உலகின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 90 சதவிகிதம் பேர் வலது கை பழக்கம் கொண்டவர்கள். பெரும்பாலான மக்கள் எழுதுதல், சாப்பிடுதல் மற்றும் பிற சிறந்த மோட்டார் திறன்கள் போன்ற பணிகளுக்குத் தங்கள் வலது கையைப் பயன்படுத்துகின்றனர். மீதி 10 சதவிகிதம் பேர் மட்டுமே லெஃப்ட்ஹேண்டர்ஸ் எனப்படும் இடது கை பழக்கம் உள்ளவர்கள். இவர்களுக்குத் தனித்துவமான திறமைகள் மற்றும் சிறப்பியல்புகள் உண்டு. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. படைப்பாற்றல் மற்றும் கலைத்திறன்கள்: இடது கையை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் மேம்பட்ட படைப்பாற்றலுடன் தொடர்புடையவர்கள். ஓவியம், இசை, எழுத்து போன்ற கலைத்துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
2. பொறியாளர்கள்: இடது கை பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் கட்டடக்கலை மற்றும் பொறியியல் துறைகளில் சிறந்து விளங்குவார்கள். வலுவான தகவமைப்பு திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். கருவிகளைப் பயன்படுத்தவும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்யவும் கற்றுக் கொள்கிறார்கள்.
3. சிக்கல் தீர்க்கும் திறன்: இவர்கள் பெரும்பாலும் அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங் எனப்படும் சிந்தனை கொண்டவர்கள். வழக்கமான பாணியில் சிந்திக்காமல் மாறுபட்ட கோணத்தில் எதையும் ஆராய்வார்கள். ஒரு பிரச்னைக்கு பல தீர்வுகளை உருவாக்கும் திறமை மிக்கவர்கள்.
4. நினைவாற்றல் மற்றும் மொழித்திறன்: இவர்களுக்கு சிறந்த நினைவாற்றல் இருக்கும் மற்றும் பல மொழிகளை பேசும் ஆற்றல் உடையவர்கள். இவர்களது மூளையின் அமைப்பு அதற்கு காரணமாக இருக்கலாம். எதையும் மிக விரைவில் கற்றுக்கொண்டு விடுவார்கள்.
5. தலைமைத்துவ பண்பு: இவர்கள் தலைமைத்துவ பண்பு மிக்கவர்கள் தங்கள் அறிவாலும் ஆற்றலாலும் மிக விரைவில் தலைமை பதவியை அடைவார்கள். வழக்கத்துக்கு மாறான முடிவுகளை எடுப்பதிலும் தனிப்பட்ட வடிவில் செயலாற்றுவதும் இவர்களுடைய தலைமைத்துவ பண்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.
6. தடகளம்: இடது கை விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் சிறப்பு மிக்கவர்களாக விளங்குகிறார்கள். வலது கையை பயன்படுத்தும் வீரர்களுக்கு எதிராக போட்டியிடும்போது இவர்கள் தங்களது பணியை மிகச் சிறப்பாக செய்கிறார்கள். குத்துச்சண்டை, டென்னிஸ் மற்றும் பேஸ்பால் போன்ற விளையாட்டுகளில் இந்தத் திறனை காண முடியும்.
7. இசைத் திறமை: இடது கை பழக்கம் உள்ளவர்கள் இயல்பாகவே இசையில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். பல இடது கை இசைக் கலைஞர்கள் கருவிகளை வாசிக்கும் போது மிகவும் திறமையாக கருவிகளை வாசிப்பார்கள்.
சில பிரபலமான இடது கை ஆளுமைகள்:
1. லியோனார்டோ டா வின்சி - புகழ் பெற்ற இத்தாலிய ஓவியர். மோனலிசா ஓவியத்தை வரைந்தவர்.
2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - சார்பியல் கோட்பாட்டிற்கு பெயர் பெற்ற பழம்பெரும் இயற்பியலாளர்.
3. பராக் ஒபாமா - அமெரிக்காவின் 44வது ஜனாதிபதி.
4. பில் கேட்ஸ் - மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் மற்றும் கொடையாளர்.
5. மேரி கியூரி - முன்னோடி இயற்பியலாளர் மற்றும் வேதியியலாளர், கதிரியக்கத்தில் தனது பணிக்காக அறியப்பட்டவர்.
6. மகாத்மா காந்தி – இந்தியாவின் தேசத்தந்தை.
7. ரத்தன் டாடா - பிரபல தொழிலதிபர் மற்றும் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர்.
8. சச்சின் டெண்டுல்கர் - லெஜண்டரி கிரிக்கெட் வீரர். பேட்டிங்கிற்கு வலது கையை பயன்படுத்தினாலும் உணவு உண்ணவும், எழுதவும் இடது கையை பயன்படுத்துவார்.
9. சவுரவ் கங்குலி - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்.
10. அமிதாப்பச்சன் - பிரபல பாலிவுட் நடிகர்.
11. ரஜினிகாந்த் - தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்.