வீட்டில் 'உருளி' வைக்கும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Uruli vessel
Uruli vesselImg credit: amazon

இப்போதெல்லாம் வீடுகளிலும், கடைகளிலும் உருளியை அதிகம் மக்கள் வைக்க தொடங்கிவிட்டனர். இதனால் என்ன பயன், உருளி வைக்க வேண்டிய முறை ஆகியவற்றை பற்றி தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

வீட்டின் வாசலிலோ அல்லது பெரிய கடைகளிலோ பார்த்திருக்கலாம். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மலர்களை போட்டு வைத்திருப்பார்கள். இதன் பெயர் தான் உருளியாகும்.

உருளியை வீட்டின் வாசலிலே, கடைகளின் வாசலிலே வைக்கலாம். வீட்டினுடைய கன்னி மூலையில், தென்மேற்கு மூலையில், வரவேற்பறையிலும் வைக்கலாம். இதை வைப்பதால் பாசிட்டிவ் வைப்பிரேஷன் கிடைக்கும். இந்த உருளி வைக்கும் பழக்கம் பழங்காலம் முதலாகவே இருக்கிறது. நம் முன்னோர்கள் இதை வீட்டின் வாசலிலே வைத்ததற்கு காரணம் அழகு என்பதையும் தாண்டி பாசிட்டிவ் வைப்பிரேஷன் தருகிறது என்ற காரணத்தாலுமே வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை கடையிலோ அல்லது வீட்டிலோ வைப்பதனால் வரும் லாபம் என்னவென்று கேட்டால், வியாபாரத்தில் நஷ்டமில்லாமல் லாபம் பெருகிக்கொண்டே வரும். அந்த இடத்திலுள்ள நெகட்டிவ் வைப்பிரேஷன் நீங்கி பாசிட்டிவ் வைப்பிரேஷனை கொடுக்கும். வீட்டிலுள்ள சண்டை சச்சரவு நீங்கி செல்வ செழிப்பு பெருகும்.

இந்த உருளியை மண்ணில் வைக்கலாம், பித்தலையில் பயன்படுத்தலாம், பஞ்சலோகம் பயன்படுத்தலாம், பீங்கான், கண்ணாடியில் வைக்கலாம். இதை எதில் வைக்க கூடாதென்றால், எவர்சில்வர், பிளேஸ்டிக், அலுமினியம், இரும்பு ஆகியவற்றில் வைக்க கூடாது. இதை வீட்டின் நுழைவாயிலில் வலதுபுறத்திலோ அல்லது இடதுப்புறத்திலோ வைக்கலாம். வீட்டினுடைய ஹாலில் எல்லோரும் கூடும் இடத்தில் வைக்கலாம்.

உருளியிலே நல்ல சுத்தமான தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள், பச்சை கற்பூரம், வாசனை திரவியமான ஜவ்வாது, வெட்டிவேரை கூட சிலர் சேர்ப்பார்கள்.

உருளியில் வைக்கக்கூடிய மலர் ஒன்று நறுமணம் மிக்கதாக இருக்க வேண்டும் இல்லையேல் மருத்துவ குணம் உள்ளதாக இருக்க வேண்டும்.

உருளிக்கே விசேஷமானது தாமரைப்பூ தான். சாமந்தி, ரோஜாப்பூ, மல்லி என்று கலர் கலராக மலர்களை வைக்க வேண்டும். செவ்வரளியை உருளியில் பயன்படுத்த கூடாது. ஏனெனில் இது வீட்டில் நஷ்டத்தை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
அதிர்ஷ்டம் தரும் குதிரை லாடம்... வீட்டு வாசலில் மாட்டினால் என்ன ஆகும் தெரியுமா?
Uruli vessel

உருளியில் உள்ள நீரை தினம் தோறும் புதிதாக மாற்றி விடுவது என்பது சிறந்தது. அப்படியில்லையேல் இரண்டு நாளைக்கு ஒருமுறை மாற்றிவிடுவது  நல்லதாகும்.

நம் வீட்டுக்கு வருபவர்களின் முதல் பார்வை உருளியின் மேலே போய்விடுவதால், கண் திருஷ்டி ஏற்படாது. வீட்டில் மனநிம்மதியும், செல்வமும் செழிக்கும். இது சிறியது, பெரியது என்று விலைக்கு ஏற்ற அளவில் விற்கப்படுகிறது. தற்போது அனைத்து வீடுகளிலும் இந்த உருளி வைக்கும் பழக்கம் அதிகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com