விஷத்தை முறிக்கும் சிறியாநங்கை தெரியுமா?

siriyanangai breakdown the poison
siriyanangai breakdown the poison

சிறியாநங்கை செடி வீட்டில் இருந்தால் அந்த இலைகளைப் பறித்து சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடிக்க வேண்டும். அதே அளவு சர்க்கரையைக் கூட்டி காலை, மாலை இருவேளையும் அரை ஸ்பூன் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும்.

இது காய்ச்சல், கல்லீரல் நோய்களைப் போக்கக்கூடியது. மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்த மருந்து. மேலும், ஃப்ளூ காய்ச்சல், சைனஸ் மற்றும் சளி தொல்லைகளால் ஏற்படும் நோய்களுக்கும், மலேரியாவுக்கும் இது சிறந்த மருந்தாகத் திகழ்கிறது. மேலும், இது இரத்த சுத்திகரிப்பானாகவும் பயன்படுகிறது.

பாம்பு தீண்டியவர்களுக்கு விஷ முறிவுக்காக சிறியாநங்கை இலைகளைக் கொடுத்து சாப்பிடச் சொல்வார்கள். அந்த இலை எப்பொழுது கசக்கிறதோ அதுவரை சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி கசப்பு சுவை வந்தால்தான் விஷம் முறிந்துவிட்டது என்று அர்த்தம். விஷத்தை முறிக்கும் தன்மை உடையது இந்த சிறியாநங்கை. இதை தொட்டிகளில் வைத்தும் வளர்க்கலாம். அவ்வப்பொழுது வண்டுகடி, பூச்சிக் கடி என்று கடித்தால் கூட அதில் இரண்டு இலைகளைப் பறித்து மென்று சாப்பிடலாம். அளவுக்கு அதிகமாக இதை சாப்பிடக்கூடாது. நோய்வாய்ப்பட்டிருக்கும் காலத்தில் மட்டும்தான் சாப்பிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் தேநீர் வகைகள்!
siriyanangai breakdown the poison

இந்த இலையின் கசப்புத் தன்மையானது நீண்ட நேரம் வரை நாக்கில் தங்கிவிடும். இதன் இலையை அரைத்து ஒரு கொட்டை பாக்கு அளவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட்கொள்ள, உடல் வலிமை பெறும். கிராமத்தில் இதை மிகவும் நோஞ்சானாக இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள். சிறியாநங்கை இலைப் பொடியுடன் சிறிதளவு மிளகு, சீரகம், தட்டிப்போட்டு நன்கு காய்ச்சி அதனுடன் பனங்கற்கண்டை பொடித்து சேர்த்து அருந்தலாம். இதனால் ஜுரம் நீங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com