வீட்டில் காலணிகள் பயன்படுத்தலாமா? பெண்களுக்கான வீட்டுக் காலணிகள் எவை?

Can we use shoes at home? What are house shoes for women?
Can we use shoes at home? What are house shoes for women?https://stock.adobe.com/

முன்பெல்லாம் வீட்டிற்குள் காலணிகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது ஒரு வழக்கமாகவே இருந்தது. ஏன். இன்னும் கூட அந்த வழக்கம் சில இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக நம் நாட்டில், மக்கள் தங்களது வீட்டை ஒரு கோயிலாக எண்ணிவரும் நிலையில், அந்த கோயிலுக்குள் எப்படி காலணி அணிந்து செல்வது என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கும்.

வீட்டைக் கோயில் என எண்ணுபவர்கள் இன்னும் வீட்டில் காலணியைத் தவிர்க்கிறார்கள். ஆனால் அதை அறிவியலாகப் பார்ப்பவர்கள் அதற்கேற்ற ஒரு விடையை கண்டறிந்தார்கள். ஆம்! வீட்டில் பயன்படுத்துவதற்கென்று காலணிகள் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். வெளியில் செல்லும்போது வேறு காலணிகளும் வீட்டில் வேறு காலணிகளும் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வீட்டிற்குள் காலணி அணிவது நல்லதா?

வீட்டில் வேறு, வெளியில் செல்லும்போது வேறு என இரு காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். இது வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது உண்மைத்தான். ஆனால் எப்போதும் காலணிகள் பயன்படுத்துவதால் கால்களுக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா என்ற பயம் ஏற்படுவது இயல்பே. நாம் வெளியில் செல்லும்போதும் ஷூ போன்ற காலணிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் வீட்டில் எப்போதும் மென்மையான, காலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத காலணி அணிவது அவசியம். இதற்கு Fur காலணி பயன்படுத்துவது நல்லது.

சாக்ஸ் அணிவது நல்லதா?

சாக்ஸை விட செப்பல் அணிவதே நல்லது என பாத மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது பேக்டிரியா, ஃபங்கை ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும். சாக்ஸ் அணிந்தால் கோடைக் காலங்களில் வேர்வையால் கால்களுக்குப் பாதிப்பு உண்டாகும். அதேபோல் குளிர்க்காலங்களில் ஃபங்கஸ் வர வாய்ப்புள்ளது. கால் தெரியாமல் எதன் மீதாவது மோதிக்கொண்டால் சாக்ஸால் காயம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. ஆனால் செப்பல் அடிப்படுவதிலிருந்து தடுக்கும்.

வீட்டில் வெறும் காலில் நடந்தால் என்னவாகும்?

தரையில் காலணி அணியாமல் நடப்பதுதான் பெரும்பாலானவர்களுக்கு பாதத்தில் வெடிப்பு ஏற்படக் காரணமாகிறது. அதேபோல் கணுக்கால் வலி, பாத எரிச்சல் ஆகியவையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

காலணி அணிந்து தூங்கலாமா?

தூங்கும்போது காலணி அணிவதைத் தவிர்க்கவும். பகல் முழுக்க காலணி பயன்படுத்துவதால் இரவில் பாதங்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்.

ரப்பர் காலணி பயன்படுத்தலாமா?

ரப்பர் காலணி அணிவதால் உராய்வு ஏற்பட வாய்ப்புண்டு. அதிக நேரம் பயன்படுத்தினால் ரப்பர் செருப்பு கடிக்க ஆரம்பித்துவிடும்.

வீட்டில் க்ராக்ஸ் பயன்படுத்தலாமா?

க்ராக்ஸ் எடை குறைவாகவும், வசதியாகவும், காற்றோடத்துடனும் இருக்கும். ஆனால் அதனை அதிக நேரம் பயன்படுத்த முடியாது. 

பாத்ரூமில் செப்பல் அணியலாமா?

பொதுவாக செப்பல் பாத்ரூமில் அணிந்தால் வழுக்கிவிட வாய்ப்புள்ளது என்பதால் அணிவதை தவிர்த்து வந்தனர். ஆனால் இப்பொழுது அதற்கான காலணிகள் வந்துவிட்டன. பாத்ரூமிற்கு மட்டும் ரப்பர் அல்லது Synthetic காலணிகளைப் பயன்படுத்தலாம்.

https://www.shoezone.com/

உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள் செப்பல் பயன்படுத்தலாமா?

உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள் குறிப்பிட்ட செப்பல் வகைகள்தான் பயன்படுத்த வேண்டும். Vetiver sandal காலணி பயன்படுத்துவது நல்லது.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் செப்பல் அணிவது அவசியமா?

