சியா விதைகளை மூலிகை டீயுடன் சேர்த்து அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!


மூலிகை டீ - சியா விதைகள்
மூலிகை டீ - சியா விதைகள்
Published on

மூலிகை டீ அதன் இதமளிக்கும் குணம், வாசனையுடன் கூடிய சுவை, அதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் போன்ற பலவித காரணங்களுக்காக அனைவராலும் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். இந்த மூலிகை டீயுடன் சியா விதைகளை சேர்த்து அருந்தும்போது அதிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்களின் அளவும் ஆரோக்கிய நன்மைகளும் பல மடங்கு அதிகரிக்கும். அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

1. சியா விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல கனிமச் சத்துக்களும் உள்ளன. இந்த விதைகளை மூலிகை டீயுடன் சேர்க்கும்போது, ஒரு சாதாரண டீ, ஊட்டச் சத்துக்களின் 'பவர் ஹவுஸ்' ஸாக மாறிவிடும். இந்த காம்பினேஷன் உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

2. சியா விதைகளில் உள்ள அதிகளவு நார்ச்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கியிருந்து பசியுணர்வை தள்ளிப்போகச் செய்யும். சியா விதைகளை மூலிகை டீயுடன் சேர்க்கும்போது அது அதிகளவு நீரை உறிஞ்சிக்கொண்டு தன் அளவை பல மடங்கு பெரிதாக்கி ஒரு ஜெல் போன்ற நிலைக்கு வந்து விடும். இந்த ஜெல்லும் வயிற்றில் அதிக இடத்தை நிரப்பி, வேறு உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தடுத்துவிடும். இதனால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு குறைந்து, சம நிலையில் எடையைப் பராமரிக்கவும் முடியும்.

3. இதிலுள்ள கரையக்கூடிய  நார்ச்சத்தானது செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும். சியா விதைகளை மூலிகை டீயுடன் கலந்து உட்கொள்ளும்போது குடல் இயக்கங்கள் சீராக நடைபெற்று மலச்சிக்கல் உண்டாகும் அபாயம் நீங்கும். சியா விதைகள் நீரில் ஊறுவதால் உற்பத்தியாகும் ஜெல் போன்ற பொருளும் செரிமானம் நல்ல முறையில் நடைபெற உதவும்.

4. சியா விதைகள் மூலிகை டீக்கு ஒரு தனித்துவமான டெக்ச்சரை (texture) உண்டுபண்ணித் தரும். திரவத்தில் ஊறுவதால் உண்டாகும் ஒருவித இனிய ஜெலட்டின் தன்மை, சியா விதைகள் சேர்த்த மூலிகை டீ அருந்துபவர்களுக்கு அதிகளவு திருப்திகரமான உணர்வையும், உற்சாகத்தையும் தரும்.

5. சியா விதைகளிலுள்ள அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்சைக் குறைத்து வீக்கங்கள் குறைய உதவும். மூலிகை டீயுடன் சேர்த்து இதை உட்கொள்வதால் இது உடலின் ஃபிரீரேடிக்கல்களின் அளவை சமநிலைப்படுத்தி உடலின் மொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும்.

6. சியா விதைகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும். இவை  இதயத்தில் உண்டாகும் வீக்கங்களைக் குறைக்கும்; அதிக அளவில் இருக்கும் கொலஸ்ட்ராலையும் சமநிலைப்படுத்தும். இதய இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதால் இது ஒரு ஹார்ட் ஹெல்த்தி டயட்டாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
எதற்காக Deodorants பயன்படுத்துகிறோம் தெரியுமா?

மூலிகை டீ - சியா விதைகள்

7. சியா விதை ஒரு திரவத்துடன் சேரும்போது அதன் எடையைப் போல் இருபது மடங்கு நீரை தன்னுள் உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் நம் உடலின் தேவைக்கேற்ப அந்த நீரை வெளியேற்றி உடலில் நீர்சத்து குறையாமல் பாதுகாக்கவும் உதவி புரியும்.

8. சியா விதைகளில் உள்ள அதிகளவு நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் உதவும். இதை மூலிகை டீயுடன் சேர்த்து சாப்பிடும்போது சக்தியின் அளவு அதிகரிக்கும்.

9. சியா விதையானது எந்த வகை உணவுப் பொருள்களோடும் இணைந்து செயலாற்றும் தனித்துவ குணம் கொண்டது. ஆதலால் இதை, இஞ்சி டீ, கெமோமைல், பெப்பர்மின்ட், ரூயிபாஸ்  போன்ற எந்த வகை மூலிகை  டீயுடனும் சேர்த்து உட்கொள்ளலாம்.

ஊட்டச் சத்துக்களின் அளவை அதிகரிப்பது, இதய நலம் காப்பது, செரிமானத்தை சிறப்பாக்குதல், நீரேற்றம் தருவது, இரத்த சர்க்கரை அளவை நிர்மாணித்தல் போன்ற பல தரப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடிய சியா விதைகளை அடுத்த முறை மூலிகை டீ தயாரிக்கும்போது கவனத்தில் கொண்டு டீயுடன் சேர்த்து பருகி கூடுதல் சுவையும் நன்மைகளும் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com