போக்கா யோக் டெக்னிக்கின் பயன்கள் தெரியுமா?

Poka - yoke
Do you know the benefits of Boka Yoke Technique?https://lmlexcelenciaoperacional.com
Published on

போக்கா யோக் (Poka - yoke) என்பது ஒரு ஜப்பானிய பதம். மனித தவறுகளை தடுக்க உபயோகப்படுத்தப்படும் ஒரு டெக்னிக். ஒரு தவறு அல்லது ஒரு பிழை நிகழாமல் தடுப்பதைக் குறிக்கிறது. ஜப்பானிய மொழியில் எதிர்பாராத ஆச்சரியங்களைத் தவிர்க்கவும் அல்லது தவறுகளை தவிர்க்கவும் என்று பொருள்படும்.

மனிதத் தவறுகள் தவிர்க்க முடியாதது. ஆனால், மின் சாதனங்கள், வாகனங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை தவறாக உபயோகிக்கும்போது விபத்து நேரலாம். இதைத் தடுக்க உற்பத்தி முறையில் புகுத்தப்படும் நுட்பமே போக்கா யோக் முறையாகும். இதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.

ஏடிஎம் மிஷின்கள்: பொதுவாக, ஏடிஎம் மிஷின்களில் கார்டை உள்ளே செருகி விட்டு வெளியே எடுக்கும் முறை. ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பதற்கான ப்ராசஸ் செய்து முடித்ததும் கார்டு வெளியே வந்துவிடும். நாம் அதை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்பே ஏடிஎம் மிஷினில் பணம் கலெக்ட் ஆகும். ஏன் இப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால் மனிதர்கள் தங்கள் கார்டை மிஷினிலேயே மறந்துவிட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது என்பதால்தான் இது போக்கா யோக் முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

யூஎஸ்பி கனெக்டர்ஸ்: பொதுவாக யூஎஸ்பி கனெக்டர்களில் ஒரு வழியில் மட்டுமே நாம் பென்டிரைவ் போன்றவற்றை சொருக முடியும். ஏனென்றால், தவறாக நாம் சொருகிவிட்டால் அது அந்த மொத்த கருவியை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.

மைக்ரோவேவ் ஓவன்: மைக்ரோவேவ் ஓவன்களில் கதவு முறைப்படி சாத்தப்பட்டால் மட்டுமே அது வேலை செய்ய ஆரம்பிக்கும். இது ஏன் இப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால் அந்த கருவி வேலை செய்யும்போது அதிலிருந்து வெளியேறும் கதிரியக்கம் லீக்காகாமல் இருப்பதற்காக, பாதுகாப்பிற்காக அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கார் இக்னீசியன் இன்டெர்லாக்: பல கார்களில் இன்டெர்லாக் சிஸ்டம் உள்ளது. பல கார்கள் போக்கா யோக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளன. கார் பார்க் செய்யப்பட்ட பின்பு டிரைவரால் காரை ஸ்டார்ட் செய்ய முடியாது. சாவியை வெளியே எடுத்ததும் இக்னீஷின் தானாக பூட்டிக்கொண்டு விடும். இல்லாவிட்டால் அது தன்னால் உருண்டு சென்று விபத்து ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
தனிமை என்பது கொண்டாட்டமா? திண்டாட்டமா?
Poka - yoke

மருந்து, மாத்திரைகள் பேக்கேஜிங்: பொதுவாக, மாத்திரை அட்டைகள் அல்லது மருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெட்டிகளை கொண்டிருக்கும். பெரும்பாலும் ஒரு வாரத்தின் ஏழு நாட்களை குறிப்பிடுவது போல அவை வடிவமைக்கப்பட்டிருக்கும். இது நோயாளிகள் தவறான டோஸ் எடுப்பதையோ அல்லது அந்த மாத்திரை அல்லது மருந்தை தவற விடுவதையோ, தவிர்ப்பதற்காக உதவுகிறது.

பவர் பிளக்குகள்: மின்சார பிளக்குகளில் பொதுவாக இரண்டு பின் அல்லது மூன்று பின் கொண்ட மின்சாரப் பிளக்குகள் இருக்கும். மூன்று பின் சாக்கெட்டுகளில் இரண்டு பின் கொண்ட பிளக்கை பொருத்தினால் அதில் ஏதாவது ஷார்ட் சர்க்யூட் ஆவதற்கோ அல்லது மின்சார விபத்து ஏற்படவோ வாய்ப்புள்ளது. எனவே, தகுந்த பிளக்குகளை பொருத்தும் வகையில் மட்டுமே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிலைய முனைகள் (Gas Station Nozzles): பொதுவாக, எரிபொருள் நிரப்பும் ஸ்டேஷன்களில் குறிப்பிட்ட எரிபொருள் டாங்குகளில் மட்டுமே பொருந்தும் வகையில் அந்த எரிபொருள் ட்யூபின் வாய் பகுதி வடிவமைக்கப்பட்டிருக்கும். இது எதற்காகவென்றால் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் தவறான வகை எரிபொருளை நிரப்புவதைத் தடுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com