night sleep
night sleep

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

Published on

ருவரின் இரவு தூக்கம் என்பது அவரது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. உடல் ஆரோக்கியமாக இருக்க இரவு நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்கிறார்கள் தூக்க நிபுணர்கள். உங்களது இரவு நேர தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷங்களை இந்தப் பதிவில் காண்போம்.

1. மின் சாதனங்களுடன் நேரத்தை செலவிடுதல்: ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள் அல்லது கணினி போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் அவற்றிலிருந்து வெளிப்படும் நீல ஒலி தூக்கத்திற்கு வெளிப்படும் மெலடோனின் ஹார்மோனின் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதால் குறைந்தபட்சம், தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.

2. காஃபின் பொருட்களைப் பயன்படுத்துவது: காபி தூக்கத்தை சீர்குலைக்கும் தூண்டுதலாக இருப்பதால் மாலையில் காபி, டீ அல்லது மற்ற ஆற்றல் பானங்கள் எதையும்  குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

3. அதிக சாப்பாடு: வயிற்றில் உணவு அதிகமாக இருந்தால் ஜீரண சக்தி கடினமாகி செரிமானம் குறைவதால் படுக்கைக்கு செல்வதற்கு முன் அதிகமாக சாப்பிட வேண்டாம்.

4. மது அருந்துவது: ஆல்கஹால் தூக்க சுழற்சியை சீர்குலைத்து படிப்படியாக தூக்கமின்மை பிரச்னையை அதிகரிப்பதால் போதை வஸ்துவான மதுவை அருந்தாமல் இருப்பது நல்லது.

5. கடுமையான உடற்பயிற்சி: வழக்கமான தினசரி உடற்பயிற்சியை விட   அதிகப்படியான உடற்பயிற்சி உடலைத் தூண்டி தூக்கத்தைக் கெடுக்குமாதலால் கடுமையான உடற்பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் விரும்பும் பெற்றோர் ஆவது எப்படித் தெரியுமா?
night sleep

6. மாலை நேர தூக்கம்: மதிய உணவிற்குப் பின் கால் மணி நேரம் ஓய்வெடுத்து, மாலை 4 அல்லது 5 மணிக்கு தூங்குவதைத் தவிர்த்தாலே இரவு தூக்கப் பிரச்னை இருக்காது.

7. மன அழுத்தம் தரும் செயல்கள்: இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு மன அழுத்தம் தரும் செயல்களில் ஈடுபடாமல் ,சுவாரஸ்யமான புத்தகங்களைப் படிப்பது நல்லது.

8. மிகவும் பிரகாசமான விளக்குகள்: படுக்கையறையில் உள்ள பிரகாசமான விளக்குகள் மெலடோனின் ஹார்மோனின் வெளியீட்டைக் குறைக்கின்றன. உறங்கச் செல்வதற்கு முன்பு அறையில் விளக்கை மங்கச் செய்தாலே நல்ல தூக்கம் வரும்.

மேற்கண்ட முறைகளைக் கையாண்டாலே இரவு நேரத் தூக்கத்திற்கு ஒரு பிரச்னையும் இருக்காது.

logo
Kalki Online
kalkionline.com