மனிதனின் சாஃப்ட்வேர் மூளை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Do you know about human software brain?
Do you know about human software brain?
Published on

னிதனை இயக்குவது மூளைதான். அதேபோல், மனிதனை சிந்திக்க வைப்பதும் மூளைதான். உடலுக்கு இருதயம் எப்படி முக்கியமோ, அதைவிட மிகவும் முக்கியம் மூளை. அதேபோல், மனிதனை மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது சிந்தனையே. அந்த சிந்தனையால் மனிதனை சிறப்பாக செயல்பட வைப்பது அவனது மூளையே. இக்கட்டான சூழ்நிலைகளிலும் மனிதனை சமயோசிதமாக சிந்திக்க வைக்கும் மூளையை பற்றிய சில தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

பொதுவாக, மூளையின் அமைப்பு முன் மூளை, நடு மூளை, பின் மூளை என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது. உடலில் மூளைதான் அதிக அளவில் ஆற்றலை பயன்படுத்துகிறது. ஏனெனில், மூளை சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு அதிக அளவில் ஆற்றல் தேவைப்படுகிறது. பிறக்கும் குழந்தையின் மூளை எடை சுமார் 340 கிராம் இருக்கும். மழலைப் பருவத்தில் இருந்து இளமை பருவத்திற்குள்ளாக மூளையின் எடை மூன்று மடங்காக அதிகரிக்கும்.

ஒவ்வொருவருக்கும் மூளையின் அளவு வேறுபட்டிருக்கும். மூளை அளவு அதிகமாக இருப்பவர்கள் கூடுதல் திறனுடன் செயல்படுவார்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மூளை சுமார் 1.5 கிலோ எடை கொண்டது. மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உள்ளே மஞ்சள், வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது. மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நியூரான் செல்கள் உள்ளன.

நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு வேதிசமிக்ஞைகளாகக் கொண்டு செல்கின்றன. இதன் மூலம் மூளை அடுத்தபடியான செயல்பாட்டினை உடலுக்குக் கட்டளையிடுகிறது. நினைவில் வைத்திருக்க வேண்டிய தகவல்கள், அன்றாட செயல்கள் போன்றவற்றை மூளையில் இருக்கும் செல்கள் சேமித்து வைத்துக்கொள்கின்றன.

மூச்சு விடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற இயல்பான செயல்களையும், சிந்தித்தல், புரிந்து கொள்ளுதல் போன்ற சிக்கலான உயர்நிலை செயல்களையும் மூளை கட்டுப்படுத்துகிறது. மற்ற உயிரினங்களை விடவும் இத்தகைய சிக்கலான உயர்நிலை இயக்கங்களை மனித மூளையே சிறப்பாக செய்கிறது. மனித மூளையில் திரவ பொருட்கள் 80 சதவீத அளவிற்கு இருப்பதால் மூளை மிகவும் மென்மையானதாக அமைந்துள்ளது. மேலும், பகல் நேரத்தை விட இரவு நேரங்களில்தான் மூளை அதிக சுறுசுறுப்பாகவும், கூடுதல் சிந்தனை திறன் உடையதாகவும் செயல்படுகிறது. உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே பயன்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் உடைகளில் பூஞ்சை வளராமல் இருக்க என்ன செய்யலாம்!
Do you know about human software brain?

மனிதன் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை மூளை தனது செயல்பாட்டிற்காகப் பயன்படுத்திக் கொள்கிறது. மூளையைச் சுற்றி தடிமனான மண்டை ஓடு எலும்புகள் உள்ளன. இவை ஆபத்து காலத்தில் மூளையை சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன. மேலும், தலை பகுதியில் ஏற்படும் அதிர்வுகளை முதுகுத் தண்டு நீர்மம் என்னும் நீர்ம பொருள் ஈர்த்துக் கொள்கிறது. இதனால் மனித மூளை பாதுகாப்பாகச் செயல்படுகிறது.

மனிதனை இயக்கும் மூளையை மனிதனின் சாப்ட்வேர் என்று சொன்னால் அது மிகையாகாது. நாம் தவறு செய்தாலும், ‘உனக்கு மூளை இருக்கா?’ என்று கேட்பார்கள். நல்லது செய்தாலும், ‘எப்பேர்ப்பட்ட மூளை’ என்பார்கள். நல்லதையும் கெட்டதையும் இந்த மூளைதானே அனுபவிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com