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தங்கள் பாதங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆகையால் அவர்கள் கட்டாயம் காலணி அணிய வேண்டும்.

எந்த காலணி தினமும் வீட்டில் அணிவது நல்லது?

Flip flop காலணி பாத வலிகளைப் போக்கும். அணிவதற்கு எளிமையாகவும் இருக்கும். ஆகையால் இந்த வகை காலணி வீட்டில் அணிவது மிகவும் நல்லது. அதேபோல் குளிர்க்காலங்களில் Fur காலணிகள் பயன்படுத்தலாம்.

இனி, வீட்டில் அணியக்கூடிய காலணி வகைகள் பற்றிப் பார்ப்போம்.

Drunken Slides: இந்த வகையான காலணிகள் குளிர் காலங்களில் பயன்படுத்தப்படும் ஒன்று. இந்த காலணி மென்மையாகவும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். Drunken காலணியில் மேல் உள்ள உரோமங்கள் குளிருக்கு இதமாக வைத்துக்கொள்ளும்.

Orthopaedic slipper: Orthopaedic காலணிகள் வயதான பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும். இது பொதுவாக மருத்துவரால் அறிவுறுத்தப்படும் ஒரு காலணி. இது எத்திலின் வினில் அசிடேட்டால் செய்யப்பட்ட காலணி என்பதால் மிகவும் மென்மையாகவும் இருக்கும். மேலும் பாத வலி கால் வலி உள்ளவர்கள் எந்த காலங்களிலும் பயன்படுத்தக்கூடிய ஒன்று.

Flight Flip Flop: இது பெண்கள் தினமும் வீட்டில் பயன்படுத்திக்கொள்வதற்கு மிக மிக ஏற்ற காலணி. இது மிகவும் வசதியாகவும் நீண்ட நாட்கள் உழைக்கூடியதாகவும் இருக்கும். இது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும் என்பதால் வீட்டில் மட்டுமல்லாமல் வெளியில் செல்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். Flip Flop காலணிகள் பாதத்துக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பதால் வீட்டில் எப்போதும் அணிவதற்கு எளிதாக இருக்கும்.

Woollen Carpet Slippers: நீங்கள் அணியும் காலணி தரையை சேதப்படுத்துகிறதா? அப்போது நீங்கள் இந்த காலணியைப் பயன்படுத்தலாம். இது ரப்பரால் செய்யப்பட்ட காலணி என்பதால் மென்மையாகவும் அனைத்து விதமான தரைகளும் பாதுகாப்பாக இருக்கும். இந்த காலணிகளும் உரோமங்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் பார்ப்பதற்கு அழகாகவும் மென்மையாகவும் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
ஒமேகா ஆண்கள் ஆல்ஃபா ஆண்களை விட சிறந்தவர்களாகக் கருதப்படுவதன் காரணம் தெரியுமா?
Can we use shoes at home? What are house shoes for women?

Neeman’s Eco Flip Flop: இது ட்ரெண்டிங்கில் இருக்கும் பெண்களுக்கான காலணி. இது மறுசுழற்சி முறையிலும் செய்யப்பட்டு பயன்படுத்தலாம். இது இயற்கை ரப்பர், எண்ணெய் ஆகியவற்றால் செய்யக்கூடியது என்பதால் வீட்டிற்கு மட்டுமல்ல வெளியில் செல்வதற்கும் பயன்படுத்தலாம். சிவப்பு நிறம் கொண்ட Neeman’s flip flop ரப்பர் காலணி மென்மைகயாகவும் கால்களுக்கு வசதியாகவும் இருக்கும்.

Women Fur slides: இந்த வகையான காலணிகளும் அழகாகவும் காலகளுக்கு வசதியாகவும் இருக்கும். அதேபோல் அந்த காலணியின் மேல் ஹார்ட் வடிவம் இருக்கும். இது பெண்களைக் கவரக்கூடியதற்கு ஒரு காரணம் என்றும் கூறலாம். குளிர்க்காலங்களில் கால்களுக்கு இதமான ஒரு காலணியாக இருக்கும். மேலும் டீ ஷர்ட் மற்றும் பைஜாமாவிற்கு இந்த வகையான காலணி அணிவது நன்றாக இருக்கும்.

எந்த வகையான காலணி வீட்டில் அணிவது நல்லது?

Flip flop காலணி பாத வலிகளைப் போக்கும் மற்றும் அணிவதற்கு எளிமையாகவும் இருக்கும். ஆகையால் இந்த வகை காலணி வீட்டில் அணிவது மிகவும் நல்லது. அதேபோல் குளிர்க்காலங்களில் Fur காலணிகள் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com