புதிதாக வாங்கிய இரும்பு கடாயை Seasoning செய்வது எப்படி தெரியுமா?

Do you know how to season a newly purchased cast iron pan?
Do you know how to season a newly purchased cast iron pan?Image Credits: Dheivegam
Published on

புதிதாக இரும்பு கடாய், தோசைக்கல் போன்ற பாத்திரங்களை வாங்கும்போது அதை ஒருமுறை நீரில் கழுவிவிட்டு, அப்படியே அடுப்பில் வைத்து உணவு சமைக்க ஆரம்பித்து விடுவீர்களா?அப்படியென்றால், அந்தப் பழக்கத்தை இன்றிலிருந்து மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில், அதில் நிறைய ஆரோக்கியக் கேடுகள் உள்ளன. புதிதாக வாங்கிய இரும்புக் கடாயை Seasoning செய்வதை என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

முதலில் புதிதாக வாங்கியக் கடாயை வெதுவெதுப்பான சோப்பு தண்ணீரில் பஞ்சு போன்ற ஸ்க்ரப்பை வைத்து நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்துக்கொள்ளவும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி சேர்க்கவும். இல்லையென்றால் ஒரு கைப்பிடி புளியை சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது நன்றாகத் தண்ணீர் கொதித்து வரும் வரை அடுப்பில் வைத்திருங்கள். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து ஆற விடுங்கள்.

அடுத்து, மறுபடியும் கடாயை நன்றாக பஞ்சு போன்ற ஸ்க்ரப்பை வைத்து கழுவிவிட்டு, இன்னும் இரண்டுமுறை இதே முறையை பின்பற்றவும். கடாயை ஸ்க்ரப் செய்வதற்கு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம்.

இப்போது கடாயை நன்றாகத் துடைத்துவிட்டு நல்லெண்ணெய்யை தடவிக்கொள்ளவும். கடாயை அடுப்பில் மிதமான சூட்டில் புகை வரும் வரை வைத்து எடுக்கவும். கடாய் ஆறியதும், எண்ணெய்யை நன்றாகத் துடைத்துவிட்டு ஸ்க்ரப் செய்யவும். இதே முறையை மேலும் இரண்டு தடவை செய்யவும். இப்போது உங்கள் இரும்பு கடாய் சமையலுக்குப் பயன்படுத்த தயாராகி விட்டது.

புளியிலே Tartaric acid உள்ளது. இது இரும்புக் கடாயில் உள்ள எண்ணெய், கிரீஸ், அழுக்கு ஆகியவற்றை எடுக்க உதவும். மேலும், புளி அசிடிக் தன்மையைக் கொண்டிருப்பதால், இரும்பு கடாயில் உள்ள துருவையும் நீக்க உதவும். இதைத்தவிர எலுமிச்சை, பேக்கிங் சோடா, வினிகர் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
தலைக்கு சீயக்காய் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Do you know how to season a newly purchased cast iron pan?

புதிதாக வாங்கிய இரும்புக் கடாயை Seasoning செய்வதன் மூலம் உணவுப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். சமைப்பதும் சுலபமாகவும், எளிமையாகவும் இருக்கும். துருப்பிடிப்பதிலிருந்து பாதுகாப்பதனால், அதிக காலம் கடாயை வைத்துப் பயன்படுத்தலாம். Seasoning செய்யவில்லை என்றால் பெரிதாக பிரச்னை இல்லை என்றாலும், கடாயில் கண்களுக்குத் தெரியாமல் ஒட்டியிருக்கும் அழுக்கு, தூசு, துரு போன்றவை உணவு சமைக்கும்பொழுது அதில் கலக்கக்கூடும். எப்போதுமே இரும்புக் கடாய், தோசைக்கல் போன்ற பாத்திரங்களை நன்றாக கழுவி Seasoning செய்துப் பிறகு பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com