மூங்கில் பின்னல் ஊசிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் தெரியுமா?

Bamboo knitting needles
Bamboo knitting needles
Published on

பொதுவாக, துணிகள் தைக்க மற்றும் ஸ்வெட்டர்கள் பின்னுவதற்கு உலோகம் அல்லது பிளாஸ்டிக்காலான ஊசிகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், மூங்கில் ஊசிகள் (Bamboo knitting needles) இவை இரண்டையும் விட அதிகப் பயன் தரும். அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

மூங்கில் பின்னல் ஊசிகளின் பயன்கள்:

எளிதான செயல்முறை: மூங்கிலில் இருந்து தயாரிக்கப்படும் ஊசிகள் மென்மையான மேற்பரப்பைக் கொண்டுள்ளன. இது பின்னல் செயல்முறையை மிகவும் சுவாரசியமாக்குகிறது மற்றும் எளிதாக்குகிறது. இதனால் இதை உபயோகப்படுத்தும்போது அதிக நேரம் தைக்கலாம். எளிதில் கைகள் சோர்வடைந்து போகாது. மூங்கில் ஊசிகளை பயன்படுத்தும்போது ஒரு வசதியான வெப்பநிலையை கைகளுக்குத் தருகிறது. மேலும், இது இலகு ரகமாக இருப்பதால் அதிக எடை இன்றியும் இருக்கிறது. நீண்ட காலம் நிட்டிங் தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.

பிடிப்பு: பொதுவாக உலகத்தால் ஆன ஊசிகள் தைக்கும்போதும், பின்னும்போதும் அடிக்கடி கையில் இருந்து வழுக்கி கீழே விழுந்து விடும். ஆனால், மூங்கில் ஊசிகளில் ஒரு சிறிய பிடி போன்ற பகுதி உள்ளது. இது கையில் ஒரு பிடிமானத்தைத் தருகிறது. இது புதிதாக தைத்துப் பழகுபவர்களுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. மேலும், நுண்ணிய நூல் வகைகளுடன் வேலை செய்யும்போது இது மிகுந்த பயன் தருகிறது.

வெரைட்டி: மூங்கில் ஊசிகள் பல்வேறு அளவுகள் மற்றும் நீளங்களில் வருகின்றன. சிறிய மற்றும் பெரிய பின்னல் வகைகளுக்கு இவை ஏற்றதாக இருக்கின்றன. பரந்த அளவிலான பின்னல் திட்டங்களுக்கும் ஏற்றது.

சுற்றுச்சூழலுக்கும் உகந்தது: மூங்கில் ஒரு புதுப்பிக்கத்தக்க வளமாகும். மூங்கிலை வெட்டும்போது அது விரைவில் வளர்ந்து விடுகிறது. அதனால் இது ஒரு நிலையான தேர்வாக அமைகிறது. மூங்கிலில் இருந்து தயாரிக்கப்படும் ஊசிகள் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கிறது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

பன்முகத்தன்மை: மூங்கில் ஊசிகள் பல்வேறு வகையான தையல்களுக்கு பயன்படுத்தலாம். மெல்லிய லேஸ் வொர்க் முதல் மிக கனமான ஸ்வட்டர்கள் வரை பின்னுவதற்கு ஏற்றது.

மூங்கில் ஊசிகளை பராமரிக்கும் முறைகள்:

1. மூங்கில் ஊசிகளை சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருப்பது அவசியம். ஈரம் பட்டால் அதைத் துடைத்து காய வைக்க வேண்டும். இல்லையென்றால் அது விரைவில் சிதைந்து சேதமடைந்து விடும்.

இதையும் படியுங்கள்:
அனீமியாவை போக்கும் 5 அற்புத உணவுகள்!
Bamboo knitting needles

2. அதிக வெப்பநிலை அல்லது ஈரமான மற்றும் குளிரான இடங்களில் வைக்கக் கூடாது. அப்படி செய்தால் ஊசிகள் விரைவில் கெட்டுவிடும்.

3. இந்த ஊசிகளின் மேற்பரப்பு மிகவும் மென்மையானது. எனவே மிகக் கடினமான அல்லது சிராய்ப்பு நூல்களுடன் இவற்றை பயன்படுத்தக் கூடாது .

4. மூங்கில் பின்னல் ஊசிகள் அவற்றின் இலகு ரகம், வசதி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பண்புகள் காரணமாக பின்னல் வேலை செய்பவர்கள் இடையே விருப்பமான தேர்வாக அமைகிறது. இவற்றை வாங்கும்போது தரம் மற்றும் வடிவமைப்பு அம்சங்களை பார்த்து இவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com