பிக் பேங் டெக்னிக் எந்தெந்த சூழ்நிலைகளில் பயன் தரும் தெரியுமா?

big bank technique
big bank techniquehttps://www.etiquetteschoolofamerica.com

பிக் பேங் (Big Bang) டெக்னிக் என்பது பல்வேறு சமூக மற்றும் தொழில் முறை சூழ்நிலைகளில் வலுவான, ‘ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்’ எனப்படும் முதல் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு ஸ்மார்ட் உத்தியாகும். இதன் மூலம் ஒருவரால் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள தொடர்புகளை முதல் தோற்றத்திலேயே உருவாக்க முடியும். அதை எப்படி செயல்படுத்துவது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

பிக் பேங் டெக்னிக்கை பயன்படுத்துவது எப்படி?

1. சூழ்நிலையை நம்பிக்கையோடு அணுக வேண்டும். உறுதியான கை குலுக்கல், அன்பான புன்னகை, நிமிர்ந்து நின்று எதிரில் இருப்பவர்களின் கண்களை பார்த்து பேசுதல் போன்றவற்றில் உங்களது தன்னம்பிக்கை வெளிப்படையாக தெரியும். மற்றவர்கள் மீது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

2. நேர்மறையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். உரையாடல் மற்றும் செயல்பாட்டில் உண்மையான அர்த்தத்தை, உற்சாகத்தை வெளிப்படுத்த வேண்டும்.

3. திறந்த மனதுடன் புதிய அனுபவங்கள் மற்றும் யோசனைகளை சொல்லவும், ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். சிந்தனை மிக்க கேள்விகளை கேட்டு, பதில்களை கேட்டு பிறரை அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுத்த வேண்டும்.

4. உங்கள் ஆளுமை மதிப்புகள் மற்றும் ஆர்வங்களை வெளிப்படையாகவும் நேர்மறையாகவும் வெளிப்படுத்த வேண்டும். இது மற்றவர்கள் உங்கள் மேல் நம்பிக்கையும் உறவையும் பலப்படுத்த உதவும்.

5. சந்திக்கப்போகும் நபர்கள் அல்லது விவாதத்தின் தலைப்பை முன்கூட்டியே ஆராய்ந்து அந்த சூழ்நிலைக்கு தயாராக வேண்டும். சில பின்னணி அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலம் திறம்பட உரையாட முடியும்.

6. பிறரது கருத்துக்கள் நன்றாக இருந்தால் அதை பாராட்டு மூலம் வெளிப்படுத்தலாம். ஆரம்ப சந்திப்புக்கு பின் இணைப்பை வலுப்படுத்த சுருக்கமான நன்றி செய்தி அனுப்பலாம்.

எந்த சூழ்நிலைகளில் அது பயனுள்ளதாக இருக்கும்?

1. வேலை நேர்காணல்கள் ( இன்டர்வியூக்கள்): வேலை நேர்காணல்களின்போது ஒருவர் வலுவான முதல் தோற்றத்தை உருவாக்குவது மிகவும் முக்கியம். பிக்பேங் டெக்னிக் நம்பிக்கையுடன். ஆர்வமுடனும் நன்கு தயாராக இருக்கவும் உதவும். நேர்காணல் செய்பவரை எளிதில் கவர்ந்து வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ளலாம்.

2. நெட்வொர்க்கிங் நிகழ்வுகள்: நெட்வொர்க்கிங் நிகழ்வுகள் புதிய நபர்களைச் சந்திக்கவும் தொழில்முறை உறவுகளை உருவாக்கவும் வாய்ப்புகளை வழங்குகின்றன. ‘பிக் பேங்’ நுட்பம், சாத்தியமான தொடர்புகளில் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தி, அர்த்தமுள்ள இணைப்புகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும்.

3. சமூகக் கூட்டங்கள்: விருந்து, சமூகக் கூட்டம் அல்லது ஒரு சந்திப்பாக இருந்தாலும் சரி, ‘பிக் பேங்’ உத்தியானது நீங்கள் தனித்து நிற்கவும் மற்றவர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவும். நம்பிக்கை, நேர்மறை மற்றும் நம்பகத்தன்மையுடன் தொடர்புகளை அணுகுவதன் மூலம், நீங்கள் நல்லுறவையும், புதிய நட்பையும் எளிதில் உருவாக்கலாம்.

இதையும் படியுங்கள்:
மஷ்ரூம் காபி குடிப்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!
big bank technique

4. வாடிக்கையாளர் சந்திப்புகள்: ஒரு தொழில் முனைவோர் அல்லது வியாபாரம் செய்பவர், வாடிக்கையாளர்களை சந்திக்கும்போது, நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை நிலைநாட்ட வலுவான முதல் தோற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். ‘பிக் பேங்' நுட்பம், தொழில்முறை, திறமை மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்த உதவும். மேலும், வாடிக்கையாளர்களை கவர்வதன் மூலம் தொழில் விருத்தியாக உதவும்.

5. விளக்கக் காட்சிகள் அல்லது பொது மேடைப்பேச்சுகள்: விளக்கக்காட்சிகளை வழங்கும்போது அல்லது பொது மேடையில் பேசும்போது, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க, வலுவான முதல் தோற்றத்தை ஏற்படுத்த ‘பிக் பேங்’ நுட்பத்தைப் பயன்படுத்தி பார்வையாளர்களுக்கு ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தலாம். மிக எளிதாக அவர்கள் உங்கள் கட்டளைகளை பின்பற்றுவார்கள்.

6. பங்குதாரர்களுடனான சந்திப்புகள்: பங்குதாரர்கள், முடிவெடுப்பவர்கள் அல்லது செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்கும்போது, அவர்களின் ஆதரவை அல்லது ஒப்புதலைப் பெறுவதற்கு நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துவது முக்கியம். ‘பிக் பேங்’ நுட்பத்தைப் பயன்படுத்துவது தொழில்முறை, திறமை மற்றும் உற்சாகத்தை வெளிப்படுத்த உதவுகிறது. உங்கள் யோசனைகள் அல்லது முன்மொழிவுகளுக்கு சிறந்த ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com