மகளிர் செய்யும் மிகக் கடினமான 9 பணிகள் எவை தெரியுமா?

Hardest works done by women
Hardest works done by women
Published on

1. ராணுவப் பணிகள்: ராணுவப் பணிகளுக்கு பெரும்பாலும் தீவிர உடல் தகுதி, வலிமை, சகிப்புத்தன்மை போன்றவை தேவை‌. ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த ராணுவத்துறையில் பெண்கள் வேலை செய்வது சற்றே கடினமான ஒன்று. பாகுபாடு, துன்புறுத்தல், குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தம், போர் தொடர்பான காயங்கள் போன்றவற்றுக்கு பெண்கள் ஆளாக நேரிடலாம்.

2. சுரங்க மற்றும் எண்ணெய் ரிக் வேலை: அபாயகரமான, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தான சூழலில் வேலை செய்யும் நிர்ப்பந்தம் இந்தப் பணிகளில் இருக்கிறது. பெண்கள் நீண்ட நேரம் வேலை செய்வதால் உடல் சோர்வுக்கு ஆளாகின்றனர். குறைந்த அளவிலான பெண்கள் மட்டும் இந்த வேலையை செய்ய வருவதால் சகாக்களின் ஆதரவு இல்லாமல் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

3. தீயணைப்பு: கனரக உபகரணங்களை சுமந்து செல்வதற்கும், மக்களை மீட்பதற்கும் அதிக வெப்பம் மற்றும் புகையை தாங்குவதற்கும் தீயணைப்பு வீரர்களுக்கு தீவிர உடல் வலிமை, சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது. இது பெண்களுக்கு மிகவும் சவாலான பணியாகும்.

4. பொறியியல், மெக்கானிக்கல் மற்றும் ஏரோஸ்பேஸ்: அதிக அளவிலான தொழில்நுட்ப அறிவு, சிக்கலை தீர்ப்பது மற்றும் பகுப்பாய்வு திறன் தேவைப்படும் ஒரு தொழிலாகும் இவை. சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற உடல் ரீதியாக சவாலான களப்பணியை கோரும்  பணி. இதில் பெண்களுக்கான தொழில்முறை முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவு. பெண்களுக்கான அங்கீகாரமும் தலைமை பதவிகள் பெறுவதும் கடினமாகிறது.

5. மீன் பிடித்தல்: இது மிகவும் ஆபத்தான தொழில்களில் ஒன்றாகும். கடலில் நீண்ட நெடுநேரம் கடுமையான வானிலையில் கனமான வலைகளை இழுப்பது உடல் ரீதியாக கடினமான வேலையாகும். இதிலும் மிகக் குறைந்த அளவே பெண்கள் வேலை செய்கிறார்கள். வேலையின் இயல்பு, கையாளும் திறனை பற்றியும் ஆண் ஊழியர்களிடமிருந்து பெண்கள் துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரலாம்.

6. பைலட்டிங் மற்றும் ஏவியேஷன்: விமானியாக மாறுவது என்பது கடுமையான பயிற்சி. அதிக பொறுப்பு மற்றும் மன அழுத்த சூழ்நிலைகளை நிர்வகித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்தப் பணி. வணிக விமானங்கள் மற்றும் ராணுவ விமான போக்குவரத்துகளில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவு. இதுபோன்ற பணியில் இருக்கும் பெண்கள் தங்களை நிரூபிக்க கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். பெண் விமானிகள் சிக்கலான இயந்திரங்களை கையாள்வது அல்லது அவசரகால சூழ்நிலைகளை நிர்வகிப்பதற்கான திறன்களை கேள்விக்கு உட்படுத்தும் சூழ்நிலைகளை அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.

7. பத்திரிக்கைத் துறை: பெண் பத்திரிக்கையாளர்கள், போர் பகுதிகள், அரசியல் அமைதியின்மை அல்லது மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை உள்ளடக்கிய இடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தல் ஆபத்தை எதிர்கொள்கின்றனர். உயர்நிலை அல்லது கடினச் செய்திகளை கவரேஜ் செய்வதற்கான வாய்ப்புகள் பெண்களுக்கு குறைவாகக் கொடுக்கப்படுகிறது. ஆண்களோடு ஒப்பிடும்போது அங்கீகாரம் அல்லது தொழில் முன்னேற்றத்தை அடைவதில் சவால்களை சந்திக்க நேரிடலாம்.

இதையும் படியுங்கள்:
தினசரி உணவுடன் வெள்ளரி விதைகளை சேர்த்து உண்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!
Hardest works done by women

8. தொழில்முறை விளையாட்டுகள்: இதில் கடுமையான பயிற்சி மற்றும் போட்டியை தாங்கும் திறன் பெண்களுக்குத் தேவை. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பாரம்பரிய விளையாட்டுகளான குத்துச்சண்டை, கால்பந்து, பளு தூக்குதல், கபடி போன்ற விளையாட்டுகளில் பெண்கள் பெரும்பாலும் ஆண்களை விட மிகக் குறைந்த ஊதியத்தை பெறுகிறார்கள். உயர்ந்த மட்டங்களில் போட்டியிடும்போது கூட குறைவான ஸ்பான்சர்ஷிப் வாய்ப்புகள் மற்றும் குறைவான மீடியா கவரேஜ் ஆகியவற்றுடன் இணைந்து வேலை செய்ய வேண்டியுள்ளது.

9. கட்டுமானத் தொழில்: கொத்து, பிளம்பிங், மின்சார வேலைகள் போன்ற உடல் வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் கடுமையான சூழலில், அதிக உயரத்தில் நின்று வேலை செய்தல் போன்றவற்றை பெண்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆண்களுக்கான சமமான ஊதியம் பெண்களுக்கு தரப்படுவதில்லை. மேலும், பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக நேரிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com