நாம் அளவுக்கு அதிகமாக சிந்திக்கிறோம் அல்லது அதீத சிந்தனையில் ஈடுபடுகிறோம் என்பதை பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. ஆனால், அளவுக்கு அதிகமான சிந்தனையின் விளைவாக நமது வளா்ச்சி தடைபடும் நேரத்தில் அல்லது நமது வாழ்க்கைப் பாதையில் அதீத சிந்தனை குறுக்கிடும்போது, நாம் அதை உணா்ந்து கொள்கிறோம். அதீத சிந்தனை என்பது ஒரு தீய பழக்கம் அல்ல. ஆனால், அளவுக்கு அதிகமாக சிந்திக்கும்போது நமது மூளை குழம்பி, நாம் தேவை இல்லாத செயல்களைச் செய்து கொண்டிருப்போம். ஆகவே, அதீத சிந்தனை அல்லது அளவுக்கு அதிகமாக சிந்திக்கும் பழக்கத்தை எவ்வாறு களையலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அதீத சிந்தனையை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
1. நாம் எவ்வாறு பதில் தருகிறோம் என்பதைக் கவனித்தல்: நமது சூழ்நிலைகளைப் பற்றி நாம் அதிகமாக சிந்திக்கும்போது, நாமும் சோ்ந்து அவற்றிற்கு பதில் தருகிறோம். நாம் எவ்வாறு பதில் தருகிறோம் மற்றும் எவற்றுக்கு எல்லாம் பதில் தருகிறோம் என்பதை கண்காணிக்க வேண்டும். நாம் தரும் பதில்கள் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக இருந்தால், அவை ஒரு சுழற்சியை உருவாக்கி, நமது நேரத்தை வீணடித்துவிடும். ஆகவே, அப்படிப்பட்ட பதில்களைத் தருவதில் இருந்து விடுபட வேண்டும்.
2. கவனச் சிதறல்களைக் கண்டுபிடித்தல்: அதீத சிந்தனை தானாகவே முடியாது. அதை நாம்தான் கட்டுப்படுத்த வேண்டும். ஆகவே, ஒன்றைப் பற்றி அளவுக்கு அதிகமாக சிந்திக்கும்போது அதிலிருந்து விடுபடுவதற்கு நமது கவனத்தை ஆக்கப்பூா்வமான செயல்திறன் கொண்ட வேறு ஒன்றிற்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு கவனத்தை திசை திருப்ப பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம்.
3. தியானத்தில் ஈடுபடுதல்: பெரும்பாலான மக்கள் அதீத சிந்தனையில் இருக்கும்போது, தியானத்தில் ஈடுபடுவதை விரும்புகின்றனா். ஏனெனில், தியானமானது அவா்களின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, முழுமையான இலக்கை நோக்கி சிந்திக்க உதவுகிறது. இரண்டாவதாக தியானம் நமது பதற்றத்தைத் தணிக்க உதவுகிறது. அதோடு, நமது வாழ்க்கைச் சூழல்களைப் பகுப்பாய்வு செய்து அதற்குத் தகுந்த பதில்களைத் தருவதற்கு உதவி செய்கிறது. எப்போதும் நமது மனதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவா்களின் கவனம் நமக்கு வரவேண்டும் என்பதற்காக பதற்றமடையக் கூடாது.
4. நல்ல நண்பரைக் கண்டுபிடித்தல்: நம்மோடு சோ்ந்து வெளியில் வருவதற்கு மற்றும் நம்மோடு தனது நேரத்தை செலவழிப்பதற்குத் தயாராக இருக்கும் ஒரு நல்ல நண்பரைக் கண்டுபிடிப்பது நல்லது. அது நமது அதீத சிந்தனையை நிறுத்துவதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கும். அடுத்தவரின் சுமையை எளிதாக்க முயற்சித்தால், நாம் விரும்பும் திசையில் நமது வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்த முடியும்.
5. இயல்பாக வரும் எதிர்மறை சிந்தனையை அறிந்து கொள்ளுதல்: அதீத சிந்தனை சில நேரங்களில் நல்லதுதான். ஆனால், நம்மிடம் இருக்கும் எதிர்மறையான சிந்தனைகள், நமது மனதில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி, பல வகையான மனநல பிரச்னைகளை ஏற்படுத்தும். இயல்பாக வரும் எதிர்மறை சிந்தனைகள் ஆங்கிலத்தில் நீ ஜொ்க்கிங் (knee-jerking) சிந்தனைகள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, தமிழில் முழங்காலை இழுக்கும் சிந்தனைகள் என்று சொல்லலாம். இயல்பாக வரும் எதிர்மறை சிந்தனைகள் என்பவை நம்முடைய பயம் அல்லது கோபம் அல்லது நம்முடைய அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளை உள்ளடக்கியவை ஆகும். இவை நமது வாழ்க்கைச் சூழலை மோசமாக்கி, நமக்குத் தூங்கா இரவுகளை வழங்கிவிடும்.
6. நிகழ்காலத்தில் கவனம் செலுத்துதல்: தியானம் செய்வதற்கும் மற்றும் இருக்கின்ற சூழலில் நலமோடு வாழ்வதற்கும், நிகழ்காலத்தில் வாழ வேண்டியது அவசியம் ஆகும். அதற்கு நாம் இசையையோ அல்லது பாடல்களையோ கேட்டு அதை அனுபவிக்கலாம். நமக்குப் பிடித்த சுவையான உணவுகளை உண்ணலாம். அவை நமது அதீத சிந்தனையில் இருந்து விடுபட உதவி செய்யும். மேலும், மெதுவாக வெளியில் நடந்து சென்று நமக்குப் பிடிக்கும் உணவுகளை உண்ணலாம். அதன் மூலம் அதீத சிந்தனைகளில் இருந்து விடுபடலாம்.