பெண்கள் விரும்பும் ஆண்களின் குணாதிசயம் என்ன தெரியுமா?

Girl with boy
Girl with boyhttps://ta.quora.com

ந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்கள். ஒருவருக்கு பிடித்தது இன்னொருவருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், பெண்களுக்கு சில ஆண்களிடம் பிடித்த மற்றும் பிடிக்காத பொதுவான சில குணாதிசயங்கள் உள்ளன.

பெரும்பாலான ‘டீன் ஏஜ்’ பெண்கள் தங்களுக்குப் பிடித்த ஆண்களை அவனது வெளிப்புற தோற்றத்தை வைத்துதான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றாலும், எந்த ஆணையும் உடனுக்குடன் முடிவு செய்வதில்லை. சில சமயங்களில் அப்படி தேர்வு செய்ய விரும்பினாலும், மனதில் உள்ளதை பகுத்துணர்ந்து, மாற்றிக்கொள்ளும் பக்குவம் அவர்களிடம் உள்ளது என்கிறார்கள், ‘லைவ் சயின்ஸ்’ என்ற மனோதத்துவ மருத்துவ இதழ் ஆராய்ச்சியாளர்கள்.

பொதுவாக, வட்ட வடிவ முகங்களைக் கொண்ட ஆண்களை, பெண்களுக்குப் பிடிக்கும். சுத்தமாக, கச்சிதமாக, ஆரோக்கியமாக இருக்கும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். தொந்தியும், தொப்பையுமாக இருக்கும் ஆண்களை மற்றும் ஏனோதானோ என ஆடைகள் அணிந்து கொண்டு இருக்கும் ஆண்களையும் பெண்களுக்குப் பிடிக்காது. எப்போதும் அழகாகத் தோன்றும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். பெண்களின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து பேசும் ஆண்களையும், தன்னம்பிக்கை மிக்கவர்களையும், எதையும் சமாளிக்கும் மனப்பக்குவமும் உள்ள ஆண்களையும் பெண்களுக்குப் பிடிக்கும்.

பொதுவாக, திருமணம் என்று வரும்போது பெண்கள் ஆணின் வேலை, படிப்பு, மனப்போக்கு என்று எல்லாவற்றையும் பார்க்கிறார். எந்தப் பெண்ணும் உடனே உணர்வு வயப்படுவதில்லை என்கிறார்கள்.

நிரந்தர வேலையில் அல்லது நிலையான வருமானம் உள்ள ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். எதிலும் நாகரிகமாக நடந்துகொள்ளும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். கதவை தட்டி அனுமதி கேட்டு உள்ளே வருவதில் இருந்து நண்பர்களை அறிமுகப்படுத்துவது மற்றும் சாப்பிடும்போது வரை நாகரிகமாக நடந்துகொள்ளும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும்.

பெண்கள் தாம் விரும்பும் ஆண் ஒரு பெரிய ஹீரோ மாதிரி இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆனால், உண்மையானவராக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். புத்திசாலித்தனமான மற்றும் நகைச்சுவை உணர்வு உள்ள ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். இசை, பாடல்களை ரசிக்கும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும். கெட்ட வாடை வரும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்காது. தான் பெரிய ஆள் என்ற இறுமாப்பில் இருக்கும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்காது. சோம்பேறிகள், வேலை பார்க்காமல் ஊர் சுற்றும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்காது.

இன்றைய காலகட்டத்தில், பெண்கள் சமத்துவத்தை விரும்புவதுடன், பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் ஆண்களை விரும்புகின்றனர். எனவே, பெண்கள் மட்டுமே வீட்டு வேலை செய்ய வேண்டும் அல்லது ஆண்கள் வீட்டு வேலை செய்யக்கூடாது என்று கூறும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்காது.

வெளிப்படையான தகவல் தொடர்பு இல்லாத ஆண்களை சில பெண்களுக்கு பிடிக்காது. தங்களை அவமதிக்கும் அல்லது இழிவுப்படுத்தும் மனப்பான்மை கொண்ட ஆண்களை பெண்கள் விரும்பமாட்டார்கள். தங்களுக்கு மதிப்பு கொடுக்காத ஆண்களை பெண்களுக்குப் பிடிக்காது.

இதையும் படியுங்கள்:
குழந்தை பிரசவித்த தாய் உண்ண வேண்டிய 8 சூப்பர் உணவுகள்!
Girl with boy

தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தயங்கும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்காது. தங்கள் உணர்ச்சிகளைப் பற்றி விவாதிக்கவும், தங்கள் சோகங்களை பகிர்ந்துகொள்ளும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கும்.

வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட வளர்ச்சியாக இருந்தாலும் சரி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் முன்முயற்சி இல்லாத ஆண்களை பெண்களுக்குப் பிடிக்காது. நல்வாழ்வுக்கு பங்களிக்கத் தயாராக இருக்கும் ஆண்களைப் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

அதிகப்படியான பாதுகாப்பின்மை அல்லது பொறாமைப்படும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்காது. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம் என்ற பொசசிவ் உணர்வு குறிப்பிட்ட அளவு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், பெண்களை அதிகமாகக் கட்டுப்படுத்துவது அல்லது எப்போதும் சந்தேகப்படும் ஆண்களை பெண்களுக்கு அறவே பிடிக்காது.

பொதுவாக, பெண்கள் பருவ வயதை அடைந்ததும் எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாத நிலையில்தான் இருப்பர். ஆனால், எது சரி, எது தவறு என்று தெரியாமல் குழம்புவதால். சுற்றுச்சூழலை வைத்துதான் அவர்களின் முடிவு அமைகிறது. சுற்றுச்சூழல் நன்றாக அமைந்தால், அவர்கள் முடிவு நல்லதாக அமைகிறது. இல்லாவிட்டால் மாறிவிடுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com