ஞாயிற்றுக்கிழமை என்றாலே உடனே நினைவுக்கு வருவது ஓய்வு என்ற வார்த்தைதான். வாரமெல்லாம் உழைக்கத் தயாராகும் மனிதர்கள் ஒரு நாள் ஓய்வுக்கு ஏங்குகிறார்கள். அடுத்த வேலையை சரியானபடி செய்வதற்கான புத்துணர்ச்சியை கொடுக்கக்கூடியதுதான் ஓய்வு . அந்த வகையில் ஓய்வின் 7 வகைகள் குறித்த விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.
ஓய்வின் வகைகள்:
1. மன ஓய்வு: உடல் ஓய்வை போலவே மன ஓய்வும் முக்கியமானது. புத்துணர்ச்சியை உணரவும், சோர்வைத் தவிர்க்கவும் நம் உடலுக்கு மன ஓய்வு தேவை. மன ஓய்வை அடைய ஒருவர் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து தன்னை விலக்கி வைத்து மூளை ஓய்வெடுக்கக்கூடிய ஒரு இடைவெளியை எடுக்க வேண்டும். இதில் வேலையில் இருந்து ஓய்வு எடுப்பது ,தொலைபேசியை அணைப்பது, தியானம் செய்வது, ஒரு புனை கதை புத்தகத்தைப் படிப்பது, ஒரு இலகுவான நிகழ்ச்சி பார்ப்பது மற்றும் அமைதியாக உட்கார்ந்துகொள்வது ஆகியவை அடங்கும்.
2. உடல் ஓய்வு: உடலுக்கான ஓய்வு என்பது, ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெறுதல், மசாஜ் பெறுவது அல்லது மறுசீரமைப்பு யோகா பயிற்சி செய்தல், குளித்தல், நீட்சி மற்றும் இயற்கையில் நடந்து செல்வது ஆகியவற்றை செய்வதன் மூலம் உடல் ஓய்வு பெற்று சுறுசுறுப்பை உணர முடியும்.
3. உணர்ச்சி ஓய்வு: நம்முடைய சொந்தத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றில் சுதந்திரமாக செயல்படுதல் அல்லது வெளிப்படுத்துதலே உணர்ச்சி ஓய்வு ஆகும்.
4. படைப்பு ஓய்வு: நம்மிடம் இயற்கையில் இருப்பது அல்லது பிரமிப்பு அல்லது ஆச்சரியத்தைத் தூண்டும் ஒரு செயலைச் செய்வது படைப்பு ஓய்வு ஆகும்.
5. ஆன்மிக ஓய்வு: நம்மை விட பெரிய ஒன்றுடன் இணைந்து செயல்படுவது ஆன்மிக ஓய்வு எனப்படும்.
6. சமூக ஓய்வு: உங்களிடமிருந்து எதுவும் தேவையில்லாத அல்லது உங்களைச் சார்ந்து இல்லாத நபர்களுடன் நேரத்தை செலவிடுதல் சமூக ஓய்வு எனப்படும்.
7. உணர்ச்சி ஓய்வு: தொழில்நுட்பம் அல்லது பிரகாசமான விளக்குகள் மற்றும் ஒலிகளிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்வது உணர்ச்சி ஓய்வு ஆகும்.
மன ஆரோக்கியம் என்பது வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகும். நாம் எப்படி நினைக்கிறோம், உணர்கிறோம், செயல்படுகிறோம் என்பதைப் பாதிக்கும் உணர்ச்சி, உளவியல் மற்றும் சமூக காரணிகளை உள்ளடக்கியது. நல்ல மன ஆரோக்கியம், மன அழுத்தத்தை சமாளிக்க, உதவுவதால் மேற்சொன்ன ஏழு ஓய்வுகளைப் பெற்று வாழ்வில் இன்புறுவோமாக!