மேலதிகாரியிடம் பணியாளர்கள் ஒருபோதும் சொல்லக்கூடாத 7 விஷயங்கள் எவை தெரியுமா?

Manager with worker
Manager with workerhttps://www.usnews.com
Published on

ரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பணியாளர்கள் மற்றும் மேலாளர்  போன்ற அனைவருமே முக்கியம். தங்களது மேலதிகாரியிடம் பேசும்போது பணியாளர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். தங்கள் மேலாளர் அல்லது முதலாளியிடம் ஒருபோதும் சொல்லக்கூடாத ஏழு விஷயங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ‘அது என் வேலை இல்லை’: ஒரு மேலாளர் பணியாளரிடம் ஏதாவது ஒரு வேலை செய்யச் சொல்லும்போது, ‘அது என்னுடைய வேலை அல்ல’ என்று  சொல்லப் கூடாது. ‘என் துறையின் கீழ் இந்த வேலை வராது. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை’ என்பது போல அர்த்தம் தரும் இந்த வாக்கியம். புதிய பொறுப்புகளை ஏற்க விரும்பாதது போலவும் ஒத்துழைக்காத தன்மையையும் இது குறிக்கிறது.

2. ‘என்னால் சக பணியாளர் உடன் வேலை செய்ய முடியாது’: இந்த சொற்றொடர் சக ஊழியரைப் பற்றி புகார் செய்வதோடு அல்லாமல், ஒருவருடைய திறனையும் மோசமாக பிரதிபலிக்கும். பிறருடன் ஒத்துப் போகாத தன்மையை பறைசாற்றுவது போல் ஆகும். எனவே, இந்த சொற்றொடரை சொல்லக்கூடாது.

3. ‘எப்படிச் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை’: எல்லாவற்றையுமே கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவசியம் இல்லை என்றாலும் புதிய வேலையை மேலாளர் தரும்போது அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்வது அறியாமை. அதற்கு பதிலாக அதை செய்வது எப்படி என்று அதற்கான வழிகாட்டுதலை கேட்டுத் தெரிந்து கொண்டு அதைச் செய்யலாம்.

4. ‘இது நியாயமற்றது’: இந்த மாதிரி சொற்றொடர் எந்த முதலாளிக்கும் அல்லது மேலாளருக்கும் பிடிக்காது. தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை சான்றுகளுடன் ஒரு மேலாளரிடம் முன் வைக்க வேண்டுமே தவிர, நியாயம் இல்லை என்று புகார் செய்வது அல்லது தீர்ப்பு சொல்வது போல சொற்றொடர் அமைவதை எந்த மேலாளரும் அல்லது முதலாளியும் விரும்ப மாட்டார்கள். அதற்கு பதிலாக தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லலாம்.

இதையும் படியுங்கள்:
விரதம் மற்றும் உடற்பயிற்சிக்குப் பிறகு ஜவ்வரிசி உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
Manager with worker

5. ‘அதெல்லாம் முடியாது’: ஏதாவது வேலையை அல்லது யோசனையை மேலாளர் கூறும்போது, ‘அதெல்லாம் முடியாது’ என்று அப்பட்டமாக நிராகரிப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். சவாலான விஷயங்களைச் செய்வதற்கு நீங்கள் தயார் இல்லை என்பதை பறைசாற்றுவது போல இந்த வாக்கியம் அமையும். இதனால் அவர்கள் மனதில் ஒரு எதிர்மறையான கண்ணோட்டம் உண்டாகும். அதற்கு பதிலாக அதில் உள்ள சிரமங்களை எடுத்துச் சொல்லலாம். மேலும், அதற்கான மாற்று வழிகளையும் பரிந்துரைக்கலாம்.

6. ‘ஒரு யூகத்தில் செய்தேன்’: ஒரு பணியாளர் விவரங்களை உறுதிப்படுத்தாமல் அனுமானமாக ஒரு வேலையை செய்வது தவறுகளுக்கு வழிவகுக்கும். ‘ஒரு யூகத்தில் அதை செய்துவிட்டேன்’ என்று சொல்வதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, எதையும் சரியாக தெரிந்து கொண்டு செய்ய வேண்டும்.

7. ‘பிசியாக இருந்தேன்’: தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்யாமல் காலதாமதம் செய்து விட்டு அதற்கான காரணம் கேட்டால், ‘நான் வேறு வேலையில் பிஸியாக இருந்தேன்’ என்று பணியாளர்கள் சொல்வதை முதலாளியோ, மேலாளரோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் மோசமான நேர மேலாண்மை கொண்டவர்கள் அல்லது செய்யும் வேலைக்கு முன்னுரிமை அளிக்காதவர் என்று தவறான அபிப்பிராயம் பணியாளர் மேல் வரக்கூடும். அதற்கு பதிலாக தற்போதைய பணிச்சுமையை விளக்கிச் சொல்ல வேண்டும். புதிய  பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் உதவி கேட்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com