சிக்மா வகைப் பெண்களின் சிறப்பியல்புகள் தெரியுமா?

சிக்மா பெண்
sigma femalehttps://neonmusic.co.uk
Published on

பெண்களின் ஆளுமைத்தன்மையை ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமேகா மற்றும் சிக்மா என ஆறு வகையாகப் பிரிக்கலாம். இந்தப் பதிவில் சிக்மா பெண்களின் சிறப்பியல்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சிக்மா வகைப் பெண்களின் சிறப்பியல்புகள்:

1. அரிதான ஆளுமை வகை: பெண்களிடையே அரிதான ஆளுமை வகையாக கருதப்படுகிறார்கள் சிக்மா பெண்கள். ஏனென்றால். பாரம்பரிய ஸ்டீரியோ டைப் பெண்களைப் போல இவர்கள் இல்லை. இவர்கள் மிகவும் சுதந்திரமானவர்கள். தன்னிறைவு பெற்றவர்கள். தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் திறன் பெற்றவர்கள்.

2. புதுமையான சிந்தனை: இவர்கள் புதுமையான சிந்தனை உடையவர்கள். இந்த உலகைப் பற்றிய தனித்துவமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். ‘அவுட் ஆப் பாக்ஸ்’ என்ற ரீதியில் சிந்திக்கும் பழக்கம் உடையவர்கள்.

3. உள்முக சிந்தனையாளர்கள்: சிக்மா பெண்கள் தனியாக நேரத்தை செலவிடுவதை ரசிக்கிறார்கள். அவர்கள் உள்முக சிந்தனையாளர்கள். ஆனால், அதற்காக கூச்சசுபாவிகள் அல்ல. தங்கள் கருத்தை தைரியமாக சொல்வார்கள். இவர்கள் சமூக நெறிமுறைகளுக்கு இணங்க மாட்டார்கள். மேலும், தங்களுடைய சமூக அந்தஸ்தை பற்றி கவலைப்படவும் மாட்டார்கள்.

4. வாழ்க்கைத் துணைத் தேர்வு: இவர்கள் தங்கள் கூட்டாளிகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அறிவார்ந்த படைப்பாற்றல் மற்றும் சுதந்திரமான நபர்களை இவர்களுக்குப் பிடிக்கும். அவர்களுடைய சமூக அந்தஸ்து மற்றும் செல்வநிலையைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். தங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் ஆழ்ந்த உணர்ச்சிரீதியான வாழ்க்கை நடத்துவார்கள். ஆனால். தங்களுடைய பெற்றோரோ அல்லது வாழ்க்கைத் துணையோ அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.

5. தவறான புரிதல்: இவர்கள் வழக்கமான பிற பெண்களைப் போன்ற குணாதிசயம் இல்லாமல் இருப்பதால் இவர்களைப் பற்றி சிலர் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும். ஆனால், அதைப்பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.

6. விசுவாசமானவர்கள்: இவர்கள் மிகவும் விசுவாசமானவர்கள். தங்களுடைய வாழ்க்கைத் துணை, பெற்றோர், நண்பர் அல்லது தான் பணிபுரியும் நிறுவனம் எல்லாவற்றுக்கும் மிகவும் விசுவாசமாக இருப்பவர்கள். இவர்களுக்கு நண்பர்கள் குறைவாகவே இருப்பார்கள்.

7. மர்மமானவர்கள்: இவர்கள் மர்மமானவர்கள். தங்கள் ரகசியங்களை பிறரிடம் வெளிக்காட்ட மாட்டார்கள். இவர்களை அணுகிப் பேசத் தொடங்குவது பிறருக்கு கடினமான காரியமாக இருக்கும். ஆனால், பழக ஆரம்பித்து விட்டால் அவர்களுக்கு சிக்மா பெண்களை மிகவும் பிடித்துப் போய்விடும்.

இதையும் படியுங்கள்:
Fatty Liver பாதிப்பு இருப்பவர்களுக்கான சிறந்த 7 உணவுகள்! 
சிக்மா பெண்

8. புதுமை விரும்பிகள்: சவால்களை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள். புதிய அனுபவங்களை தேடுவதில் வல்லவர்கள். புதிய சூழ்நிலை, புதிய வேலை, சிரமமான சூழ்நிலை என எல்லாவற்றிலும் தங்களைப் பொருத்திக்கொள்வதில் வல்லவர்கள்.

9. சுய முன்னேற்றத்தில் ஆர்வம்: இவர்கள் தங்களது சுய முன்னேற்றத்தில் மிகவும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். இலக்குகளை அடைய கடுமையாக முயற்சி செய்வார்கள். தங்களை எப்போதும் மேம்படுத்திக்கொள்ள விரும்புவார்கள். தங்கள் இலக்கை அடைய எத்தனை வருடங்கள் ஆனாலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் வேலை செய்வார்கள்.

10. சமூக ஊடகங்கள் மீது ஆர்வமின்மை: இவர்கள் எப்போதும் சமூக ஊடகங்களை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. மற்றவர்களுடைய கருத்துக்களைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். அதனாலேயே அவர்கள் தங்கள் வாழ்வில் உயர்வதற்கு திட்டமிடவும், செயல்படவும் நிறைய நேரத்தை செலவிடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com