தனிமையின் இனிய 9 பயன்கள் தெரியுமா?

தனிமையின் இனிய 9 பயன்கள் தெரியுமா?

‘தனிமையிலே இனிமை காண முடியுமா?’ என்று சிலர் நினைப்பதுண்டு. தனிமை என்றால் குடும்பத்தினரையோ நண்பர்களையோ விட்டுவிட்டு வேறெங்காவது போவது என்று அர்த்தம் அல்ல. அவரவர் வீட்டிலேயே தினமும் ஒரு மணி நேரமாவது தனிமையை கடைப்பிடிப்பது நல்லது. தனிமையில் இருப்பதன் 9 பயன்களை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. சுயபுரிதல்: தனிமையில் இருக்கும்போது ஒருவர் தன்னுடைய உணர்வுகள், சிந்தனைகள், அனுபவங்கள் இவற்றைப் பற்றி எந்தவிதமான குறுக்கீடுகளும், தொந்தரவுகளும் இல்லாமல் நினைத்துப் பார்க்க முடியும்.

2. சுதந்திரம்: தனிமையில் ஒருவர் இருக்கும்போது அது படைப்பாற்றலுக்கான ஒரு அருமையான சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது. பிறருடைய தொந்தரவுகள், குறுக்கீடுகள் இல்லாமல் மிகவும் சுதந்திரமாக இயங்க முடியும். சுதந்திரமாக சிந்திக்க முடியும். புதிய கருத்துக்கள் தோன்றலாம். புதுப்புது விஷயங்களையும் புதுமையான சிந்தனைகளையும் பிரச்னைகளையும் தீர்க்கும் விஷயங்களையும் கண்டறியலாம்.

3. புத்துணர்ச்சி: தனிமையில் இருப்பது ஒருவிதமான மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கும். பரபரப்பான வாழ்க்கை முறைகளில் இருந்து சற்றே விலகி அமைதியை தழுவுவது மனதிற்கு சாந்தத்தையும் ஆழ்ந்த அமைதியும் கொடுக்கிறது. நன்றாக ஸ்ட்ரெஸ் ரிலீஸ் ஆவதை தனிமையில் இருக்கும்போது உணரலாம். ஒரு இயந்திரத்தின் பேட்டரிகளுக்கு ரீசார்ஜ் செய்வது போல தனிமையில் இருப்பது மனதிற்கும் உடலுக்கும் ஒரு ரீசார்ஜ் செய்வது போல புத்துணர்ச்சியைத் தரும்.

4. வளர்ச்சிக்கான வழி: ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் வளர்ச்சி அடைய வேண்டுமென்று நினைத்தால் தனிமையை தழுவுவது அவசியம். தனிமையில் இருக்கும்போது தனிப்பட்ட வளர்ச்சிக்கான நேரமாகக் கருதி பயனுள்ள வகையில் செலவிட வேண்டும்.

5. பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்: கைவேலைகள் செய்வது, பாட்டு கேட்பது போன்றவையும், புத்தகம் படிப்பது, கதை கட்டுரை எழுதுவது போன்றவற்றையும் செய்யலாம். எழுதுவதற்கும் படிப்பதற்கும் தனிமை மிகவும் அவசியம். அப்போதுதான் மனம் ஒன்றி அவற்றில் ஈடுபட முடியும். அதேபோல, ஆர்வமுள்ள விஷயங்களில் ஈடுபடுவதற்கு தனிமை உதவியாக இருக்கும். புதிய விஷயங்களை கண்டறியவும் கற்றுக்கொள்ளவும் தனிமை தேவைப்படும்.

இதையும் படியுங்கள்:
அழகுக்கு மட்டுமில்லை நெடுஞ்சாலை அரளிச் செடிகள்!
தனிமையின் இனிய 9 பயன்கள் தெரியுமா?

6. சுய பாதுகாப்பு: சுய பாதுகாப்பு நடைமுறைகளில் கவனம் செலுத்த தனிமை அனுமதிக்கிறது. உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கிய நிகழ்வுகளை தனிமையில் செய்யலாம். உடற்பயிற்சி, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை ஒரு தனி அறையிலோ தனிமையான இடத்திலோ அமர்ந்து செய்யும்போது நல்ல பலன் கிடைக்கும்.

7. தன்னையே அறிதல்: தனிமையில் இருக்கும்போது தன்னைப் பற்றிய உள்முக சிந்தனையில் ஈடுபடலாம். ஒருவர் தன்னை நன்கு அறிந்துகொள்ளவும் தன்னுடைய மதிப்பு என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளவும், உள்முக சிந்தனையில் ஈடுபட வேண்டும். தனக்கு என்ன தேவை? உண்மையில் எது முக்கியம் என்பதையும் தனிமை நமக்கு உணர்த்தும்.

8. உறவு மேலாண்மை: தனிமை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் ஆன உறவை பலமாக்குவதற்கு உதவுகிறது. தனிமையில் இருக்கும்போது பிறரை பற்றியோ குடும்பத்தினரை பற்றியோ நன்றாக சிந்திக்கவும் அவர்கள் மேல் அனுதாபத்தை செலுத்தவும் எப்படி அவர்களுடன் பேசுவது, பழகுவது என்பதைப் பற்றி யோசிக்கவும் முடியும்.

9. மன நிறைவு: தனிமையில் இருக்கும்போது அது மன நிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும் வழிகளுக்கும். உங்களுடன் நீங்களே நேரம் செலவழிப்பதை ரசிக்க வேண்டும். தனிமையில் இருக்கும்போது ஒரு உள்ளார்ந்த அமைதியை உணரலாம். மேலும், தனிமை மன நிறைவைத் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com