வாழ்க்கையில் நம்பக் கூடாத 4 பேர் யார் தெரியுமா?

Untrustworthy people
Untrustworthy people
Published on

நாம் வாழும் இந்த அழகான வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டையும் எப்போதும் கணிக்க முடியாது. ஆதலால் ஜோதிட சாஸ்திரங்களும், முன்னோர்களும், அறிஞர்களும் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் நமது வாழ்க்கையில் நம்பக் கூடாத நான்கு வகை நபர்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. பொய் சொல்பவர்கள்: நாம் நமது வாழ்க்கையில் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் போது நமக்கு உதவாதவர்கள், நாம் இறக்கத்திற்கு செல்லும் போது அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அப்படி பொய்யான தோற்றம் கொண்டு, பொய் சொல்பவர்களுடன் ஒருபோதும் பழகக் கூடாது. காரணம் பொய் சொல்பவர்களுக்கு ஒருவருடனான எந்த உறவிலும் நிலைத்தன்மை  இருக்காது. அத்தகைய நபர்கள் தங்கள் சொந்த நலனை மட்டுமே முக்கியமாகக் கொண்டு, தான் தப்பிக்க வேண்டும் என்றால் எந்த பொய் வேண்டுமானாலும் சொல்லி நம்மை ஏமாற்றவும் முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Untrustworthy people

2. கொடுத்த வாக்கை மீறுபவர்கள்: யார் ஒருவர் நிலையான பேச்சுத் திறனை கொண்டிராதவர்களாக இருப்பார்களோ அவர்களுடன் நட்பு வைக்கக் கூடாது. ஏனெனில், வாக்குறுதி கொடுத்துவிட்டு நேரம் வரும்போது அதனை மீறி செயல்படுபவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல. அத்தகையவர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக உறவை மாற்றிக் கொள்வார்கள். மேலும், அவர்களது பேச்சு போலி என்பதால் அவர்களது சேர்க்கை ஆபத்தானது.

3. சுயநலவாதிகள்: மற்றவர் நலன்களை கொஞ்சமும் மதிக்காத  சுயநலவாதிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அத்தகையவர்கள் தங்கள் சொந்த நலனைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் நண்பர்களாக இருக்கவே முடியாது. இந்த உறவு நமக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் அவர்களிடம் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் எதிர்கால நலனுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள்
Untrustworthy people

4. பொறாமைப்படுபவர்கள்: உங்கள் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் எப்போதும் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பதோடு, பொறாமைப்படுபவர்களாகவும் நல்ல நண்பர்களாகவும் இருக்க மாட்டார்கள். இவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  உங்களை அவமானப்படுத்தவும் முயற்சிப்பார்கள். இதுபோன்றவர்களுடன் நட்பு கொள்வது  தன்னம்பிக்கையைப் பலவீனப்படுத்தும் என்பதால் அவர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லது.

மேற்கூறிய 4 வகை நபர்களும் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்பதால் அவர்களிடம் இருந்து எப்போதும் விலகியே இருப்பது நல்லது. நல்ல நண்பர்களை அடையாளம் கண்டு நம்பிக்கைக்குரியவர்கள் ஆக்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com