட்டார்கள். அதை ஏன் செய்யவில்லை என்று நீங்கள் கேட்டால் அதற்கு, ‘நீ இப்படிச் செய்து விட்டாய். அதனால்தான் செய்யவில்லை’ என்று பல காரணங்களைக் கூறி அவர்களின் மீதுள்ள தவற்றை உங்கள் மீது ஏற்றிக் கூறுவார்கள்.

இதையும் படியுங்கள்:
கோயில் மணியில் உள்ள அறிவியல் பற்றி தெரியுமா?
நண்பர்கள்

4. உங்களுக்கு ஏதாவது இக்கட்டான சூழ்நிலையை ஏற்பட்டால் அந்தச் சூழ்நிலையில் உங்களுக்குத் துணையாக ஒருவர் தேவைப்படுவார். அதுவும் நண்பனாக இருந்தால் ஓர் ஆறுதலாக இருக்கும். ஆனால், அந்தச் சூழ்நிலையில் நீங்கள் நண்பனாக நினைக்கும் நபர், உங்களை நண்பனாக நினைக்காத நபர் கண்டிப்பாக உங்களுடன் இருக்க மாட்டார். ஆனால், அவர்களுக்கு ஏதேனும் கஷ்டம் என்றால் பணத் தேவையாக இருந்தாலும் அல்லது உடன் இருக்க வேண்டும் என்ற தேவை இருந்தாலும் அவர் அணுகுவது உங்களை மட்டுமாக இருக்கும்.

இப்படித் தனது தேவைக்காகவும், தனது சுய லாபத்திற்காகப் பழகும் நண்பர்களிடமிருந்து சற்று விலகி இருங்கள். ஒரு நல்ல நண்பன் நூறு புத்தகங்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு தீய நண்பன் ஆயிரம் எதிரிகளுக்குச் சமமானவன் ஆவான். அதனால், நல்ல நண்பர்களைப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com