Feng fu Treatment
Feng fu Treatment

ஒரேயொரு ஐஸ் கட்டியை இந்த இடத்தில் வைத்தால், எத்தனை நோய்கள் தீரும் தெரியுமா?

Published on

ம் உடலின் ஒரு குறிப்பிட்ட பாகத்தில்  ஐஸ் கட்டியை வைப்பதின் மூலமாக எண்ணற்ற நோய்களை குணப்படுத்த முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இந்த சீன சிகிச்சை முறையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இது நம் உடலில் ஏற்படும் வலிகளைப் போக்கி நல்ல பலன்களைத் தரும். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

சீன மருத்துவத்தின்படி, நம் கழுத்துக்குப் பின்புறத்தில் தலையும், கழுத்தும் இணையும் பகுதியில் பள்ளம் போன்ற ஒரு அமைப்பு இருக்கும். இதற்கு பெயர் தான் ‘Feng fu’ ஆகும். இந்த சிகிச்சை செய்ய ஐஸ் கட்டி ஒன்றிருந்தால் போதுமானது. வயிறு தரையில் படும்படி படுத்துக்கொண்டு ஐஸ் கட்டியை இந்த Feng fu பகுதியில் 20 நிமிடம் வைக்க வேண்டும்.

அதற்கெல்லாம் நேரம் இல்லை, வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள். Feng fu பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒரு ஸ்கார்ப்பை வைத்து கட்டிக்கொண்டு அன்றாட வேலைகளை கவனிக்கலாம். இந்த இடத்தில் ஐஸ் கட்டியை வைக்கும்போது உடல் புத்துணர்ச்சி பெறும், உடலில் உள்ள நோய்கள் தீர்ந்து சக்தியை அதிகரிக்கும்.

அடிக்கடி ஏற்படும் தீராத  தலைவலி தீரும், பெண்களுக்கு வரும் Pre menstrual syndrome பிரச்னையால் ஏற்படும் வலியை குறைக்க உதவும், தைராய்டு பிரச்னையை சரிசெய்ய உதவும், தூக்கமின்மை போன்ற பிரச்னை இருக்கும் நபர்களுக்கு நன்றாக தூக்கம் வருவதற்கு இந்த சிகிச்சை உதவுகிறது.

இந்த சிகிச்சையை செய்வதன் மூலம் வயிற்றில் ஏற்படும் உப்புசம், அஜீரண பிரச்னைகளைப் போக்க உதவுகிறது. இதை செய்வதன் மூலமாக கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பில் உள்ள செல்களை நன்றாக செயல்பட வைக்கிறது.

குளிர்காலத்தில் சளி, ஜுரம் போன்றவை வருவது சகஜம்தான். இந்த சிகிச்சையை செய்வதன் மூலமாக அது எளிதில் குணமாவது மட்டுமில்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. கீழ்வாதத்தால் ஏற்படும் உடல் வலியை போக்க உதவுகிறது. உடலில் உள்ள Celluliteஐ நீக்குகிறது.

இதையும் படியுங்கள்:
நீங்க Tea பிரியரா? அய்யய்யோ ஜாக்கிரதை!
Feng fu Treatment

உடலில் உள்ள Endorphinsஐ அதிகரித்து ஸ்ட்ரெஸ்ஸை குறைக்க உதவுகிறது. நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து, புத்துணர்ச்சியான மனநிலையை உண்டாக்குகிறது. இந்த சிகிச்சையின் மூலம் நல்ல பலனைப் பெறுவதற்கு காலையில் வெறும் வயிற்றில் ஒருமுறையும், இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒருமுறையும் செய்வது சிறந்தது. எனவே, இந்த சிம்பிள் தெரபியை வீட்டிலேயே செய்து பயன் பெறுங்கள்.

logo
Kalki Online
kalkionline.com