குழந்தை பிரசவித்த தாய் உண்ண வேண்டிய 8 சூப்பர் உணவுகள்!

Mother and New born Child
Mother and New born Childhttps://ritecare.in
Published on

பிள்ளைப் பேற்றுக்குப் பின் ஒரு தாய், தனது ஆரோக்கியத்திற்கும், குழந்தையின் வளர்ச்சிக்கும் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. குழந்தை பெற்ற தாய்மார்கள் உட்கொள்ள வேண்டிய மிக முக்கியமான 8 உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம், குறிப்பாக DHA, அதிகமுள்ள மீன் வகைகள். இவை குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், பிள்ளைப் பேறு பெற்ற பின் பெண்ணின் மன நிலையில் ஏற்படும் அழுத்தத்தை சரி செய்யவும் உதவும்.

இரும்புச் சத்து, கால்சியம், ஃபொலேட் போன்ற கனிமச் சத்துக்களும், வைட்டமின் A, C, K போன்றவையும் நிறைந்தவை பச்சை இலைக் காய்கறிகள். இவை அனைத்தும் தாய், சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.

ஸ்வீட் பொட்டட்டோவில் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது. இது உடலுக்குள் சென்று வைட்டமின் Aயாக மாறக்கூடியது.  வைட்டமின் A, சிறந்த பார்வைத் திறன் பெறவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செல்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் உதவக் கூடியது. ஸ்வீட் பொட்டட்டோவில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் கூட உள்ளன.

முட்டைகளில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் தரமான புரோட்டீன் சத்தும் நிறைந்துள்ளன. இதிலுள்ள ச்சோலைன் என்ற சத்தானது கருவிலிருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சிக்கும் தாயின் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் தேவையானது.

இதையும் படியுங்கள்:
சத்து நிறைந்த சாரப் பருப்பின் ஆரோக்கிய குணங்கள்!
Mother and New born Child

ப்ளூ பெரி, ராஸ்பெரி போன்ற பெரி வகைப் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், மொத்த உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவி புரியும்.

பாதாம் பருப்பில் கால்சியம் அதிகம் உள்ளது. சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. மற்ற உலர் கொட்டைகள் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

முழு தானியங்களில் உடலுக்கு தொடர்ந்து சக்தி அளிக்கக்கூடிய காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்தும் உள்ளன. சிறப்பான மெட்டபாலிஸத்திற்கு உதவக்கூடிய B வைட்டமின்களும் முழு தானியங்களில் உள்ளன.

தாய், சேய் இருவரின் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் கிரீக் யோகர்டில் அதிகம் உள்ளன. பிளைன் யோகர்டில் இனிப்புக்காக பிடித்தமான பழத் துண்டுகளைச் சேர்த்து உண்பது ஆரோக்கியமானது.

மேற்கூறிய உணவுகளை குழந்தை பெற்றெடுத்த அன்னையர்கள் தினமும் உட்கொண்டு தன்னுடைய நலனையும் குழந்தையின் நலனையும் பேணிக் காக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com