கொழுப்பு கல்லீரல் நோய் என்பது கொழுப்பு செல்களில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் ஏற்படும் ஒரு நிலையாகும். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கல்லீரல் முழுவதும் பாதிக்கப்பட்டு வீக்கம், வலி, பலகீனம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். கொழுப்பு கல்லீரல் நோயை நிர்வகிப்பதற்கு ஆரோக்கியமான உணவை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது. இந்த பதிவில் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட உகந்த உணவுகள் என்னவெனப் பார்க்கலாம்.
கீரைகள் மற்றும் காய்கறிகள்: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் கீரை வகைகளை சாப்பிடுவது நல்லது, குறிப்பாக சிலுவைகா காய்கறிகள் எனப்படும் ப்ரோக்கோலி, காலிபிளவர் போன்றவற்றை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்கள் கிடைக்கிறது. அவை வீக்கத்தைக் குறைக்கவும், கல்லீரல் நச்சுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகின்றன.
கொழுப்பு மீன்: கானாங்கெளுத்தி, சால்மன் மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கவும், கல்லீரல் கொழுப்பின் அளவை மேம்படுத்தவும் உதவுகின்றன. கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக்கொள்வது கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.
கிரீன் டீ: கிரீன் டீ அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக அறியப்பட்ட ஒன்றாகும். இது கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள கேடசின்கள் கல்லீரலில் உள்ள கொழுப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்கின்றன. கிரீன் டீ யை தவறாமல் உட்கொண்டு வந்தால் கல்லீரல் கொழுப்பு பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும்.
பூண்டு: பூண்டு, பல நூற்றாண்டுகளாக அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நச்சுக்களை வெளியேற்றும் கல்லீரல் என்சைங்களை செயல்படுத்த உதவும் சேர்மங்கள் இதில் உள்ளன. உங்கள் உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது கல்லீரல் கொழுப்பை குறைத்து கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பெர்ரி பழங்கள்: ஸ்ட்ராபெரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், கல்லீரலை பாதுகாக்க உதவும். எனவே உங்கள் உணவில் பல வகையான பெர்ரி பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப் பழங்கள் போன்ற சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி நிறைந்து காணப்படுகின்றன. அவை கல்லீரல் நச்சுத்தன்மையை சரிசெய்து கல்லீரல் கொழுப்பை குறைக்க உதவுகின்றன. கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்க தினசரி ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது நல்லது.
மஞ்சள்: மஞ்சளில் குறுக்குமின் என்ற கலவை உள்ளது, இது சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. மஞ்சளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் கல்லீரல் வீக்கத்தைக் குறைத்து கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்து உதவும்.
இத்தகைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கல்லீரல் கொழுப்பைக் குறைக்க முடியும். இதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதற்கு முன் ஒரு சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.