சால்ட் அண்ட் பெப்பர் விவாகரத்து பற்றி தெரியுமா?

Grey Divorce
Grey Divorce
Published on

ளம் வயது விவாகரத்துகள் அதிகரிப்பது போலவே 50 முதல் 60 வயது விவாகரத்துகளும் தற்போது அதிகரித்து வருகின்றன. இதுபோன்று 50 பிளஸில் நிகழும் பிரிவை கிரே டைவர்ஸ் (Grey Divorce) என்று அழைக்கிறார்கள். இதில் பிரபலங்கள், சாமானியர்கள் என்ற பாகுபாடெல்லாம் எதுவும் கிடையாது.

கிரே விவாகரத்து, சில்வர் ஸ்பிளிட்டர் அல்லது டைமண்ட் விவாகரத்து என்று பல வழிகளில் அழைக்கப்படும் சால்ட் அண்ட் பெப்பர் விவாகரத்து 50 வயதுக்கு மேற்பட்ட தம்பதிகள், வயதான குழந்தைகளை உடையவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்யும் நிகழ்வு மிகவும் வருத்தமானது. பல வருடங்களை ஒன்றாகக் கழித்த தம்பதிகள், நீண்ட நேரம் ஒன்றாக செலவழித்த பிறகும் பிரிந்து செல்பவர்கள் பிற்கால வாழ்க்கையில் விவாகரத்து செய்வது பல சிக்கல்களுடன் நிதிச் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

கிரே டைவர்ஸுக்கான காரணங்கள்:

நிதி சுதந்திரம்: பெண்கள் இன்று மிகவும் சுதந்திரமாக இருக்கிறார்கள். சொந்தத் தொழில், வேலை என்று இருப்பவர்களுக்கு திருப்தியற்ற திருமணத்தை விட்டு வெளியேற இது வழிவகை செய்கிறது.

மாறும் சமூக அணுகுமுறைகள்: இப்போதைய சமூகத்தில் விவாகரத்து என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனால் வயதானவர்களுக்கு அவற்றிலிருந்து வெளியேற மிகவும் எளிதாக இருக்கிறது.

ஓய்வு: ஓய்வுக்குப் பிறகு தம்பதியினர் ஒன்றாக சேர்ந்து அதிக நேரத்தை செலவிடத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் ஓய்வு பெற்றதும் எப்படி வாழ விரும்புகிறார்கள் என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால் இந்தப் பிரிவு நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

வெற்று நெஸ்ட் சிண்ட்ரோம்: குழந்தைகள் திருமணம் ஆகி வீட்டை விட்டு சென்றதும் இவர்களுக்கு என்று தனியான ஆர்வங்களோ, குறிக்கோள்களோ, பகிர்ந்து கொள்ள சுவாரஸ்யமான விஷயங்களோ இல்லாமல் போய்விடுவதால் இந்தப் பிரிவு நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்படும் பாதிப்புகள்:

1. பிரிவின் காரணமாக வாழ்க்கையில் ஒரு வெறுமையும், நிறைய மன அழுத்தமும் ஏற்படுகிறது. இவை சரியாக சிறிது காலம் எடுக்கும்.

2. ஒருவருடைய விருப்பத்திற்கு ஏற்ப உயில்கள், பவர் ஆஃப் அட்டார்னி போன்ற பல சட்ட அம்சங்களை தம்பதிகள் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் வாழ்க்கையில் இவ்வகையான விவாகரத்துகள் அவர்களை சோர்வடையச் செய்யக்கூடும்.

3. வயதான காலத்தில் ஒற்றை வாழ்க்கையை நிர்வகிப்பது சிக்கலானது மற்றும் சலிப்பை ஏற்படுத்தக் கூடியது.

4. சமூகத்தில் இவர்களைப் பற்றிய பார்வை மோசமானதாக ஆகலாம். இதன் மூலம் இவர்கள் தனிமையை உணர ஆரம்பிப்பார்கள்.

5. எந்த வயதிலுமே விவாகரத்து என்பது உணர்ச்சி ரீதியாக சிக்கல் நிறைந்தது. அதிலும் பல வருடங்கள் ஒன்றாக இருந்த வயதான தம்பதிகளுக்கு இது அதிகமான தாக்கத்தை உண்டுபண்ணும்.

இதையும் படியுங்கள்:
உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க  இந்த 3 பொருட்கள் போதுமே!
Grey Divorce

6. வயது வந்த பிள்ளைகளின் உணர்வுபூர்வமான தாக்கங்களும் சொல்ல முடியாத அளவில் இருக்கும். இதனால் பிள்ளைகள் குடும்ப ஸ்திர தன்மையை இழந்து விட்டதாக உணரலாம்.

7. சொத்துக்களை பிரிப்பது, குறிப்பாக ஓய்வூதிய நிதிகள் சிக்கலான விஷயமாக இருக்கும். இது இரு தரப்பினரின் நிதி பாதுகாப்பையும், வாழ்க்கைத் துணையின் ஆதரவையும்  பாதிக்கலாம்.

இந்தப் பிரிவு ஏற்படுவதைத் தடுக்க என்ன செய்யலாம்?

சால்ட் அண்ட் பெப்பரில் பிரிவு ஏற்படுவதை தடுக்க தம்பதியினர் ஒருவரின் விருப்பத்திற்கு மற்றொருவர் ஒத்துபோவதும், உரிய மரியாதையை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதும், சொத்துக்களை இருவரும் சேர்ந்து பாதுகாப்பதும், வாழ்வில் விட்டுக்கொடுத்து செல்வதும், வயது வந்த பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் இம்மாதிரி சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com