Do you know the gray rock method to help you deal with a person who is bothering you?
Do you know the gray rock method to help you deal with a person who is bothering you?https://tamil.goodreturns.in/

உங்களுக்கு தொல்லை தரும் நபரை சமாளிக்க உதவும் சாம்பல் பாறை முறை பற்றி தெரியுமா?

நாம் தினமும் பலவிதமான குணங்களை உடைய மனிதர்களை சந்திக்கிறோம், பழகுகிறோம். அவர்களில் சிலர் உங்களுக்கு தொல்லை தருபவராகவோ, அவமானப்படுத்துபவராகவோ வார்த்தையாலும் செயலாலும் காயப்படுத்துபவராகவோ இருக்கலாம். இப்படிப்பட்ட நபர்களை சமாளிக்க உதவும் ஒரு நவீன டெக்னிக் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

உங்களை எரிச்சலூட்டும் நபர்கள் உங்கள் நண்பராகவோ, வகுப்பு தோழராகவோ, அலுவலகத்தில் சக பணியாளராகவோ, ரூம் மேட் ஆகவோ அல்லது உறவினராகவோ கூட இருக்கலாம். இவர்களை நாம் முழுவதுமாக நமது வாழ்விலிருந்து நீக்க முடியாது. ஆனால், அவர்கள் நமக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டே, எரிச்சல் படுத்தும்படி நடந்து கொண்டு, அவமானப்படுத்திக் கொண்டும் இருந்தால் அவர்களை சகித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்களை சமாளிக்க உதவும் நவீன உத்திதான் சாம்பல் பாறை முறை (Grey rock Method).

சாம்பல் பாறை முறை என்றால் என்ன?

எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தேமே என்று சாலை ஓரத்தில் சாம்பல் நிறத்தில் பாறைகள் வீற்றிருக்கும். சுற்றிலும் என்ன நடந்தாலும் அதைப் பாதிக்கப்போவதில்லை. அதுபோல உங்களை ஒருவர் எரிச்சலூட்டும் போது, வார்த்தையால், செயலால் துன்புறுத்தும்போது பதிலுக்கு கத்துவதோ உணர்ச்சிவசப்படுவதோ கூடாது. அதற்குப பதில் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல், அவரை சமாளிப்பதே சாம்பல் பாறை முறையாகும்.

காயப்படுத்தும் நபரின் நோக்கம்: உங்களை எரிச்சல் ஊட்டும் நபரின் முக்கிய நோக்கமே, நீங்கள் உணர்ச்சிபூர்வமாக அழுவது அல்லது வருத்தப்படுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர் மனம் மகிழும். அதற்காகத்தான் இதைச் செய்கிறார். பலர் கூடியுள்ள இடத்திலும் அவர் உங்களை அவமானப்படுத்தத் தயங்க மாட்டார். ஆரம்பத்தில் மிகவும் அன்பானவராகவும் உங்கள் மேல் அதிக அக்கறை உள்ளவர் போலவும் நடந்து கொண்டு நீங்கள் அவரிடம் சற்றே நெருங்கி பழகும்போது தன்னுடைய சுய ரூபத்தை வெளிப்படுத்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்.

அவர் பிறரிடம் எதிர்மறையான உணர்வுகளை திணிப்பார். ஒரு நாடகப்பூர்வமான காட்சியை பார்ப்பதில் அவருக்கு ஆனந்தம் அதிகம். அவர்களுடைய முக்கிய நோக்கமே உங்களை எந்த விஷயத்திலும் கவனம் செய்ய விடாமல் தடுப்பதுதான். அப்படிப்பட்ட சமயத்தில் அவர்களை குழப்பத்தில் அழுத்துவது போல சரியாக ரெஸ்பான்ஸ் செய்யாமல் விட்டால் அவர் எதிர்பார்த்த விளைவுகள் இல்லாதபோது, வெறுத்துப் போய் உங்களை விட்டு விலகி விட்டு வேறொருவரை நாடிச் சென்று விடுவர்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் காலணிகள் பயன்படுத்தலாமா? பெண்களுக்கான வீட்டுக் காலணிகள் எவை?
Do you know the gray rock method to help you deal with a person who is bothering you?

இந்த முறையை பயன்படுத்தும் வழிகள்:

1. அவர்கள் சொல்லும் எந்த விதமான பேச்சுக்கும் அதிர்ச்சியாக அல்லது அதிக ரியாக் ஷன் காட்டாமல் இருப்பது.

2. அவர்கள் ஏதாவது கேட்டால் மிக மிக சுருக்கமாக பதில் அளிப்பது. அந்த உரையாடலை நீட்டிக்காமல் குட்டியாக பதில் சொன்னால் அவர்கள் பேச்சை நிறுத்தி விடுவார்கள்.

3. ‘எனக்கு இத பத்தி என்ன சொல்றதுன்னு தெரியல’, ‘நீங்க சொல்றத கேட்க எனக்கு டைம் இல்ல’, ‘சாரி அவசரமான ஒரு வேலை இருக்கு, அப்புறமா பார்க்கலாம்’ போன்றவற்றை பிரயோகிக்கலாம்.

4. உங்களைப் பற்றிய சுவாரசியமான அல்லது வெற்றிகரமான தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே கூடாது.

5. அவர்களுடன் பேசும்போது நேருக்கு நேர் கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்க்க வேண்டும். அதனால் உணர்ச்சிப்பூர்வமான உரையாடலை தவிர்க்க முடியும்.

6. உங்களுக்கு வேலையே இல்லை என்றாலும் கூட அவர்களுடன் பேசுவதை தவிர்ப்பதற்காக, ‘எனக்கு முக்கியமான வேலை இருக்கு, சாரி’ என்று சொல்லிவிட்டு அவர்களை கட் செய்வது சிறந்தது.

7. அவர்களுடனான உறவை மொத்தமாக துண்டித்துக்கொள்வது. இல்லையெனில் மிகக் குறைந்த அளவே பழகுவது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com