தனிமை என்பது கொண்டாட்டமா? திண்டாட்டமா?

Loneliness
Loneliness

னிமையில் 60 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு பெண்மணி கூறும்போது, ‘தனிமை துயரம் அல்ல; கொண்டாடப்பட வேண்டியது. அதை நான் ஆழ்ந்து அனுபவித்தேன். நிறைய கற்றுக் கொண்டேன். இதனால் பலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய உதவிகள் செய்ய முடிந்தது’ என்பதுதான். அப்படித் தனிமையைக் கொண்டாடியவர்கள் கூறுவதை இந்தப் பதிவில் காண்போம்.

கணவன், மனைவி வேலை நிமித்தமாக வெவ்வேறு மாநிலங்களில் வாழ்வதுண்டு. அவர்கள் எப்பொழுதாவதுதான் சேர்ந்து இருக்க முடியும். பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான நேரங்களில் கூட சேர்ந்து கொண்டாட முடியாத அவல நிலையும் நிலவுவதுண்டு. ஆனால், நிறைய பெண்மணிகள் அதுபோன்ற நேரங்களில் அவர்கள் விரும்பிய வேலைகளை அழகாக செய்து அதில் அவர்களின் தனித்தன்மையை காட்டுகிறார்கள். அதேபோல் அந்த நாட்களில் உற்றார், உறவினர், நட்பு வட்டம் என்று அனைவரிடமும் நீண்ட நேரம் பேசி மகிழ்கிறார்கள்.

மேலும் கல்லூரி, பள்ளிகளில் படித்த தோழிகளுடன் செல் மூலம் பேசி மகிழ, நிறைய விபரங்களை தெரிந்துகொள்ள இந்த தனிமையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தனித்தனியாக வாழும் இந்தப் பெண்மணிகள் அவரவர்களுக்குப் பிடித்த சீரியலையோ சினிமாவையோ விரும்பிப் பார்க்கிறார்கள். எப்பொழுதோ ஒருமுறை பார்க்காமல் விட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்களையும் பார்த்து மகிழ்கிறார்கள். அதற்கு இந்தத் தனிமை தன் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள நல்ல பொழுதுபோக்கு தினமாக அமைந்துவிடுகிறது என்றும் திருப்தி பெற்றுக் கொள்கிறார்கள்.

மேலும், தனிமையில் இருக்கும்போது கடந்த ஆண்டு என்ன சாதித்தோம். என்ன சேமித்தோம். இந்த ஆண்டு அதில் எவ்வளவு வெற்றி பெற்று இருக்கின்றோம் போன்ற சுய பரிசோதனைகளை செய்து கொள்கிறார்கள். ஆதலால் விட்டதை பிடிப்பதற்கும், புதிதாக ஒரு  செயலில் ஈடுபடுவதற்கும் இந்தத் தனிமை அவர்களுக்கு நல்ல சந்தர்ப்பத்தை, வாய்ப்பை அளிக்கிறது என்று கூறுகிறார்கள்.

தனிமையில் இருக்கும்பொழுது நிறைய சமையல் வகைகளை செய்து பார்க்கலாம். அதில் நன்றாக தேர்ச்சி பெற்று வீட்டிற்குச் சென்றதும் விதவிதமாக கணவர், குழந்தைகள், உற்றார் உறவினர்களுக்கு சமைத்து பரிமாற முடிகிறது என்று கூறி சந்தோஷம் அடைகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
உங்கள் கிட்னி ஆபத்தில் இருக்கிறது என்பதற்கான 6 அறிகுறிகள்! 
Loneliness

தனிமையில் இருக்கும் சில பெண்மணிகள் ஊசி நூல் கொண்டு மெஷின் இல்லாமல் கைகளாலேயே தலையணை உறை போன்றவற்றைத் தைத்து அதற்கென்று தனி விலை வைத்து விற்பனை செய்ததைப் பார்க்கலாம். அவரை உற்சாகப்படுத்துவதற்காக அதுபோன்ற பொருட்களை சில பெண்மணிகள் விலை கொடுத்து வாங்கி ஞாபகார்த்தமாக வைத்துக்கொண்டதும் உண்டு. இதுபோல் நிறைய எம்பிராய்டரி ஒர்க்குகளையும் செய்து தனது தனிமையை போக்கிக் கொள்கிறார்கள். இதில் ஏதோ ஒரு கற்றல் தொழிலை அனுபவித்து செய்கிறார்கள்.

தனிமையில் இருக்கும்பொழுது அருகாமையில் இருக்கும் கோயில்களுக்கு தவறாமல் செல்பவர்கள் உண்டு. அதேபோல், பீச், பார்க், அதிகம் செலவில்லாத பக்கத்தில் இருக்கும் சுற்றுலாத் தலம் என்று தனக்குப் பிடித்த பயணத்தை மிகவும் உற்சாகத்துடன் செய்து தனிமையில் இனிமை காண்கிறார்கள். பிறகு குடும்பத்தினர் எப்பொழுதாவது ஒருமுறை இங்கு வரும்போது அவர்களை அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று பொழுதை நல்ல வண்ணம் கழிக்கிறார்கள்.

இப்படித் தனிமையிலும் இனிமை காண்பவர்கள் இருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. அந்தத் தனிமையை அவர்கள் ஆக்கபூர்வமான வேலைகளுக்கு பயன்படுத்தித் தன்னைத்தானே உற்சாகப்படுத்திக் கொண்டு, மற்றவர்களையும் அதில் ஈடுபட வைக்கிறார்கள். மேலும், தனிமையில் இருக்கும்பொழுது தான் விரும்பிய ஆடை அணிகலன்களை அணிந்து இன்புறுகிறார்கள். அதில் ஒரு திருப்தியையும் அடைவதாகக் கூறுகிறார்கள்.

இப்படித் தனிமையில் இருக்கும் சில பெண்மணிகள் குறையாகக் கூறுவது என்னவென்றால், என்னதான் செல்லில் பேசினாலும் நேரில் பேசுவது போல் ஒரு சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. உடல்நிலை சரியில்லாதபொழுது மற்றவர்களின் அன்பும் ஆதரவும் மிஸ் ஆவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் சட்டென்று ஒரு வெறுமை உணர்வு தொற்றிக்கொள்கிறது என்று ஆதங்கப்படுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com