அதிர்ஷ்டம் தரும் குதிரை லாடம்... வீட்டு வாசலில் மாட்டினால் என்ன ஆகும் தெரியுமா?

Horse Shoe
Horse Ladam
Published on

நம் முன்னோர்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்காக பலவிதமான பொருட்களை வீட்டின் வாசலிலே கட்டினார்கள். அப்படி வீட்டின் நிலைவாசற்படியில் சில பொருட்களை கட்டினால் அதிர்ஷ்டம் வந்து சேரும், தீயசக்திகள் வீட்டில் நுழையாது என்று நம்பினார்கள். அப்படி அவர்கள் நம்பிக்கையில் இருந்த ஒரு பொருள் தான் குதிரை லாடம். இந்த அதிர்ஷ்டம் தரும் குதிரை லாடத்தை பற்றி தெரியாத பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

நம் முன்னோர்கள் குதிரை லாடத்தை 16 ஆம் நூற்றாண்டில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த குதிரை லாடத்தை பயன்படுத்தினால் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது. இதை எல்லா மதத்தவருமே தங்கள் வீட்டில் பயன்படுத்தினார்கள் என்பது சிறப்பான விஷயமாகும். வெளிநாட்டவர்களே இதில் அதிகம் நம்பிக்கை வைத்து நிலைவாசல் படியில் பதித்து வைத்தார்கள்.

முன்பெலல்லாம் வீடுகள் அருகிலே அமைந்திருக்காது. இதனால் தீயசக்திகள் பற்றிய பயத்தை மக்கள் போக்க இரும்பு குதிரை லாடத்தை நிலைவாசற்படியில் கட்டிவைப்பார்கள். இது தீயசக்தியிலிருந்து தன் குடும்பத்தைக் காக்கும் என்று நம்பினார்கள்.

Horse Shoe Door Knock
Horse Shoe

இன்றைக்கும் கிராமப்புர வீடுகளில் கவனித்தால் குதிரை லாடம் வடிவிலேயே கதவை தட்டுவதற்கு 'U' வடிவத்தில் பிடியை அமைத்து வைத்திருப்பார்கள். அதுவே சிறப்பு என்று நம்பினார்கள்.

முன்பொரு காலத்தில் குதிரை லாடம் செய்யும் ஒருவரை தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆவி ஒன்று அவரை பிடிப்பதற்காக சரியான தருணத்தை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. ஏனெனில், அவர் செய்வதோ குதிரை லாடத்தை தயரிக்கும் பணி. அதற்கு பயந்து கொண்டு அந்த ஆவி தினமும் அவரை பிடிக்க நோட்டமிட்டு கொண்டிருந்தது. இதை அறிந்த குதிரை லாடம் செய்பவர், அந்த ஆவி கவனக்குறைவாக இருந்த சமயத்தில் அதன் கால்களில் குதிரை லாடத்தை அடித்து விடுகிறார்.

இதனால் வலி தாங்காமல் கத்திய ஆவி, இனி இந்த குதிரை லாடம் இருக்கும் எந்த இடத்திற்கும் நான் செல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்தது. அதன் பிறகே அவர் அந்த ஆவியை விடுவித்தார் என்று கதை உண்டு. அதனால் இந்த குதிரை லாடத்தை மாட்டி வைக்கும் எந்த வீட்டிற்கும் தீயசக்தி வராது என்பது நம்பிக்கை. குதிரை லாடத்தை நிலைவாசற்படியில் 'U' வடிவத்தில் மாட்டி வைக்க வேண்டும்.

நம்முடைய வீட்டின் நிலைவாசற்படியில் இதை கட்டுவதற்கான காரணம், வாசலை தாண்டி வீட்டிற்குள் செல்லும்போது வெளியிலே சந்தித்துவிட்டு வந்த அனைத்தும் வீட்டின் வாசலிலேயே கழிந்து போயிவிடும். அதனால் அதிர்ஷ்டம், செல்வம் வீட்டிற்குள் வந்து சேரும் என்பதால் நிலைவாசலில் கட்டுவார்கள்.

இதையும் படியுங்கள்:
இந்த தருணத்தில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான தந்திரங்கள்!
Horse Shoe

இந்த குதிரை லாடங்களெல்லாம் இப்போது பெரிதாக கிடைப்பதில்லை. இதை எவ்வளவுக்கு எவ்வளவு பழமையாக பயன்படுத்துகிறோமோ அவ்வளவு நல்லதாகும். குதிரை லாடத்தை வீட்டில் மாட்டுவதால், ஏழரை சனியின் தாக்கம் குறையும்.

இந்த குதிரை லாடத்தை வாங்கியதும், முதலில் பூஜையறையில் வைத்து சந்தனம், குங்குமம், பூ வைத்துவிட்டு பிறகு ஊதுபத்தி காட்டிவிட்டு வாசலில் கட்டலாம் அல்லது குதிரை லாடத்தில் இருக்கும் ஒவ்வொரு ஓட்டையிலும் ஒவ்வொரு ஆணியை அடித்தும் மாட்டலாம். சிலரது வீட்டில் இரண்டு வாசற்படி இருந்தால் இரண்டிலுமே மாட்டுவது சிறந்ததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com