தம்பதியருக்குள் ஆரஞ்சு தோல் கோட்பாடு ஏற்படுத்தும் விளைவுகள் தெரியுமா?

ஆரஞ்சு தோல் கோட்பாடு
ஆரஞ்சு தோல் கோட்பாடுhttps://www.wondermind.com
Published on

மூக ஊடகங்களில் பிரபலமான ஒரு கோட்பாடு ஆரஞ்சு தோல் கோட்பாடாகும். இது காதலர்கள் மற்றும் தம்பதியருக்கிடையேயான புரிதல், அன்பு பிரியம் இவற்றின் அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது.

எளிய பணி: ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிடுகையில் மாதுளம் பழம், அன்னாசி, சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலை உரிப்பது சற்றே கடினமான செயல். அவற்றிற்கு சிறிது நேரம் பிடிக்கும். ஆனால், ஆரஞ்சு பழத்தின் தோலை உரிப்பது என்பது மிகவும் எளிமையான ஒரு பணி. ஒருவருடைய காதலியோ காதலனோ அல்லது வாழ்க்கைத் துணையோ தனக்காக ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்து கொடுக்குமாறு கேட்கிறார். இதற்கு பலவிதமான ரியாக் ஷன்கள் வரலாம்.

பலவித பதில்கள்: மறுக்காமல் மனமுவந்து, உடனே ஆரஞ்சு பழத்தின் தோலை உரித்துத் தரலாம். அல்லது சிலர் முடியாது என எரிச்சலுடன் கூறலாம். ‘எனக்கு இப்போது நேரம் இல்லை. நீயே செய்து கொள்’ என்றும் சிலர் சொல்லலாம். இந்த சிறிய விஷயத்திற்கு நிறைய பதில்கள் வரலாம். அதற்கு ஏற்ப செயல்களும் அமையலாம்.

சிறிய செயல்; ஆழமான அன்பு: இந்தக் கோட்பாடு சிறிய விஷயங்கள் எவ்வாறு பிரியத்தையும் உறவையும் வலுப்படுத்த முடியும் என்பதை விளக்கும் ஒரு கருத்தாகும். ஆரோக்கியமான தம்பதிகளுக்கு இடையே அவர்கள் துணையை மகிழ்விக்க இதுபோன்ற சிறிய செயல்கள் கூட உதவக்கூடும். பரஸ்பர ஆதரவு, புரிதல், ஒருவருக்கொருவர் தேவைகளில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என உணர்த்துகிறது. தனக்குப் பிடிக்காத ஒரு செயலைக் கூட தன்னுடைய மனதுக்குப் பிடித்தவருக்கு செய்யும்போது அங்கே அன்பு மற்றும் அக்கறை முன்னே நிற்கிறது. இந்த தன்னலமற்ற தன்மை தம்பதியருக்கிடையே ஆழமான பிரியத்தையும் பாராட்டையும் வளர்க்கிறது.

சின்னச் சின்ன செயல்கள் தங்கள் துணையை மகிழ்விக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை செய்ய வேண்டும். சிறிய தியாகங்கள், அவர்கள் மனம் மகிழுமாறு செய்யக்கூடிய விஷயங்கள் உணர்ச்சிப் பிணைப்பை வலுப்படுத்துகிறதுதான். அவர்களின் மகிழ்ச்சிக்காக சிறிய விஷயங்களில் கூட கவனம் வைத்து செய்கிறோம் என்பதை காட்டுவதாக இது இருக்கிறது.

நம்பகத்தன்மை: ஆரஞ்சு தோல் உரிப்பது போன்ற சிறிய அக்கறை உள்ள செயல்களை தொடர்ந்து செய்வது தம்பதியருக்கிடையே அல்லது காதலர்களுக்கு இடையே அக்கறையை வளர்கிறது. நம்பிக்கையை வளர்க்கிறது. வாழ்க்கை இனிமையாக, மகிழ்ச்சியாக அமைய தனது துணை என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதற்கான ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
சியா விதைகளை மூலிகை டீயுடன் சேர்த்து அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
ஆரஞ்சு தோல் கோட்பாடு

அன்பின் வெளிப்பாடு: தான் தனது துணையின் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துவதற்கு வெறும் வாய் வார்த்தைகளால் சொல்வது பத்தாது. அதற்கு பதிலாக சிறிய சிறிய செயல்கள் மூலம் அந்த அன்பை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். இது ஒட்டுமொத்த மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு பங்களிக்கிறது.

நன்றியும், கருணையும்: தன்னுடைய துணை தனக்காக செய்யும் சிறிய விஷயங்களுக்காக அவர்களை அங்கீகரித்து நன்றி சொல்ல வேண்டும். இது நேர்மறையான நடத்தையை வலுப்படுத்துகிறது. மேலும், கருணை செயல்களை ஊக்குவிக்கிறது.

சிறிய செயல்கள் மூலம் தனது துணையின் தேவைகள் மற்றும் வசதிகளைப் பற்றி சிந்திக்கிறீர்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. காலப்போக்கில் இந்த சிறிய அன்பான செயல்கள் மூலம் துணையினால் மதிக்கவும், ஆழமாக நேசிக்கவும்படுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com