சுயமரியாதையற்ற நபர்களின் 8 அறிகுறிகள் தெரியுமா?

self respectless persons
self respectless persons
Published on

1. நேரத்தைப் புறக்கணித்தல்: ‘காலம் பொன் போன்றது’ என்கிற கூற்று மிகவும் உண்மை. ஆனால், சுயமரியாதை இல்லாதவர்கள் நேரத்தை மதிக்க மாட்டார்கள். எப்போதும் தாமதமாக ஓர் இடத்துக்குச் செல்வது, கடைசி நிமிஷத்தில் திட்டங்களை ரத்து செய்வது என்று நேரத்தை பொருட்படுத்தாமல் நடந்து கொள்வார்கள். பிறருடைய நேரத்தை வீணடிப்பது அவருக்கு செய்யும் அவமானம் ஆகும். இவற்றைப் பொருட்படுத்தாமல் இருக்கும் நபருக்கு சுயமரியாதை இல்லை என்று பொருள்.

2. எதிர்மறையான சுவையாய் பேச்சு: சுயமரியாதை இல்லாத நபர்கள் பெரும்பாலும் கடுமையான உள் உரையாடலில் ஈடுபடுவார்கள். சிறிய தோல்விகள் மற்றும் குறைபாடுகளுக்கு கூட தங்களை கடுமையாக விமர்சித்துக் கொள்கிறார்கள். மேலும், தாங்கள் திறனற்றவர்கள் என உறுதியாக நம்புவார்கள். எதிர்மறையான சுயபேச்சு சுயமரியாதை குறைவதற்கு வழி ஏற்படுத்தும். மேலும், தகுதியற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும். நம்பிக்கையின்மை சந்தேகம் போன்றவற்றை விளைவிக்கும்.

3. மக்களை மகிழ்விப்பது: ‘பீப்பிள் ப்ளீசிங்’ என்று சொல்லப்படும் பிறரை மகிழ்விக்கும் செயலில் ஈடுபடுவார்கள். தங்களை மதிக்காதவர்களுக்கும், பிறரின் ஒப்புதலுக்கும் மகிழ்ச்சிக்கும் முன்னுரிமை தருவார்கள். மற்றவர்கள் கூறுவதை ஆராயாமல், ஆமாம் என்று சொல்வது, தனிப்பட்ட தேவைகள், ஆசைகளை புறக்கணிப்பது போன்றவை சுய மரியாதை இன்மையின் அடையாளங்கள். பிறரின் தவறான நடத்தையை கூட பொருட்படுத்த மாட்டார்கள்.

4. சமரசம் செய்தல்: உறவுகள், நண்பர்களுடன் இணங்கி இருப்பது நல்ல குணம்தான். ஆனால், அதேசமயத்தில் மோதலைத் தவிர்க்க விரும்பி தன்னுடைய மதிப்பு மற்றும் நம்பிக்கையை ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது. அது ஒரு நபரின் அடையாளம் மற்றும் உண்மையான சுயத்தில் இருந்து விலகி இருப்பதைக் குறிக்கும். ஆனால், சுயமரியாதையற்றவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.

5. தனிப்பட்ட இலக்குகளைத் தவிர்ப்பது: இலக்குகளை நிர்ணயித்து அவற்றைப் பின்பற்றும்போது கடுமையான உழைப்பு தேவைப்படும். அதேசமயம் அதில் தோல்விகளும் ஏற்படலாம். சுயமரியாதையற்ற நபர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சி இலக்குகளை பின் தொடர மாட்டார்கள். இதனால் அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் இன்றி தேக்க நிலையிலேயே இருப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
உடலில் ஊட்டச்சத்துக்கள் அளவு குறையும்போது தோன்றும் அறிகுறிகள் என்ன தெரியுமா?
self respectless persons

6. சுய கவனிப்பைப் புறக்கணித்தல்: தன்னுடைய உடல் ரீதியான ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சி ரீதியான விஷயங்கள் மற்றும் மன நலனுக்கு முன்னுரிமை கொடுக்கத் தவறுவது குறைந்த சுயமரியாதையின் அடையாளங்கள். இதனால் மோசமான சுகாதாரம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், மற்றும் குறைந்த மனநல ஆரோக்கியம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இவை அத்தனையும் சுயமரியாதை அற்றவர்கள் பின்பற்றுவார்கள்.

7. எதிர்மறையாக ஒப்பிடுதல்: இவர்கள் அடிக்கடி மற்றவர்களின் சாதனைகள் அல்லது அவர்களின் வெளித் தோற்றங்களுக்கு எதிராக தன்னை ஒப்பீடு செய்து கொள்வார்கள். இது பொறாமை மற்றும் வெறுப்பை வளர்க்கும். இது பெரும்பாலும் போதாமை உணர்வுகளை வலுப்படுத்தி சுயமரியாதையைக் குறைக்கும்.

8. நியாயமற்ற முறையில் பழியை ஏற்றுக்கொள்வது: சுயமரியாதை இல்லாத நபர்கள், பிறர் தன் மேல் சுமத்தும் நியாயமற்ற பழிகளை ஏற்றுக் கொள்வார்கள். பிறர் தங்களை என்ன சொல்வார்களோ என்று பயந்து அல்லது அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு பழியை ஏற்றுக் கொள்வார்கள். இத்தகைய செயல்கள் சுயமரியாதையை மேலும் சிதைத்து பாதிக்கப்பட்ட மனநிலையை அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com