வெனிலா பிரியரா நீங்க? போச்சு போங்க...

Vanilla Flavour
Vanilla Flavour
Published on

நாம் அனைவரும் ஒருமுறையேனும் வெனிலா Flavour-ரை டேஸ்ட் பண்ணியிருப்போம். இதில் சிலருக்கு ஐஸ்கிரீம் என்றாலே அதில் வெனிலா Flavour தான் என்ற அளவிற்கு பிடிக்கும். ஐஸ்கிரீமில் இருந்து கேக் தயாரிப்பது வரை பல உணவுப் பொருள்களில் இந்த வெனிலா Flavour பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நாம் உண்ணும் வெனிலா Flavour உண்மையான வெனிலாவே கிடையாது என்பது தெரியுமா?

ஆம், குங்குமப்பூ உலகில் விலையுயர்ந்த உணவுபொருள் என்பது நமக்குத் தெரியும். அதற்கு அடுத்தப்படியாக உள்ள விலையுயர்ந்த உணவுப்பொருள் எது என்று என்றைக்காவது நீங்கள் யோசித்தது உண்டா? 100% சுத்தமான வெனிலா சாறுதான் அது.

ஒரு வெனிலா விதை, முளைத்து, மரமாகி, முதல் முறை காய்விடுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகுமாம். 6 கிலோகிராம் பச்சை வெனிலா காய்கள் 1 கிலோகிராம் பீன்ஸை உற்பத்தி செய்கின்றன. மேலும், முதல் வருடத்தில் இருந்து நல்ல விளைச்சலை வழங்கும் மற்ற மசாலாப் பொருட்களைப் போலல்லாமல், இது குறைவான விளைச்சலையே தருகிறது. அதோடு, இதை அறுவடை செய்யும் முறையும் சற்று நுணுக்கனமானது. சரியான கால கட்டத்தில் வெனிலா காய்களை அறுவடை செய்வது முக்கியம். முதிர்ச்சியடையாத காய்கள் குறைந்த தயாரிப்புக்கு வழிவகுக்கிறது. அதிக பழுத்த காய்களை அறுவடை செய்யும்போது அவை பிளவுபட நேரிடலாம். மேலும்,100% தூய்மையான வெனிலா சாறை தயாரிப்பதற்கு, முதலில் வெனிலா பீன்ஸ்களை 3 வருடம் காத்திருந்து வளர்த்து, அதை நன்றாக உலர வைக்க வேண்டும். உலர்ந்த வெனிலா பீன்ஸ்களை எத்தில் ஆல்கஹால் திரவத்தில் 5 முதல் 6 மாதங்கள் வரை ஊறவைத்து வெனிலா சாறு தயாரிக்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால்தான், குங்குமப் பூவிற்கு அடுத்து உலகின் விலை உயர்ந்த உணவுப்பொருள் பட்டியலில் இரண்டாவது இடத்தை வெனிலா பிடித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சுவையான சாக்லேட் பணியாரம் செய்யலாம் வாங்க! 
Vanilla Flavour

ஆனால், ஐஸ்கிரீம், கேக் தயாரிப்பதற்காக நாம் பயன்படுத்தும் வெனிலா எஸ்ட்ராக்ட் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை அறிந்தால் நீங்கள் அதை உண்பதையை விட்டுவிட வாய்ப்புகள் இருக்கிறது. என்னம்மா சொல்ற-னு தான கேக்கறீங்க.

நீர்நாய், நீரெலி போன்ற விலங்குகளின் மலவாய் சுரப்பியில் இருந்து சுரக்கும் Castoreum எனும் திரவத்தில் இருந்தும் வெனிலா தயாரிக்கப்படுகிறது. இந்த Castoreum திரவம் வெனிலாவின் சுவையைப்போல் அப்படியே இருக்குமாம்.

இருப்பினும், யுனைடெட் ஸ்டேட்ஸில், 'உணவு மற்றும் மருந்து நிர்வாகம்', காஸ்டோரியம் சாறை 'பொதுவாக பாதுகாப்பான உணவு சேர்க்கை' என்ற பட்டியலில் இணைத்துள்ளது. அதன் காரணமாக, பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் காஸ்டோரியத்தைப் பயன்படுத்தும் போது, அதை குறித்து சட்டப்பூர்வமாக தகவல் வெளியிட வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக மூலப்பொருள் பட்டியல்களில் 'இயற்கை சுவைகள்' என்று குறிப்பிட்டால் போதுமானது.

Castoreum ஆண்டுக்கு சுமார் 136 கிலோகிராம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், ஐஸ்கிரீம்கள், கேக் போன்ற தயாரிப்புகளைத் தாண்டி, பெரும்பாலும் வாசனை திரவியத் தொழிலில் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

ஐஸ்கிரீம்கள், கேக் போன்ற தயாரிப்புகளில், வெனிலா (Flavour) சுவை கூட்ட, Vanillin எனப்படும் ஆய்வக இரசாயன பொருள்தான் 99% உபயோகப்படுத்தப்படுகிறது. எனவே, நாம் பயன்படுத்தும் செயற்கை வெனிலா சாறில் Castoreum இருப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவு.

இருந்தாலும், கொஞ்சம் உஷாராகவே இருந்துக்கோங்க மக்களே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com